Published:Updated:

அண்ணன் செல்வா, தம்பி தனுஷ், சில சீக்ரெட்ஸ்... - கார்த்திகா ஷேரிங்ஸ்

கார்த்திகா
கார்த்திகா

தம்பி தனுஷ் சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முழுமையாகச் செய்வார். அதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம்

"நான் மருத்துவரானது, அண்ணா நல்ல இயக்குநரானது, தம்பி வெற்றிபெற்ற நடிகரானது என அனைத்துக்குமே பின்னணியிலுள்ள பலம் அம்மாவின் வைராக்கியம்தான்" என்கிறார் மகப்பேறு மருத்துவரும் நடிகர் தனுஷின் சகோதரியுமான கார்த்திகா.

பிசியான வேலைகளுக்கிடையில் குடும்பத்துடன் இணைந்திருக்க நேரம் கிடைக்காது. சமீபத்தில் அப்படி ஏதேனும் வாய்ப்பு அமைந்ததா?

அண்ணன் செல்வா, தம்பி தனுஷ், சில சீக்ரெட்ஸ்... - கார்த்திகா ஷேரிங்ஸ்

சில தனிப்பட்ட காரணங்களால் இரண்டரை வயது வரை என் மகனுக்கு மொட்டைபோட முடியவில்லை. அதோடு, தாய்மாமன்கள் மடியில் உட்காரவைத்துதான் மொட்டையடித்து காது குத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அண்ணாவும் தம்பியும் ஊரில் இருப்பதே அபூர்வம். இருவரும் ஊரில் இருக்கும்போது வீட்டில் அனைவரும் ஒன்றுகூடி முக்கியமான விஷயங்களைச் செய்துவிடுவோம். என் மகனுக்கு மொட்டை அடித்ததும் அதுபோன்று அமைந்த ஒரு நன்னாளில்தான். அண்ணா செல்வராகவன் மடியில் அமர்த்தி காது குத்தியும், தம்பி தனுஷ் மடியில் அமர்த்தி மொட்டையடித்தும் குடும்பம் முழுவதும் இணைந்து கொண்டாடிய தருணம் அது!

உங்கள் வீட்டு மருமகள்கள் பற்றி...

எங்களுடைய நாற்பதாவது வயதிலும் அண்ணா, அக்கா, தம்பி என அனைவரும் இணைந்து இருக்கிறோம் என்றால், அதற்கு முதன்மைக் காரணம்... வெளியி லிருந்து எங்கள் குடும்பத்துக்குள் வந்து இணைந் தவர்கள்தாம். கீதாஞ்சலி, ஐஸ்வர்யா, என் அக்காவின் கணவர், என் கணவர் என அவர்கள் நால்வரும் இணைந்துவிட்டால், நாங்கள் அவ்வளவுதான்!

நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் உள்ளோம். ஆனால், அதனால் எந்தவிதமான வேறுபாடும் மனதளவில்கூட யாருக்கும் இருந்ததில்லை. இப்போது நாங்கள் நான்கு பேர் அல்ல, எட்டு பேராகிவிட்டோம். மனைவியுடைய ஆதரவு இல்லாமல், கணவன் அவர்களுடைய குடும்பத்தோடு இணைந்து சந்தோஷமாக இருக்க முடியாது. இன்றுவரை நாங்கள் இப்படி இணைந்திருப்பதற்கு முக்கியக் காரணம், கீதாஞ்சலி மற்றும் ஐஸ்வர்யா என்றே சொல்லலாம். எங்களைப்போலத்தான் எங்களுடைய குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

அம்மா - கணவர் - குழந்தைகள்
அம்மா - கணவர் - குழந்தைகள்

உங்கள் வீட்டு ஹீரோக்கள் பற்றி...

அப்பா இன்றும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால், இனி அவர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அண்ணா, மிகப்பெரிய டிரெண்ட் செட்டர். எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தது அண்ணாதான். ரொம்பவே வித்தியாசமானவர். தம்பி தனுஷ் சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முழுமையாகச் செய்வார். அதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம். அவர் இன்னும் நிறைய வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை!

மகப்பேறு மருத்துவரும் நடிகர் தனுஷின் சகோதரியுமான கார்த்திகாவின் பேட்டியை முழுமையாக அவள் விகடன் இதழில் வாசிக்க > செஃப் ஆக ஆசைப்பட்ட தனுஷ்! - டாக்டர் கார்த்திகா https://bit.ly/3e0Fgmh

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு