Election bannerElection banner
Published:Updated:

வெளியான ஸ்கிரீன்ஷாட்கள், பாலியல் குற்றச்சாட்டு... டேனியல் விவகாரத்தில் நடப்பது என்ன?

டேனியல்
டேனியல்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண் ஒருவருடன் டேனியல் `சாட்' செய்த ஸ்கிரீன்ஷாட்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் டேனியல் அன்னி போப். `ஃப்ரெண்டு லவ் மேட்டரு' என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர், நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். `பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண் ஒருவருடன் டேனியல் `சாட்' செய்த ஸ்கிரீன்ஷாட்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

டேனியல்
டேனியல்

`இதுபோல பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறான கண்ணோட்டத்தில் டேனியல் பேசுகிறார், நடந்துகொள்கிறார்' என்ற குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. பின்னணிப் பாடகி சின்மயியும் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு டேனியல் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

டேனியலின் வழக்கறிஞர் ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் பரவக்கூடிய செய்திகள், வீடியோ, புகைப்படம் ஆகியவை போலியானவை. அவரது பெயரைக் கெடுக்கவே சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சைபர் கிரைம் பிரிவில் அவர்கள் மீது புகார் அளிக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

டேனியல்
டேனியல்

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் டேனியலிடம் விளக்கம் கேட்க தொலைபேசியில் அவரைப் பலமுறை தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்க மறுத்தவர், ஒருகட்டத்தில் அழைப்பைத் துண்டித்துவிட்டார். தனது தரப்பு விளக்கம் குறித்து டேனியல் பதிவு செய்ய முன்வந்தால், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு