Published:Updated:

"ஜார்ஜியாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம்... விஜய் சேதுபதிக்காக!" - சிரஞ்சீவி ஸ்பெஷல் ஷேரிங்ஸ்

விஜய் நடிச்ச 'கத்தி' படத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. 'உங்களோட ரீ என்ட்ரி படத்தை நான்தான் தயாரிக்கணும்'னு என் மகன் ராம்சரண் 'கைதி நம்பர் : 150' படத்தைத் தயாரிச்சான்.

Chiranjeevi
Chiranjeevi

ஜூப்ளி ஹில்ஸ்... மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடு... காலை 10 மணிக்கு உள்ளே நுழைகிறேன். அன்றுமாலைதான் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் என்பதால் வீடே பரபரவென இருக்கிறது. ஆனால் 'உங்களோடு பேச 2 மணிநேரம் ஒதுக்கியிருக்கேன். விகடனோடு பேசி ரொம்ப வருஷமாச்சு. என்ன வேணாலும் கேளுங்க... பேசுவோம்' என்றவரின் கவனம் முழுக்க முழுக்க என்னுடைய கேள்விகளில்தான் இருந்தது. போனோ, மற்றவர்களின் குறுக்கீடோ எதுவும் இல்லை. நிறையவே பேசினோம்! விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2ngkDx9

" 'சைரா நரசிம்மா ரெட்டி'ன்னு பீரியட் படம்... 'பாகுபலி' வெற்றியோட பாதிப்புல உருவான ஐடியாவா இது?''

Chiranjeevi
Chiranjeevi

"தெலுங்கு சினிமாவுடைய பலத்தை உலகத்துக்குக் காட்டிய படம் 'பாகுபலி.' ஆனா, 'சைரா நரசிம்ம ரெட்டி' கதையைப் படமா எடுக்கணும்கிறது 12 வருஷ பிளான். பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால தள்ளித்தள்ளிப் போயிட்டே இருந்துச்சு. இடையில் நான் அரசியலுக்குப் போனதால் ஒன்பது வருஷமா நடிக்கவேயில்லை. மீண்டும் நான் சினிமாவுக்கு வந்தப்போ என்னோட 150-வது படத்துக்காக நிறைய கதைகள் கேட்டேன். ஆனா, எதுவும் எனக்குத் திருப்தியா இல்லை. அப்போதான் நான் விஜய் நடிச்ச 'கத்தி' படத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. 'உங்களோட ரீ என்ட்ரி படத்தை நான்தான் தயாரிக்கணும்'னு என் மகன் ராம்சரண் 'கைதி நம்பர் : 150' படத்தைத் தயாரிச்சான். படம் சூப்பர் ஹிட். அடுத்து 'சைரா நரசிம்ம ரெட்டி' கதையைப் பண்ணலாம்னு நம்பிக்கை வந்துச்சு.

இந்த நம்பிக்கைக்குக் காரணம் 'பாகுபலி'யோட வெற்றிதான். 'இதைப் படமா எடுத்தா 250 கோடி முதல் 300 கோடி வரை செலவாகும். இவ்ளோ பணம் போட்டு இந்தப் படத்தை எடுங்கன்னு யார்கிட்ட கேட்குறது? அதனால, இதை நம்மளே பண்ணலாம். என்ன ரிசல்ட் வந்தாலும் அது நம்மளோட இருக்கட்டும். ரிஸ்க் எடுக்கலாம்'னு ராம் சரண் சொன்னான். அவன் சொன்னது சரின்னு பட்டது. இயக்குநரா சுரேந்தர் ரெட்டியை கமிட் பண்ணினோம்."

"விஜய் சேதுபதியைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆர்வம்...''

"நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டிருக்கான். அந்த கேரக்டர்லதான் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார். இந்த ராஜபாண்டி கேரக்டர்ல யார் நடிக்கலாம்னு பேச்சு வந்தப்போ நான்தான் விஜய் சேதுபதி பேரைச் சொன்னேன். அவர் தமிழ்ல எவ்ளோ பிஸியா நடிச்சிட்டிருக்கார்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், அவர்கிட்ட கேட்கலாம்னு தோணுச்சு. போன் அடிச்சேன். 'ராஜ பாண்டின்னு ஒரு கேரக்டர். நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்'னுதான் சொன்னேன். 'உங்க படத்துல நடிக்கிறது எனக்குப் பெருமை சார். நிச்சயமா வந்து நடிக்கிறேன்'னு சொன்னார்.

Chiranjeevi
Chiranjeevi

விஜய் சேதுபதி சிம்பிள்னு தெரியும். ஆனால், இவ்ளோ ஹம்பிளான மனிதர்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஜார்ஜியாவுல ஷூட்டிங் நடக்கும்போது நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே வரும். முக்கால்வாசிப்பேர் விஜய் சேதுபதியைப் பார்க்க வந்திருந்தவங்க. திறமையான நடிகர்கள் வரிசையில கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நான் விஜய் சேதுபதியைப் பார்க்குறேன். விஜய் சேதுபதி என் தம்பி. என் தம்பிகூட நடிச்சதுல எனக்குத்தான் பெருமை.''

- சைரா முதல் ரஜினி, கமல் அரசியல் வரை மனம் திறந்து தன் அனுபவக் கருத்துகளைக் கொட்டிய சிரஞ்சீவியின் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் கவர் ஸ்டோரியில் வாசிக்க > "கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்" - சிரஞ்சீவி ஓப்பன் டாக்! https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-actor-chiranjeevi

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |