Election bannerElection banner
Published:Updated:

“ஹோம் டைம், மாம் டைம்” - வைரலாகும் நடிகர் சிரஞ்சீவியின் முதல் ட்விட்டர் போஸ்ட்!

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் வேளையில், ட்விட்டர் தளத்தில் இன்று தான் சிரஞ்சீவி இணைந்தார் என்பதும், தற்போது அவர் வெளியிட்டிருக்கக் கூடிய புகைப்படம்தான் சமூகவலைதளங்களில் அவர் பதிவிட்ட முதல் புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம், கொரோனாவால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதிப்படுத்துதல், சிகிச்சை, குவாரண்டைன், அதிகரிக்கும் மரணங்கள் என நம் மனம் முழுவதையும் கொரோனா அச்சமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், வாகனங்களின் இரைச்சலும் புகையுமின்றி வெறுச்சோடிய சாலைகள், மனிதரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில், பறவைகளும் விலங்கினங்களும் இந்த உலகம் எங்களுக்கும் சொந்தம் என்பதை உணர்த்தும் வகையில் சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்சிகள் தற்போது உலகெங்கும் நிகழ்ந்து வருகின்றன.

கொரோனா
கொரோனா

அந்த வகையில் மனிதர்களும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் நவீனமயமான இந்த நூற்றாண்டில் கொரோனா அச்சம் ஒரு புறம் குடி கொண்டிருந்தாலும் கூட, ஆர அமர உட்கார்ந்து குடும்பத்தாருடன் நேரம் செலவளிக்க கொரோனா வைரஸால் வழிவகை பிறந்திருக்கிறது என சாதகமான கண்ணோட்டத்தில் இந்தக் கடினமான நாள்களை அணுகலாம்.

அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வ்ட்டில், ``ஹோம் டைம், மாம் டைம்'' எனக் குறிப்பிட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி, தனிமைப்படுத்துதலில் இருக்கும் போது தனது தாய் அஞ்சனாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில், `இந்தத் தருணமானது நமது பெற்றோர்களையும் முதியவர்களையும் கவனித்துக் கொள்ளக் கூடிய தருணமாகும்' எனக் குறிப்பிட்டுள்ள சிரஞ்சீவி, 'இந்தத் தனிமைப்படுத்துதல் காலங்களில் என்னைப் போல் உங்கள் தாயாருடன் அல்லது வீட்டில் முதியவர்களுடன் எடுத்த செல்ஃபி ஒன்றைப் பதிவிடுங்கள்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் வேளையில், ட்விட்டர் தளத்தில் இன்று தான் சிரஞ்சீவி இணைந்தார் என்பதும், தற்போது அவர் வெளியிட்டிருக்கக் கூடிய புகைப்படம்தான் சமூகவலைதளங்களில் அவர் பதிவிட்ட முதல் புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவரை ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்துள்ளனர்.

சிரஞ்சீவி இன்று ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கும் வேளையில், மலையாள நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, நடிகை ராதிகா சரத்குமார், சுஹாசினி, இயக்குநர் ராஜமெளலி எனப் பல திரை நட்சத்திரங்கள் அவரை வரவேற்கும் விதமாக ட்வீட் செய்துள்ளனர். இந்த ட்வீட்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு