Published:Updated:

``பையன் ஐ.ஏ.எஸ் ஜெயிச்சதும் ரஜினி சார் போன்ல சொன்ன விஷயம்?!'' - சின்னி ஜெயந்த்

ஜெய் - சின்னி ஜெயந்த்

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஜெய், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 75-வது இடம் பிடித்து தேர்ச்சிபெற்றிருக்கிறார்.

``பையன் ஐ.ஏ.எஸ் ஜெயிச்சதும் ரஜினி சார் போன்ல சொன்ன விஷயம்?!'' - சின்னி ஜெயந்த்

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஜெய், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 75-வது இடம் பிடித்து தேர்ச்சிபெற்றிருக்கிறார்.

Published:Updated:
ஜெய் - சின்னி ஜெயந்த்

நடிகரின் மகன் ஐ.ஏ.ஸ் கனவு கண்டது எப்போது எனத் தெரிந்துகொள்ள அப்பா, மகன் இருவரையும் சந்தித்தேன்.

``யு.பி.எஸ்.சி தேர்வுல அகில இந்திய அளவுல 75 வது இடத்தை என்னோட மகன் ஸ்ருபதன் ஜெய் பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்படி இதை வெளிப்படுத்துறதுனே தெரியல. முதல்ல இந்த சந்தோஷத்தை சிவாஜி ஐயாவின் மூத்த மகன் ராம்குமார்கிட்ட பகிர்ந்துகிட்டேன். ஏன்னா, மூத்த மகன் பிறந்தவுடனே ஸ்ருபதன் ஜெய்னு பேர் செலக்ட் பண்ணுனது அவர்தான். இதுக்கு அடுத்து என்னோட ஆசான் ரஜினி சார்க்கும் சொன்னேன். ``நம்ம கஷ்டப்பட்டு உழைச்சதை, பிள்ளைகள்கிட்ட இருந்து எதிர்பார்ப்போம். உன்னோட மகன் கொஞ்சம் வித்தியாசமா கல்வி மூலமா வெற்றியடைஞ்சிருக்குறது ஒட்டுமொத்த திரையுலகத்துக்கே பெருமையா இருக்கும். எனக்கு ரொம்ப சந்தோஷம்"னார். இதுமட்டுமல்லாம, `கொரோனா முடிஞ்சவுடனே வீட்டுக்கு பையனை அழைச்சிட்டு வா'னு சொல்லியிருக்கார். அதே மாதிரி சிவகுமார் அண்ணன், `தமிழ் சினிமால யு.பி.எஸ்.சி தேர்வுல ஜெயிச்ச முதல் ஆள் உன் பையன்தான்னு' சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குனு'' சின்னி ஜெயந்த் சொல்லி முடிக்கவும் மகன் ஜெய் தொடர்ந்து பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கனவு நினைவான ஃபீல் இருக்கு. நான் இந்தத் தேர்வுக்கு ரெடியாகிட்டு இருந்தப்போ ஃபேமிலில இருந்த எல்லாருமே எனக்கு துணையாயிருந்தாங்க. ரிசல்ட் வந்ததுக்குப் பிறகு ஃபிரெண்ட்ஸ், ஃபேமிலினு எல்லாருமே ஹேப்பியா இருக்காங்க. முக்கியமா, ரஜினி சார் எப்போவுமே எங்க வீட்டுல இருக்குற எல்லாருக்குமே நல்ல இன்ஸ்பிரேஷன். அவரோட ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும். அப்பாகிட்ட அவரோட சந்தோஷத்தை வெளிப்படுத்துனதுல வீட்டுல இருக்குற எல்லாருமே ஹேப்பி'' என ஸ்ருபதன் ஜெய் இடைவெளி விட சின்னி ஜெயந்த் தொடர்ந்தார். ``என்னோட பசங்களுக்கு சினிமா மேல விருப்பம் இருந்திருந்தா இந்தத் துறைக்குள்ள வந்திருப்பாங்க. ஆனா, என்னோட பையனுக்கு படிப்பு மேல விருப்பம் இருந்திருக்கு. அதனால நாங்களும் இவன் படிக்குறதுக்கு உதவியா இருந்தோம்'' என்றார் ஜெயந்த்.

சின்னி ஜெயந்த் - ஜெய்
சின்னி ஜெயந்த் - ஜெய்

`எனக்கு எப்போவும் பப்ளிக் சர்வீஸ்ல இருக்குற நபர்களைப் பார்க்குறப்போ இன்ஸ்பிரேஷனா இருக்கும். யு.பி.எஸ்.சி பற்றி எனக்கு பெருசா தெரியல. டெல்லியில படிச்சிட்டு இருந்தப்போ இந்தத் தேர்வு பற்றி கேள்விப்பட்டேன். அப்புறம் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சபோதும் சில ஃப்ரெண்ட்ஸ் இந்தத் தேர்வுக்கு ரெடியாகிட்டு இருந்தாங்க. அதனால, நானும் படிச்சிட்டு வேலைக்கு போயிட்டிருந்தப்போ இந்தத் தேர்வுக்கு ரெடியானேன். யு.பி.எஸ்.சி தேர்வுகளைப் பொறுத்தவரைக்கும் தேர்வுக்கு ரெடியாகுறவங்க மற்றும் வீட்டுல இருக்குற பெற்றோர்கள் ரெண்டு பேருமே ரொம்ப பொறுமையா இருக்கணும். ஏன்னா, தேர்வுக்கான காலமே ஒரு வருஷம் முழுக்க போகும். முதல் முறை தேர்வு எழுதுனப்போ தோல்வியடைஞ்சிட்டேன். அப்போ, என்னோட ஃபேமிலில இருக்குறவங்க எல்லாரும் ஆறுதலா இருந்தாங்க. திரும்பவும் ரெண்டாவது முறை தேர்வு எழுதுனப்போ பாஸ் ஆகிட்டேன்'' எனத் தோல்விகளில் இருந்து மீண்டதைப் பற்றி சொன்னார் ஜெய்.

