Published:Updated:

தனுஷ் : இளையராஜா வெறியன், சிவபக்தன், சைவப்பிரியன்... லேட்டஸ்ட் பர்சனல் அப்டேட்ஸ்!

தனுஷ்

நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் நடிப்பால், உழைப்பால், தனித்திறமையால் அசாத்திய கலைஞனாய் உயர்ந்து நிற்கும் தனுஷுக்கு வாழ்த்துகள்!

தனுஷ் : இளையராஜா வெறியன், சிவபக்தன், சைவப்பிரியன்... லேட்டஸ்ட் பர்சனல் அப்டேட்ஸ்!

நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் நடிப்பால், உழைப்பால், தனித்திறமையால் அசாத்திய கலைஞனாய் உயர்ந்து நிற்கும் தனுஷுக்கு வாழ்த்துகள்!

Published:Updated:
தனுஷ்

நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இங்கே!

* முழுமையான சிவபக்தர். எப்போதும் லிங்க வழிபாடுதான். இப்போதெல்லாம் எந்தக் கடிதம் எழுதினாலும் 'ஓம் நமச்சிவாயா' என முடிக்க மறப்பதில்லை.

* முழுக்க முழுக்கத் தன் உழைப்பால், தன் சம்பளத்தால் அன்பு மனைவியின் விருப்பத்துக்காக போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டிவருகிறார் தனுஷ். புத்தாண்டுக்குள் புது வீட்டில் இருப்பார்!


* உணவில் சைவம் மட்டுமே. எப்போதும் பிடித்தது உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், ரசம்.

தனுஷ்
தனுஷ்

* இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர். இளையராஜாவின் இசையை மட்டுமே ரசிக்கிற மனது. ராஜாவின் எந்தக் கச்சேரியிலும் முதல் வரிசையில் முதல் ஆளாக இருப்பார்.

* நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணிதான் ஆல் டைம் ஃபேவரைட். அந்த உடல்மொழி யாரும் காப்பியடிக்கவே முடியாது என்பார். இதுவரையிலும் அவரோடு சேர்ந்து நடிக்கவே இல்லையென்பது தீராத மனக்குறை. அதேப்போல் மனோரமா ஆச்சியுடன் சேர்ந்து நடிக்காததை அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். அப்பா, அம்மாவுடன் பேசும்போது ''ஒரு முறையாவது எங்க காம்பினேஷன் இருந்திருக்கலாம்'' என்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* அம்மா சொல்லுக்கு மறுப்பேச்சு கிடையாது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி தினமும் அம்மாவுடன் இரண்டு நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் அந்த நாளை நிறைவு செய்வார்.

* நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேனிக்கு அருகில் இருக்கும் கருப்பசாமி குலதெய்வ கோயிலுக்கு போய் விடுவார். இரண்டு நாள் அங்கே தங்கியிருந்து சாமி கும்பிட்டு, சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துவிட்டுத்தான் சென்னை திரும்புவார்.

தனுஷ்
தனுஷ்

* தனுஷுக்கு மிகவும் பிடித்த ஊர் லண்டன். அங்கே அத்தனை வீதிகளும் அவருக்கு பரிச்சயம். எத்தனை தடவை போனாலும் லண்டன் மட்டும் இன்னும் சலிக்கவில்லை என்பார்.

* நாவல்களை விரும்பிப்படிப்பார். ஆனந்த விகடனில் வெளியான சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' சமீபத்திய ஃபேவரைட். மழை ரசனையாளர். மழை பெய்து விட்டால் ரோட்டுக் கடை வடை தனுஷைத் தேடி வரும் என்கிறார்கள். மழையை ரசித்தபடி சூடாக வடை சாப்பிடுவது அவ்வளவு பிடிக்குமாம்!


* ரஜினி, ரஹ்மான் ஸ்டைலில் ''எல்லா புகழும் இறைவனுக்கே'' என வெற்றிகளைத் தூக்கி சுமக்காமல், தோல்விகளைக் கண்டு துவளாமல் ''எண்ணம் போல் வாழ்க்கை'' எனச் சொல்லி அடுத்து என்ன என்கிற தேடலோடு தொடர்ந்து பயணிக்கிறார் தனுஷ்!

பிறந்தாள் வாழ்த்துகள் தனுஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism