Published:Updated:

“நான் 50 வயசு ஹீரோ!”

சாம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சாம்ஸ்

எனக்கும் ரொம்ப நாளா இம்சை அரசன் 23-ம் புலிகேசிபோல ஒரு படத்துல காமெடி ஹீரோவா நடிக்க ஆசை

“நான் 50 வயசு ஹீரோ!”

எனக்கும் ரொம்ப நாளா இம்சை அரசன் 23-ம் புலிகேசிபோல ஒரு படத்துல காமெடி ஹீரோவா நடிக்க ஆசை

Published:Updated:
சாம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சாம்ஸ்

காமெடி நடிகர்கள் ஹீரோக்கள் ஆகும் காலம் இது. லேட்டஸ்ட் வரவு, நடிகர் சாம்ஸ். போரூரில் இருக்கும் அவரைத் தேடி வீட்டுக்குப் போனால், `டான்ஸிங் ரோஸ்’ கணக்காக ஆடிக்கொண்டே ‘டான்ஸிங் குக்’காக சமையலறையில் பிஸியாக இருந்தார்.

``வாடகை வீடுதான் சார். ஆனா, இந்த ஏரியா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதான் ஜாகைய மாத்தலை. இந்த லாக்டௌன் உபயத்தால நல்ல குக்கா மாறிட்டேன். நல்லா பாடவும் கத்துக்கிட்டேன். கேக்குறீங்களா... கிதார் கம்பி மேலே நின்னு...!’’ - மனிதர் முகசேட்டைகளில் சார்லி சாப்ளினை ஞாபகப்படுத்துகிறார்.

யோஹன்
யோஹன்
“நான் 50 வயசு ஹீரோ!”

“ஏன் என்னாச்சு... காமெடி வாய்ப்பு குறைஞ்சிடுச்சா..? இல்லை உங்களுக்கும் ஹீரோ ஆசை வந்திருச்சா?”

“கடவுள் புண்ணியத்துல சின்னச்சின்னதா காமெடி ரோல் நிறைய படங்கள் பண்ணிட்டுதான் இருக்கேன். கிரேஸி மோகன் சாரோட பட்டறையில இருந்து வந்ததால இன்னும் என்னோட காமெடி சென்ஸ் வற்றல.

நீங்க கேட்ட இதே கேள்வியைத்தான் நான் இந்தப் படத்தோட டைரக்டர் அருண் காந்திடம் கேட்டேன். எனக்கும் ரொம்ப நாளா இம்சை அரசன் 23-ம் புலிகேசிபோல ஒரு படத்துல காமெடி ஹீரோவா நடிக்க ஆசை. ஹாலிவுட்ல ஜிம் கேரி, மிஸ்டர் பீன் போல பண்ணலாம்னு ரொம்ப நாள் ஆசை. வாய்ப்பு அமையாம இருந்துச்சு. அருண் காந்த் என்னைக் காமெடியனா வெச்சு இரண்டு படங்கள் கொடுத்தவர். அவராத்தான் வந்தார். ‘இதுல முதல் ரிஸ்க்...வாழக்கா பஜ்ஜி மாதிரி மூஞ்சிய வெச்சிருக்கேன். நான் பஞ்ச் டயலாக்கோ சீரியஸ் டயலாக்கோ பேசினால் கபால்னு தியேட்டர்ல சிரிச்சிடுவாங்க தம்பி’ன்னு சொன்னேன். `இரண்டாவது ரிஸ்க்... எனக்கு என்ன மார்க்கெட் இருக்கு? என்னை நம்பிப் பத்து ரூபாய் போட்டா பத்து ரூபாய் ஐம்பது காசாவது உனக்குக் கிடைக்கணும். கிடைக்காது... அப்புறம் ஏன் ரிஸ்க்’னு கேட்டேன்.

டைரக்டர் வயசுல சின்னவரா இருந்தாலும் செம அறிவான ஆளு. உலக சினிமாக்களை மிக்ஸில போட்டு ஜூஸாக்கிக் குடிச்சவர். அவர்தான் படத்தோட தயாரிப்பாளரும்கூட!