``இப்போ, நாங்க நடிக்குற படங்கள்கூட தோல்வியடையும். திரும்பவும் வேறொரு படம் சக்ஸஸ் ஆகும். அதே மாதிரிதான் இந்த பரீட்சையும். அதனால, ரெண்டாவது முறை முயற்சியை கைவிடாம எழுது'னு சொன்னேன். ஆனா, பையன் இந்தப் படிப்பை படிச்சதுக்கு பெரிய காரணம் வேணுகோபால் ஐ.பி.எஸ்தான். கோழிக்கோடுக்கு விமானத்துல போயிட்டு இருந்தேன். அப்போ என் பக்கத்துல வேணுகோபால் உட்கார்ந்திருந்தார். ரெண்டு பேரும் பேசிட்டு வந்தோம். பசங்களை பற்றி விசாரிச்சார். `உங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்கனு சொல்றீங்க. அவங்களை என்னோட ஆபீஸுக்கு அழைச்சிட்டு வாங்க'னுனார். சென்னை திரும்பிய பிறகு நானும் பசங்களும் அவரோட ஆபீஸுக்கு போனோம். `ஐ.ஏ.ஏஸ்' தேர்வுக்கு எப்படியெல்லாம் படிக்கணும்னு வேணுகோபால் சொன்னார். இதுக்குப் பிறகு சங்கர் அகாடமில பையனை சேர்த்து விட்டேன். என் வானத்து நண்பராகிட்டார் வேணுகோபால். எந்தளவுக்கு உயரத்துல சொன்னாரோ அந்தளவுக்கு பையனோட படிப்பும் உயரத்துல போயிருக்கு'' என ஆரம்ப விதையைப் பெருமையோடு நினைவுகூர்ந்தார் சின்னி ஜெயந்த்.

``கூட்டு முயற்சியின் மூலமாதான் இன்னைக்கு ஜெயிச்சிருக்கேன். ஏன்னா, படிக்குறது, சாப்பிடுறது, வொர்க் அவுட் பண்றது, தூங்குறதுனு எல்லாத்துக்கும் டைம் டேபிள் போட்டு நானும் அம்மாவும் வேலை பார்த்தோம். எங்களுக்கு உதவியா அப்பாவும் தம்பியும் இருந்தாங்க. அம்மாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது''னு ஜெய் சொல்லவும்,

சின்னி ஜெயந்த் - ஜெய்
சின்னி ஜெயந்த் - ஜெய்

``ஒரு குழந்தை வளரும்போதே எதுல ஆர்வம் அதிகம் இருக்குனு பெற்றோர்களுக்கு தெரிய வரும். ஆரம்பத்துல இருந்தே பசங்க என்னோட படங்களோட ஷூட்டிங் எதுக்கும் வந்தது இல்ல. சினிமா மேல பசங்களுக்கு பெரிய ஆர்வமிருந்து நான் பார்த்ததே இல்ல. அதனால, பசங்க ஆசைபட்டபடியே விட்டுட்டேன். சில ஹீரோஸ் தன்னோட பசங்க சினிமாவுக்கு நடிக்க வரணும்னு ஆசைப்படுவாங்க. தலைமுறையா சினிமா தொழில்ல நிலை நாட்டுறதும் அற்புதமான விஷயம்தான். என்னைப் பொறுத்தவரைக்கும் பசங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை மனசாரா கொடுத்து ஊக்கப்படுத்துனா எல்லா குழந்தைகளும் ஜெயிப்பாங்க'' என்கிறார் சின்னி ஜெயந்த்.

``யு.பி.எஸ்.சி தேர்வு பற்றி நிறைய சீனியர்ஸ் பேசியிருந்த வீடியோஸ் பார்த்து என்னை ஊக்கப்படுத்திப்பேன். நம்ம மனசு சோர்வு அடையுறப்போ சோர்ந்து போகாம உறுதியா இருக்கணும். அதே மாதிரி நம்ம டீச்சர்ஸ் சொல்ற ரிவியூஸை சரியா கேட்டு நல்லபடியா எடுத்துக்குறதும் முக்கியம். டெக்னாலஜி ரொம்ப டெவலப் ஆகியிருக்கு. ஒரு ஜனநாயக நாட்டுல இளைஞர்களின் பங்கு ரொம்ப முக்கியம். இதனால, கல்வி, சூற்றுசூழல் மற்றும் தொழில்முனைவோர்க்கு முக்கியத்துவம் கொடுக்கணும்கிறது என்னோட ஐ.ஏ.ஏஸ் கனவு'' என்றார் ஸ்ருபதன் ஜெய்.

வாழ்த்துகள் மக்களே!