Published:Updated:

"கிரேஸி சார் ஆரம்பிச்சு வெச்ச லேடி கெட்டப்தான் இப்போவரை கைகொடுக்குது!" - சாம்ஸ்

வே.கிருஷ்ணவேணி

வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் இன்று மதியம் 2 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். கிரேஸி மோகனின் நாடக சபாவில் பல வருடங்கள் இருந்தவர், காமெடி நடிகர் சாம்ஸ். அவரிடம் பேசினேன்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

''கிரேஸி மோகன் என் குருநாதர். அந்த ட்ரூப்லதான் ஆசைப்பட்டு முதலில் சேர்ந்தேன். 1996 முதல் 2007 வரைக்கும் அவருடன்தான் என் பயணம் இருந்தது. அவருடன் இணையாமல் இருந்திருந்தால், இந்த இடத்தைத் தக்கவைத்திருப்பேனா, தெரியாது. அந்த இடத்தில் நான் கற்றுக்கொண்டது அதிகம். நடிப்பைத் தாண்டி, நல்ல பழக்க வழக்கங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். நல்லவர், மனிதாபிமானம் மிக்க மனிதர். அவருக்குக் கோபப்படவே தெரியாது.

சாம்ஸ்
சாம்ஸ்

குருவை மிஞ்சிய சிஷ்யன் இருப்பான்னு சொல்வாங்க. ஆனால், இந்தக் குருவை என்னால எந்தக் காலத்திலும் மிஞ்ச முடியாது. ஓவியம், வசனம், நடிப்பு, வெண்பா எழுதுவது எனப் பல விஷயங்களில் வல்லவர் அவர். அவர் நாடகத்திற்கான கதையைப் பக்கம் பக்கமா எழுதி வைத்திருப்பார். அதை அவருடன் இருப்பவர்கள், இரண்டு மணிநேர நாடகத்திற்கு சுருக்குவார்கள். 11 வருடம் அவருடன் வேலை பார்த்திருக்கேன்.

அவரால்தான் ஊரைச் சுற்றிப் பார்த்தேன். வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறேன். டிராமாவைத் தாண்டி நடக்கிற நகைச்சுவைகளுக்கு சிரிச்சு உருண்டிருக்கேன். கண்ணீர் வரும்வரை சிரிச்சிருக்கேன். அப்படி சிரிக்க வைத்த என் குருநாதர், முதன் முறையா அழ வைத்திருக்கிறார்.'' எனக் கலங்குபவர்,

சார் என் மனைவி எனக்கு மீசை வைத்துப் பார்க்க ஆசைப்படுறாங்க. ஒரு முறை மீசை வைக்கட்டுமா
சாம்ஸ்

''அவருடைய எல்லா டிராமாவுமே எனக்குப் பிடித்ததுதான். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டிராமா, 'மீசை ஆனாலும் மனைவி'. 'உன்னால பண்ண முடியும்டா' என உற்சாகப்படுத்துவது, அவருடைய பாணி. பெண் வேடம் போட்டு நிறைய நாடகங்களில் நடிச்சுக்கிட்டிருந்தேன். 'சார் என் மனைவி எனக்கு மீசை வைத்துப் பார்க்க ஆசைப்படுறாங்க. ஒருமுறை மீசை வைக்கட்டுமா'னு கேட்டேன். நடிகனுக்கு மீசை இல்லாம இருக்கும்போது, விதவிதமான கேரக்டர்கள் பண்றது ஈஸியா இருக்கும். எனக்கும் அது வசதியா இருந்தது.

அவருடைய டிராமாவில் எடுக்கப்பட்ட மீசையை இன்னும் வைக்கவே இல்லை. என் கல்யாணத்துக்காகப் பதினைந்து நாள்கள் டிராமாவை ஒத்திவைத்து, கல்யாணத்தின்போது மட்டும் மீசை வைத்திருப்பேன். கல்யாணம் முடிந்த பிறகு என் மனைவியை அழைத்துக் கொண்டுப் போன இடம் கிரேஸி மோகன் சாருடைய நாடகம்தான். என் பையனைத் தூக்கிக் கொஞ்சிருக்கார். அவருக்கு என் மகனை ரொம்பப் பிடிக்கும்.

சாம்ஸ்
சாம்ஸ்

அண்ணன், தம்பி ஒற்றுமை என்றால், என் கண் முன்னே இருக்கும் உதாரணம் மோகன் சாரும், பாலாஜி சாரும்தான். வாழ்ந்தா கிரேஸி மோகன், பாலாஜி மாதிரி வாழணும்னு என் வீட்டுல சொல்வேன். அண்ணனை அப்படிப் பார்த்துப்பார், கிரேஸி மோகன். நான் அவரை மோகன் சார் என்பேன், 'குருவே'ன்னு கட்டிப்பேன். குரு, பிரண்ட், அண்ணா என எல்லாமுமாக இருந்தார்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

தற்போது, எழில் சார் படத்தில் பெண் வேடமிட்டு நடிச்சுக்கிட்டிருக்கேன். ஒவ்வொரு முறை லேடி கெட்டப் போடும்போதும், எனக்கு கிரேஸி மோகன் சார்தான் நினைவுக்கு வருவார். அவருடைய டிராமாவில் ஆரம்பித்த லேடி கெட்டப் இப்போவரை எனக்குக் கைகொடுக்குது. உங்கள் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது சார். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.'' என்று கலங்குகிறார், சாம்