Published:Updated:

'அந்த நேரத்துல, 'சரி விடு, வேற விஷயம் பேசலாம்'னு டாபிக்கை மாத்துவார் கிரேஸி - டெல்லி கணேஷ்

அய்யனார் ராஜன்

கிரேஸி மோகன் நினைவுகள் குறித்து நடிகர் டெல்லி கணேஷ்

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிரமான சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதன் பின் சரியாக மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி இவரது உயிர் பிரிந்தது. திரைத் துறையைச் சேர்ந்த பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி கணேஷ் சீரியஸா நடிச்சிட்டிருந்தவன் தம்பி. அவனுக்கு காமெடி செமயா வரும்கிறதே கிரேஸி மோகனின் 'ஐயா.. அம்மா..அம்மம்மா' நாடகத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது. இன்னைக்கு வரைக்கும் பேசப்படற அருமையான நாடகம் அது. அதனால காமெடியில என்னை தூக்கி விட்டது கிரேஸியின் ரசனைதான்னு சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ்

சினிமாவைப் பொறுத்தவரை அவருக்கு முன்னாடியே நான் நுழைஞ்சிட்டாலும், 'மைக்கேல் மதன காம ராஜன்', 'ஆஹா' உள்ளிட்ட படங்கள்ல அவர் வசனத்துல நடிச்ச காலங்களை மறக்கவே முடியாது. அந்தப் படங்கள்லாம் எனக்குப் புகழைத் தந்த படங்கள்.

கிரேஸி பத்தி பெர்சனலா சொல்லணும்னா பழகுறதுக்கு தங்கமானவர். அவர்கிட்ட நான் ஆச்சரியப்படற குணமா நான் நினைக்கிறது என்னன்னா, யாரைப் பத்தியும் சின்னதா ஒரு வார்த்தை கூட தப்பாவோ குறையாவோ பேசவே மாட்டார். ஒருத்தரைப் பத்தி நாம ஏதாவது தப்பா பேசினாக் கூட, 'சரி விடு, வேற ஏதாவது பேசலாம்'னு டாபிக்கை மாத்திடுவார்.

'ஆஹா' படம் வெளிவந்த பிறகான ஒரு மேடை. பேசினவங்க எல்லாரும் மத்த எல்லாரையும் பாராட்டினாங்க. என்னைப் பத்தி யாரும் ஒரு வார்த்தை பேசலை. வருத்தத்தோட உட்கார்ந்திருந்தேன். என் மனசோட வலி அவருக்கு எப்படிக் கேட்டதோ, சரியா அந்த நேரத்துல மோகன் மைக் பிடிச்சார். 'நான் என்ன நினைச்சு எழுதறேனோ, அதை அப்படியே பேசக்கூடியவர் கிடைச்சாதான் அந்த எழுத்துக்கே மரியாதை. நல்லா டயலாக்கா இருந்தாலும் நடிச்சாதானே அதை நல்ல டயலாக்னு சொல்வாங்க'னு தன்னை உயர்த்திக்காம பேசுவார்' என்ற டெல்லி கணேஷ், இந்த நாள் உண்மையிலேயே எனக்கு ரொம்பவே துயரமான நாளா அமைஞ்சிடுச்சு' என்கிறார்.