Published:Updated:

`அவங்களுக்குத் தேசிய விருது கிடைக்கலையேனு வருத்தமா இருக்கு!' - தனுஷ்

மா.பாண்டியராஜன்

`அசுரன்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியது...

தனுஷ்
தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் படம் ’அசுரன்’. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

`` `வடசென்னை' அன்பைவிட `மாரி'யாக நடிக்கத்தான் கஷ்டப்பட்டேன்..!'' - தனுஷ்

அதில் பேசிய தனுஷ்,``இந்தப் படத்துடைய தயாரிப்பாளர் தாணு சார்கிட்ட, `வெற்றிதான் இந்தப் படத்தை இயக்கப்போறார்’னு சொன்னதும், அவர் கதைகூட கேட்காமல் ஓகே சொல்லிட்டார். படம் நடிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே எனக்கு முழு சம்பளத்தையும் கொடுத்துட்டார்.

வெற்றியைப் பொறுத்தவரை, எனக்கு பெஸ்ட்டான ஒரு கதையைத்தான் அவர் கொடுப்பார்; அதே மாதிரி என்கிட்ட இருந்து பெஸ்ட்டை மட்டும்தான் எடுத்துப்பார். `வடசென்னை’ மாதிரி `அசுரன்’ படத்திலும் என்கிட்ட இருந்து பெஸ்ட்டை எடுத்திருக்கார். என்னுடைய 36 வயதில் எனக்கு 50 வயதுடைய கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் 22 வயது இளைஞனாகவும் என்னை நடிக்க வைத்திருக்கிறார். எங்க கூட்டணியில் மற்றுமொரு வெற்றிப் படமா இது இருக்கும். அதேபோல் 7 வருடங்களுக்குப் பிறகு ஜீ.வி.பிரகாஷுடன் வேலை செய்தது சந்தோஷமா இருக்கு.

dhanush
dhanush

சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது, `வட சென்னை’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கலையா’னு எல்லாரும் கேட்டுட்டே இருந்தாங்க. நாங்க இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்கணும்னு எதிர்பார்க்கலை. ஆனா, மக்கள் எல்லாரும் அந்தப் படத்துக்கு விருது கிடைக்கலையானு கேட்டபோது, `இதுக்கு மேல வேற என்ன வேணும்’னு தோணுச்சு. ஆனா, தேசிய விருது அறிவிச்சதும் நான் வருத்தத்தில்தான் இருந்தேன். அது எனக்காகவோ, வெற்றிக்காகவோ இல்லை. ஏன்னா, நாங்க `ஆடுகளம்’ படத்துக்காக ஏற்கெனவே தேசிய விருது வாங்கிட்டோம்.

அப்புறம் ஏன் நான் வருத்தப்பட்டேன்னா, இந்தப் படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை பார்த்த ஜாக்கி, அவ்வளவு உழைத்திருக்கிறார். `அவருக்கு விருது கிடைக்கலையே’னு வருத்தப்பட்டேன். அதேபோல், `பரியேறும் பெருமாள்’ படத்துக்காக மாரி செல்வராஜுக்கு, `ராட்சசன்’ படத்துக்காக ராம் குமாருக்கு, `மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்துக்கு விருது கிடைக்கலையேனு வருத்தமா இருந்தேன்.

Vikatan

’வடசென்னை’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் `வடசென்னை 2’ எடுப்பார்னுதான் நானும் எதிர்பார்த்தேன், ஆனா, அவர் அசுரனை எடுத்திருக்கிறார். அடுத்து நாங்க `வடசென்னை 2’ படத்தைத்தான் பண்ணப்போறோம்’’ என்றார் தனுஷ்.