Published:Updated:

'எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்துவதற்காக அவர் சந்தோஷமாக போயிட்டார்.' கிரேஸி மோகனின் தம்பி மாது பாலாஜி.

பிர்தோஸ் . அ

கிரேஸி மோகனின் இறப்பு குறித்து அவரது தம்பி மதுபாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மதுபாலாஜி
மதுபாலாஜி

66 வயதான கிரேஸி மோகனின் திடீர் மரணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவரின் தம்பி மாது பாலாஜி கிரேஸி மோகனின் இறப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்,

மதுபாலாஜி
மதுபாலாஜி

'' மோகனின் இறப்புக்கு பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர் . அவர்களுக்கு எங்களின் நன்றி. ஆனால், மோகன் சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குடும்பத்தார்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்பது போன்ற வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் உண்மையில்லை. அவர் வியாதி வந்தோ கஷ்டப்பட்டோ சாகவில்லை. அவருடைய இறப்பு திடீரென்று தான் நிகழ்ந்தது. எங்களுக்கே பெரிய அதிர்ச்சி இது.

"பத்தாம் தேதி காலையில நடைபயிற்சிக்கு நான் போயிட்டு வந்து மோகனை சந்திச்சேன். வழக்கம் போல ஹியூமரா பேசிட்டிருந்தார். மூன்று மாசத்துக்கு முன்னாடி ஹெல்த் செக்கப் பண்ணின போதுகூட மோகனின் உடம்பில் எந்த வியாதியும் இல்லைனுதான் ரிசல்ட் வந்தது. அவர் இறந்த அன்று காலையில் ஒன்பது முக்கால் மணிக்கு எனக்கு போன் பண்ணி, 'பாலாஜி எனக்கு மூச்சு அடைக்குது அடி வயிற்றில் வலிக்குது வர முடியுமா'னு மோகன் கேட்டார். உடனே கிளம்பி போய் காவேரி மருத்துவமனையில் சேர்த்தேன்."

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

"டாக்டர்கள் அவருடைய உயிரை காப்பாற்ற முடிந்தளவுக்கு முயற்சி செய்தார்கள். ஆனால், காப்பாற்ற முடியவில்லை. விதி அவ்வளவுதானு எழுதப்பட்டிருக்கு. மோகனின் இறப்பு குறித்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். எல்லாமே வதந்திகள்தான். அவர் சாகுறதுக்கு முன்னாள் இரவுகூட பெருமாள் பற்றி 12 பாடல்கள் எழுதி வெச்சிருந்தார். ரொம்ப சுறுசுறுப்பாகத்தான் இருந்தார். நம்ம எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்துவதற்காக அவர் சந்தோஷமா கிளம்பி போயிட்டார்.'' என்று வருத்ததுடன் சொல்லி முடித்தார்.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..