Published:Updated:

"சாதிவெறி பிடிச்ச பொண்ணுன்னு விமர்சிக்கிறது கஷ்டமா இருக்கு" - சர்ச்சை கருத்து பற்றி பிரிகிடா

பிரிகிடா

“அரெஸ்ட் பிரிகிடா என்று ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்கைப் பார்த்தபோது சொல்லவே முடியாத வலி மனதில் ஏற்பட்டது. அழுதுகொண்டே இருந்தேன். என் அப்பா ஒரு சமூக ஆர்வலர். எல்லோரும் சமம் என்று சிறுவயதிலிருந்தே எனக்கு சொல்லிக்கொடுத்துதான் வளர்த்துள்ளார்"

"சாதிவெறி பிடிச்ச பொண்ணுன்னு விமர்சிக்கிறது கஷ்டமா இருக்கு" - சர்ச்சை கருத்து பற்றி பிரிகிடா

“அரெஸ்ட் பிரிகிடா என்று ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்கைப் பார்த்தபோது சொல்லவே முடியாத வலி மனதில் ஏற்பட்டது. அழுதுகொண்டே இருந்தேன். என் அப்பா ஒரு சமூக ஆர்வலர். எல்லோரும் சமம் என்று சிறுவயதிலிருந்தே எனக்கு சொல்லிக்கொடுத்துதான் வளர்த்துள்ளார்"

Published:Updated:
பிரிகிடா
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று ஒருபக்கம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில்தான், இப்படத்தில் நடித்த பிரிகிடாவின் பேட்டி ஒன்று சர்ச்சையில் திண்டாடிக்கொண்டிருக்கிறது.

”அவ்ளோ கெட்ட வார்த்தை யூஸ் பண்ணக்கூடாதுதான். இந்தக் கதையே என்னன்னா, ஒரு சிங்கிள் மேன். அவனோட லைஃப்ல கெட்டது மட்டுமே நடந்துருக்கு. இப்போ, ஒரு சேரிக்கு போனோம்னா அந்தமாதிரி வார்த்தைகளைத்தான் கேட்கமுடியும். அதை மாற்றி ரொம்ப சினிமாவுக்காக ஏமாத்தல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும். அங்க எப்படி பேசுவாங்கன்னு. அந்த மாதிரி சில விஷயங்கள்லாம் இந்த படத்துல இருக்கு. அதை தவிர்க்கமுடியாது" என்று நடிகை பிரிகிடா ஊடகங்களிடம் பேசியதுதான் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரிகிடாவின் கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பரவிக்கொண்டிருக்கும் சூழலில், பிரிகிடாவை தொடர்புகொண்டோம். கடுமையான மன உளைச்சலுடன் நம்மிடம் பேசினார்.

உங்களின் பேச்சு சாதிவெறியோடு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறதே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என்னை சாதிவெறிபிடித்தப் பொண்ணுன்னு விமர்சிப்பது ரொம்பவே கஷ்டமா இருக்கு. நிஜமா நான் அந்த நோக்கத்தில் பேசவில்லை. அவ்ளோ பெரிய ஆளும் கிடையாது. அந்தளவுக்கான நாலேஜும் எனக்கு இல்லை. ‘இரவின் நிழல்’ ஸ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நிறைய லொகேஷன்கள் வருகின்றன. லொகேஷன்கள் சேஞ்ச் ஆக, சேஞ்ச் ஆக மொழியும் சேஞ்ச் ஆகும். அதைத்தான், ரொம்ப ராவா இருக்கும் என்று சொல்ல வந்து ஸ்லம்மை உதாரணமாக சொல்லிவிட்டேன். இன்னும் இரண்டு உதாரணங்களை சேர்த்து சொல்லியிருந்தால் அப்படி தவறாக மாறியிருக்காது. நான் சொல்லாமல் விட்டது தவறு. அதற்காக, நான் தப்பாவும் பேசியிருக்கக்கூடாது. தெரியாம பேசிட்டேன். சம்பந்தப்பட்ட மக்கள் என்னை மன்னிக்கவேண்டும். மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. நான் உதவும் குணம் கொண்ட ரொம்ப எமோஷலான பொண்ணு. யாரையும் கஷ்டப்படுத்தணும்னு நினைக்கமாட்டேன். என் வாயில் இருந்து இப்படி வந்துவிட்டதே என்ற வருத்தமே ஏற்படுகிறது”.

இரவின் நிழல்
இரவின் நிழல்

இப்படி பேசியதற்காக உங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பாய வாய்ப்பிருக்கிறதே?

“அரெஸ்ட் பிரிகிடா சகா என்று ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்கைப் பார்த்தபோது சொல்லவே முடியாத வலி மனதில் ஏற்பட்டது. இதற்காக, எத்தனை மன்னிப்பு வேண்டுமென்றாலும் கேட்டுக்கொள்கிறேன். இது என் வாழ்க்கையின் முதல் படம். இதிலேயே, இப்படி ஆனது தாங்கமுடியவில்லை. என்னுடைய முழு சந்தோஷம் ஒருநாள் முன்னாடி ஆரம்பித்தது. அதனை முழுதாக அனுபவிக்க முடியவில்லை. இப்போது, மதுரையில் இருக்கிறேன். மதியத்திலிருந்து அழுதுகொண்டேதான் இருக்கிறேன். சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்துல வருத்தமா இருக்கேன். அப்படி பேசியதற்கு என்மீதுதான் எனக்கு கோபம்”.

சரி... அந்த நோக்கத்தில் சொல்லவில்லை என்றால் பூர்வக்குடிகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

“நான் பல்லாவரம் பொண்ணு. லயோலா கல்லூரியில்தான் விஸ்காம் படிச்சேன். அங்குப் படித்தவர்களில் அந்தப் பகுதியிலிருந்து வந்தவர்கள்தான் எனக்கு நண்பர்களாகவும் இருக்கிறார்கள். சரியோ தப்போ எதையும் வெளிப்படையாக முகத்திற்கு நேராக பேசுவார்கள். ஒட்டுமொத்த மக்களின் முன்னேற்றத்திற்கும் பேசுபவர்கள், அவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். கல்லூரியில் மாணவர்களுக்கு சிலம்பமும் கற்றுக்கொடுக்கிறார்கள். யாருக்கு எந்த உதவி என்றாலும் முன்னே வந்து நிற்பவர்கள். ரொம்ப அன்பானவர்கள். அவர்களிடம், இருந்துதான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். உண்மையை மட்டுமே பேசக்கூடிய மக்கள். இதையெல்லாம் பார்த்து வந்த எனக்கு எப்படி அவர்களை தாழ்த்திப் பேசவேண்டும் என்ற நினைப்பு வரும்?. எந்த நோக்கத்திலும் அப்படி பேசவில்லை. இதற்கே, என் அப்பா ஒரு சமூக ஆர்வலர். ஸ்டூடண்ட்ஸ்களுக்கு உதவுவதோடு ஸ்டூடண்ட்ஸ் கவுன்சிலராகவும் உள்ளார். எல்லோரும் சமம் என்று சிறுவயதிலிருந்தே எனக்கு சொல்லிக்கொடுத்துதான் வளர்த்துள்ளார். அந்த எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் பேசிய அந்த வீடியோவைப் பார்த்தபோது எனக்கே தவறாகத் தெரிந்தது".

படத்தின் விளம்பரத்திற்காக அப்படி பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறதே?

பிரிகிடா
பிரிகிடா

“இல்லவே இல்லை. நாங்கள் தினமும் தியேட்டர் விசிட் சென்றுகொண்டிருக்கிறோம். அன்றும் அப்படித்தான். வேறொரு தியேட்டருக்குச் செல்லவேண்டியிருந்தது. நேரம் குறைவாக இருந்ததால் என்னால் இன்னும் இரண்டு உதாரணம் சொல்ல முடியாமல் போய்விட்டது. கண்டிப்பாக சொல்லியிருந்தால் தவறாக புரிந்திருக்கமாட்டார்கள். என்னோட பகுதி ஆந்திராவில் எடுக்கப்பட்டது. ‘இரவின் நிழல்’ பார்த்தவர்களுக்குப் புரியும். பார்க்காதவர்கள் கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும். நான் இப்படி பேசினது என்னாலேயே மன்னிக்க முடியாத விஷயமா இருக்கு. இப்படியெல்லாம் அடுத்தவரின் மனதை கஷ்டப்படுத்திதான் படத்திற்கு விளம்பரம் தேடவேண்டும் என்று நினைக்கவில்லை. என் திறமையின் மூலமே பாராட்டை பெறவேண்டும் என்று நினைக்கிறேன்”.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பார்த்திபன் என்ன சொன்னார்? இப்படி பேசக்கூடாது என்று யாராவது அட்வைஸ் செய்தார்களா?

“யாரும் அட்வைஸ் செய்யவில்லை. அப்படி பேசியது தவறு என்று எனக்கே தெரியும். பார்த்திபன் சார் “எப்படி நீங்க இப்படி பேசலாம்… இப்படி பேசிட்டீங்களே. டைம் ஆனாலும், விரிவாக சொல்லிட்டே வந்திருக்கலாமே” என்று ரொம்பவே வருத்தப்பட்டார். நிச்சயமா சொல்வேன். எனக்கு சாதிவெறி கிடையாது. சேரி என்ற வார்த்தையை யூஸ் பண்ணதுக்கு ரொம்ப கஷ்டப்படுறேன். எல்லோரும் என்னை மன்னிக்கனும்".