‘ஹலோ, மார்க்கெட் பத்திலாம் ஏன் நீங்க யோசிக்கிறீங்க? சும்மா ஒரு படமாச்சும் இப்படி நடிச்சித்தான் பாருங்களேன். பணம் போடுற நானே உங்க மேல நம்பிக்கை வெச்சிருக்கேன். வாயை மூடிட்டு ஷூட்டிங்குக்கு வாங்க சார்!’னார். ஷூட்டிங் ஸ்பாட் போயி முதல் ஃப்ரேம் வெச்சதும் புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘இது தமிழ் - ஆங்கிலம் பைலிங்குவல் படம்!’னார்... ‘யோவ், நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியம் படிச்ச பையன்... ‘ஐ நோ எ ஃபேஸ் எ லவ்லி ஃபேஸ்’ அளவுக்குத்தான் எனக்கு இங்கிலீஷ் தெரியும்... ஆளை விட்ருப்பா!’ன்னு கதறினேன். ‘ஏங்க பயப்படுறீங்க... அதெலாம் சிம்பிளா நம்ம ஊரு இங்கிலீஷ்தான். ப்ராம்ப்ட்ல மீதியைப் பார்த்துக்கலாம்’னு என்னைக் கட்டி இறக்கிட்டாரு. நான் ஹீரோவா, இல்லை ஜீரோவான்னு இனி ஆடியன்ஸ்தான் சொல்லணும்!”

சாம்ஸ்
சாம்ஸ்
“நான் 50 வயசு ஹீரோ!”

“அதென்ன ‘ஆபரேஷன் ஜுஜுபி’னு ஒரு டைட்டில்..?”

“நாடு நல்லா இருக்குறதுக்கு ஒரு இந்தியக்குடிமகனா நான் ஒரு கனவு காணுறேன். அதை நிறைவேத்துறதுக்கு ஒது வாய்ப்பு வருது. நான் பண்ற அந்தச் செயல் எல்லோரையும் புருவம் உயர்த்த வைக்குது. நிச்சயம் அதுதான் படத்தோட ப்ளஸ். தியேட்டர்ல அது என்னன்னு பார்க்குற ஆடியன்ஸுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு.”

‘`டீசர் புரொமோஷன்ல ரஜினியையும் கமலையும் கிண்டல் பண்ணியிருக்கீங்களே..?’’

``கோத்து வுட்றாதீங்க கோப்பால்... பிக்பாஸ் ஸ்டைல்ல ஒரு டீசர் பண்ணி வெளியிட்டாரு நம்ம இயக்குநர். அரசியல்ங்கிறது பார்ட் டைம் ஜாப் இல்லைன்னு ஒரு மெஸேஜைச் சொன்னது குத்தமா..? அப்புறம் தீபாவளிக்கு புலி மாதிரியான அண்ணாத்தே பக்கத்துல பூனைக்குட்டி மாதிரி நாங்களும் வர்றோம்னு கார்டு போட்டோம். படத்துல நிஜமாவே யார் மனசையும் புண்படுத்துற காட்சிகள் வைக்கலை. என் ஒரிஜினல் வயசு 50. அதே வயசுக்காரனா, சமூகத்தின் மீது அக்கறை உள்ள சாமன்யனா நடிச்சிருக்கேன்.”

“நான் 50 வயசு ஹீரோ!”
“நான் 50 வயசு ஹீரோ!”

“நீங்க 50 வயசுல ஹீரோவா நடிக்க வர்றீங்க... உங்க மகன் 25 வயசுல ஹீரோவா நடிக்க வர்றாராமே..?’’

``என் மகன் யோஹன், இயக்குநர் ராம் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்கான். கூத்துப்பட்டறையில நடிப்புப் பயிற்சியும் தனஞ்செயன் சாரோட பாஃப்தாவில் பிலிம் மேக்கிங் கோர்ஸும் முடிச்சிட்டான். ஆமா, சீக்கிரமே அவனோட சினிமா கரியர் ஆரம்பமாகப் போகுது. உங்களோட வாழ்த்துகள் அவனுக்கு வேணும்!”

வாஞ்சையுடன் கைகுலுக்கிப் பேசி முடித்தார் சாம்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism