Published:Updated:

``விஜய்க்கு மட்டுமல்ல; கமல், விஷாலுக்குக்கூட நான் டப்பிங் பேசியிருக்கேன்!'' - சேத்தன்

சேத்தன்
சேத்தன்

'மர்மதேசம்', 'மெட்டிஒலி' என 90'ஸ் நாஸ்டாலஜியா ஹிட் சீரியல்களுக்குச் சொந்தக்காரர் நடிகர் சேத்தன்.

'மர்மதேசம்', 'மெட்டிஒலி' என 90'ஸ் நாஸ்டால்ஜியா ஹிட் சீரியல்களுக்குச் சொந்தக்காரரான சேத்தன், சீரியலைவிட்டு விலகி தற்போது படங்கள், வெப்சீரிஸ், இயக்கம் ஆகியவற்றில் பிஸியாக இருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

சேத்தன்
சேத்தன்

"தேவதர்ஷினி தமிழ், தெலுங்கு சினிமா, வெப்சீரிஸ்னு ரெண்டுலயும் பிஸியா இருக்காங்க. பொண்ணு நியதி +2 படிக்கறாங்க. படங்கள், வெப்சீரிஸ்னு நானும் ஒரு பக்கம் பிஸியா போயிட்டிருக்கேன். சீரியல் வேண்டாம்னு முடிவெடுத்த பிறகு 'பொல்லாதவன்', 'தாம் தூம்', 'கைதி' இப்போ 'மாஸ்டர்'னு நல்ல படங்கள் பண்றதுல சந்தோஷமா இருக்கு" என உற்சாகமாக ஆரம்பிக்கிறார் சேத்தன்.

நீங்க நடிப்புதுறைக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு மேலாகுது. திரும்பிப் பார்க்கும்போது இந்தப் பயணம் எப்படி இருக்கு?

சேத்தன்
சேத்தன்

"நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுதான் இந்தத் துறைக்குள்ள வந்தேன். அந்த வகையில 'மர்மதேசம்', 'மெட்டிஒலி'னு அடுத்தடுத்து நான் நடிச்ச சீரியல்கள் எல்லாமே மக்கள்கிட்ட எனக்குனு ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுத்தது. ஒரு கட்டத்துல சீரியலுக்கான பேட்டர்ன் ஒரே மாதிரி இருந்தது எனக்கு ரொம்ப சலிப்பா இருந்தது. அதனால வெளிய வந்துட்டேன். இப்போ படங்கள், இயக்கம்னு கவனம் செலுத்திட்டிருக்கேன்."

திரும்பவும் சீரியல்ல நடிக்கப் போகலாம்னு தோணியிருக்கா?

விடாது கருப்பு
விடாது கருப்பு

"இல்லவே இல்லை. சீரியல்ல நடிக்கிறதை விட்டு கிட்டத்தட்ட எட்டு வருஷம் ஆச்சு. ஆனாலும், சீரியல் வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. 'மர்மதேசம்', 'மெட்டிஒலி' சீரியல்கள் சீசன் 2 எடுத்தா நடிப்பீங்களானு நிறைய பேர் கேட்குறாங்க. 'மர்மதேசம்' வந்த சமயத்துல வழக்கமான சீரியல்கள்ல இருந்து வித்தியாசமான கதைக்களம் கொண்டதா அது இருந்தது. அப்போ எல்லாம் பக்கத்து வீடுகள்ல 'மர்மதேசம்' மியூசிக் ஒரே சமயத்துல வரும். அந்த அளவுக்கு ஹிட் ஆச்சு. ஆனா, மத்த சீரியல்கள் எல்லாம் ஒரே ஃபார்மேட்டுக்குள்ளதான் இப்ப வரைக்கும் போயிட்டு இருக்கு. ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய எனக்கு சலிப்பா இருக்கு. அதனால இனி சீரியல்கள்ல நடிக்கிற முடிவுல இல்லை. சீரியல் விட்டு வந்த சமயத்துல எனக்குப் பெருசா பட வாய்ப்புகளும் வரல. அப்ப திரும்பவும் முதல்லருந்து ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது. அந்தச் சமயத்துல எனக்கு என்னோட குடும்பம் பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. எல்லாருடைய கரியர்லயும் இந்த ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். அதுக்கு எல்லாரும் கண்டிப்பா தயாரா இருக்கணும்."

படம் இயக்க ஆசை இருக்குனு சொன்னீங்க. எப்போ இயக்குநரா எதிர்ப்பார்க்கலாம்?

சேத்தன்
சேத்தன்

''கதை எழுதியிருக்கேன். சில காரணங்களால அது தள்ளிப்போயிட்டு இருக்கு. அது படமா வருமா இல்ல வெப்சீரிஸா எடுத்துட்டுப் போகலாமாங்கிற அறிவிப்பு சீக்கிரமே வரும்."

உங்க நண்பர் போஸ் வெங்கட் இயக்கின 'கன்னிமாடம்' படம் பார்த்தாச்சா?

போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்
சினிமா விமர்சனம்: கன்னி மாடம்

" 'கன்னிமாடம்' படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூ வந்துட்டு இருக்கறதுல அவரோட நண்பரா எனக்கு ரொம்பவே பெருமை. பிஸியா போயிட்டு இருக்கிறதுனால படம் பார்க்க டைம் கிடைக்கல. இதை போஸ் வெங்கட் கேட்டா கண்டிப்பா என்னை அடிக்க வருவார் (சிரிக்கிறார்). சீக்கிரமே படம் பார்க்கணும்."

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா பணிபுரிந்த அனுபவம்?

சேத்தன்
சேத்தன்

"நிறைய ஆர்ட்டிஸ்ட்டுக்கு டப்பிங் பண்ணிட்டு இருக்கேன். 'விஸ்வரூபம் 2', '2.0', 'அஞ்சான்'னு பல படங்கள்ல சில கேரக்டர்களுக்கு டப்பிங் பண்ணியிருக்கேன். அதுமட்டுமல்லாம தமிழ்ல இருந்து விஜய், விஷால், கமல் சாருடைய நிறைய படங்கள் ஹிந்திக்கு டப் ஆகிப் போகும். அவங்களுடைய சில படங்களுக்கும் நான் டப்பிங் பேசியிருக்கேன்."

'மாஸ்டர்' வாய்ப்பு?

ரஜினி `புரட்சி'யின் அதே ஸ்பாட்... என்ன சொல்லப்போகிறார் `மாஸ்டர்' விஜய்? #Master

"'கைதி' படம் மூலமாதான் லோகேஷ் கனகராஜ் அறிமுகமானார். அந்தப் படத்துல வேலை பார்த்ததால அவருடைய வொர்க்கிங் ஸ்டைல் என்னனு எனக்குத் தெரியும். தனக்கு என்ன வேணும்கிறதுல தெளிவா இருக்கக்கூடிய ஒருத்தர். அது 'மாஸ்டர்'ல பக்காவா செட் ஆகிருக்கு. விஜய் சார்கூட காம்பினேஷன் சீன்ஸ் எனக்கு இருக்கு. என்னோட போர்ஷனுக்கான ஷூட் எல்லாம் பெரும்பாலும் டெல்லிலதான் இருந்தது. மொத்தத்துல 'மாஸ்டர்' படம் திரையில ரசிகர்களுக்கான ட்ரீட்டா இருக்கும்."

அடுத்த கட்டுரைக்கு