Published:Updated:

“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”

ஜி.எம் சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எம் சுந்தர்

- கிருஷ்ணா

“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”

- கிருஷ்ணா

Published:Updated:
ஜி.எம் சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எம் சுந்தர்

கே. பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் அறிமுகமான ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம் நீளமானது. 2021ஆம் ஆண்டு இவர் கரியரில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் ‘சார்பட்டா பரம்பரை’, ‘மண்டேலா’, ‘ரைட்டர்’ ஆகிய படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்பட்டவை. தமிழ், மலையாளம் என பிஸியாக இருக்கும் ஜி.எம் சுந்தரிடம் பேசினேன்.

“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”
“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”

``80, 90களில் முக்கியமான படங்களில் நடிச்சுட்டு திடீர்னு 10 வருஷம் காணாமப்போயிட்டீங்களே?’’

`` `புன்னகை மன்னன்', `சத்யா', `கடமை கண்ணியம் கட்டுப்பாடு', `புலன் விசாரணை'ன்னு தேர்ந்தெடுத்துதான் கதாபாத்திரங்கள் நடிச்சுட்டு இருந்தேன். இருந்தும் பட வாய்ப்புகள் எனக்கு சரியா அமையலை. அதனால என்னோட பிசினஸைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு பக்கம் பிசினஸ் மேல ஈடுபாடு இருந்தாலும் இன்னொரு பக்கம் மனசு முழுக்க சினிமா மீதுதான் இருந்துச்சு. படங்கள் பார்ப்பது, திரைப்பட விழாக்களுக்குப் போறது, வாய்ப்பு தேடுறதுன்னு ஓடிட்டிருந்தேன். அந்தச் சமயத்துல ரிலீஸான படம்தான் `சூது கவ்வும்.' அந்தப் படம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. பாலசந்தர் சாரிடம் கேட்டு வாங்கி எப்படி என்னுடைய முதல் இன்னிங்ஸைத் தொடங்கினேனோ அப்படி நலன் குமாரசாமியிடம் கேட்டு வாங்கி செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கலாம்னு அவர்கிட்ட வாய்ப்பு கேட்டு அமைஞ்சதுதான் `காதலும் கடந்து போகும்' ”

`` `சார்பட்டா பரம்பரை', `மண்டேலா', `ரைட்டர்'னு 2021ல நீங்க நடிச்ச படங்களும் கதாபாத்திரமும் கவனிக்கப்பட்டன. எவ்வளவு சந்தோஷம்?’’

``2021 பல பேருக்கு எப்படின்னு தெரியலை. ஆனா, ஒரு நடிகனா எனக்கு அந்த வருஷம் அற்புதமா இருந்தது. படங்கள் தியேட்டர்ல வெளியாகாத சூழல்ல நெட்பிளிக்ஸ்ல நேரடியா வெளியான படம்தான் `மண்டேலா.' ரொம்ப பக்குவமா யோசிக்கிற டைரக்டர், மடோன் அஸ்வின். படத்தில் என்னுடைய கேரக்டர் நெகட்டிவா இருந்தாலும் எனக்கு இந்தப் படம் பாசிட்டிவிட்டியைக் கொடுத்தது.

பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர்கள் அவர்கிட்ட என்னை `சார்பட்டா பரம்பரை' துரைக்கண்ணு கேரக்டருக்குப் பரிந்துரை செஞ்சிருக்காங்க. அப்புறம், ஆடிஷன் வெச்சு என்னைத் தேர்ந்தெடுத்தாங்க. ரஞ்சித்துடனான பழக்கத்துல அவர் தயாரித்த ‘ரைட்டர்’ படமும் கிடைச்சது.''

“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”
“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”

``மீம்ஸ்ல எல்லாம் வருவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா?’’

``சத்தியமா இல்லை. நான் எவ்வளவோ மீம்ஸ் பார்த்து ரசிச்சிருக்கேன். ஆனா, என்னைப் பார்த்து நிறைய பேர் ரசிச்சிருக்காங்கன்னு கேட்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஒரு நாள் பீச்சில் வாக்கிங் போயிட்டிருந்தேன். எதிர்ல வந்த ஒருத்தர் `சார், என் பொண்டாட்டி இன்னைக்கு உப்புமா செய்றேன்னு சொல்லிட்டு, இட்லி செஞ்சிட்டா. அதுக்கு என் பையன் ‘என்ன ஜோக் காட்டுறியா’ அப்படின்னு உங்கள மாதிரியே பண்ணுறான் சார்'னு சொன்னார். வடிவேலு சார்தான் மீம் உலகின் கதாநாயகன். அந்த வகையில நானும் வந்தது எனக்குப் பெருமைதான்.''

“அஜித் என்னை ஆச்சர்யப்படுத்தினார்!”

`` `வலிமை' பட வாய்ப்பு, முதன்முறை அஜித் மற்றும் இயக்குநர் வினோத்துடன் பணியாற்றியது பற்றி?’’

`` `சதுரங்க வேட்டை' படம் பார்த்துட்டு வினோத்துடைய இயக்கத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டு முயற்சி பண்ணினேன். ஆனா நடக்கல. `மகாமுனி' படத்துல நான் பண்ணுன அந்த நெகட்டிவ் போலீஸ் கேரக்டர் வினோத்துக்குப் பிடிச்சுதான் என்னை `வலிமை' படத்துக்குள்ள கொண்டு வந்தார். அஜித் சார் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பக்கா ஜென்டில்மேன். அவரைப் பார்த்த உடனே, `இந்தப் படத்துல உங்களோட வொர்க் பண்றது ரொம்ப சந்தோஷம் சார்'னு சொன்னேன். `எனக்கும் உங்களோட வொர்க் பண்றது ரொம்ப சந்தோஷம்'னு சொன்னார். `நான் ஒண்ணுமே இல்லையே சார்'னு நான் சொன்னதும், `அப்படி சொல்லாதீங்க. உங்களுக்கு எப்படி ஒரு டைரக்டர் வாய்ப்பு கொடுத்தாரோ அதே மாதிரிதான் நானும் இங்க வந்து இருக்கேன்'னு சொன்னார். எல்லாரும் அவரைப் பத்திச் சொல்லிக் கேள்விப்பட்டதை நேரில் பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பா இருந்தது. அஜித் சாரும் வினோத் சாரும் ரொம்ப நல்ல காம்பினேஷன். ரெண்டு பேரும் ‘Talk Less Work More’ டைப்தான்.''

``மலையாளத்துல ப்ரித்விராஜ் கூட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?''

`` `சார்பட்டா பரம்பரை' படத்தைப் பார்த்துட்டுதான் எனக்கு மலையாளத்துல வாய்ப்பு கிடைச்சது. ப்ரித்விராஜ் சார் படம் பார்த்துட்டு என்னை வாழ்த்தினார். படத்துடைய பெயர் `ஜன கண மன.' ப்ரித்விராஜ் சாருக்கு மெயின் வில்லன். ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. இன்னும் சில பட வாய்ப்புகள் மலையாளத்துல இருந்து வந்துட்டிருக்கு.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism