Published:Updated:

கிரேஸி மோகன் இறுதி அஞ்சலி நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது!

சனா

காமெடி நடிகர் கிரேஸி மோகன் உடல்நலம் குறைவு காரணமாக இறந்தார். இவரது இறுதி அஞ்சலி நாளை நடைபெற உள்ளது.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் கிரேஸி மோகன். கமலின் நெருங்கிய நண்பரான இவர் எண்ணற்ற மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார். உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் இரண்டு மணியளவில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.

கவுண்டமணி
கவுண்டமணி

பிறகு இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் மந்தைவெளியில் உள்ள இவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி அஞ்சலியில் எண்ணற சினிமா கலைஞர்கள் கிரேஸி மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் கவுண்டமணி, வையாபுரி, சிவகுமார், சந்தானபாரதி, வைரமுத்து, கமல்ஹாசன் மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வைரமுத்து
வைரமுத்து

கிரேஸி மோகனின் உடல் தகனம் நாளை காலை 11 மணியளவில் பெசன்ட் நகர் பீச்சில் நடைபெற உள்ளது.