Published:Updated:

`பக்கத்து வீட்டுப் பையன் லுக் எவ்வளவு கஷ்டம் தெரியுமா...?' - நடிகர் ஹரீஷ் கல்யாணின் ஃபேஷன் பக்கம்

``புதுவிதமா ஒரு காஸ்ட்யூம் டிசைன் பண்ணச்சொல்லி, அதை எக்ஸ்பெரிமென்ட் பண்ணனும்னு ஆசை'' - நடிகர் ஹரீஷ் கல்யாண்

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண்

ஸ்டைலிஷ் ரொமான்டிக் நாயகனோ, அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவோ... பக்கத்து வீட்டுப் பையனின் லுக் மட்டும் மாறாது. அதனாலேயே இளைஞர் வட்டத்திலும் தமிழ்க் குடும்பங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண்

``பக்கத்து வீட்டுப் பையன் லுக்ல இருக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாங்க... எப்பவும் கேஷுவல்ஸ்லயே இருக்க வேண்டியிருக்கு!" என நொந்துகொண்டவரிடம்,

``உங்க ஃபேஷன் பக்கத்தைக் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்...''

``நான் பக்கா ஃபேஷன் ஃப்ரீக். எப்பவும் டிரெண்டியா இருக்கணும்னு நினைப்பேன். ஒவ்வொரு வாரமும், டிரெஸ்ல என்னென்ன அப்டேட்ஸ் வந்திருக்கு, எந்த டிசைனர் - எந்த ஆர்டிஸ்ட்டுக்கு என்ன டிரெஸ்ஸை டிரை பண்ணியிருக்காங்கனு கவனிச்சுகிட்டே இருப்பேன். `ப்ரிண்ட்ஸ் டிரெண்ட்', `அனிமல் டிசைன் பேட்டர்னு' எந்த டிசைன் டிரெண்ட் ஆனாலும் நோட் பண்ணிக்குவேன். சில நேரங்கள்ல, துணிகளுக்குப் பயன்படுத்தப்படற ஃபேப்ரிக் வகைகள் மட்டுமேகூட டிரெண்ட் ஆகும். சின்னப் பசங்க மாதிரி, அதைக்கூட குறிப்பெடுத்துக்குவேன்.

நான் பக்கா ஃபேஷன் ஃப்ரீக். பட் சிக்கல் என்னனா, எதையும் டிரை பண்ண மாட்டேன்.
நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண்

சிக்கல் என்னனா, எதையும் டிரை பண்ணமாட்டேன். காரணம், ஆடியன்ஸ்கிட்ட என்னைப் பத்தின இமேஜ் இப்போ வரைக்கும் `பக்கத்து வீட்டுப் பையன்'னுதான் இருக்கு. இளைஞர்கள் மத்தியிலயும் `நம்மள்ல ஒருத்தன்பா'ங்கற மாதிரியான லுக்கைத்தான் மெயின்டெயின் பண்றேன். புதுசா, வித்தியாசமா டிரை பண்ணிப் பார்க்குறதுல இந்த இமேஜ் ஏதும் பாதிச்சுடக்கூடாதுன்ற ஒரு பயம் சின்னதா இருக்கு.

படங்கள்லயும்கூட, காஸ்ட்யூமுக்கு முக்கியத்துவம் அமையறமாதிரி படங்கள் இன்னும் அமையல. ஸோ, நானாக டிரை செஞ்சு பாக்கறதுல தயக்கம் இருந்துட்டே இருக்கு. ரொம்ப பழக்கப்பட்டதாலயோ என்னவோ, கேஷுவலாதான் ஃபீல் பண்றேன். ஆனா, அந்த வட்டத்தைவிட்டு வெளியே வரணும்னு தோணுது.

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண்
Vikatan

புதுவிதமா ஒரு காஸ்ட்யூம் டிசைன் பண்ணச்சொல்லி, அதை எக்ஸ்பெரிமென்ட் பண்ணனும். நம்ம ஊர் கலாசாரத்தையும் வெஸ்டர்ன் கலாசாரத்தையும் இணைச்சா எப்படி இருக்கும்னு ஒரு யோசனை வந்துச்சு. உதாரணமா `தோத்தி பேன்ட்ஸ் - நார்மல் மிட் சைஸ் குர்தா, கூடவே ஒரு டெனிம் ஜாக்கெட்' - இந்த ஸ்டைல் டிரை பண்ணிப்பார்க்கணும்!

நம்ம ஊர் வேஷ்டிக்கு - டி ஷர்ட்டும், அதுக்கொரு ஜாக்கெட்டும் போட்டா எப்படி இருக்கும்.. அப்படியான ஒரு காம்பினேஷன்தான் நான் சொன்னது! இந்த ஆசைக்கு இன்னமும் முழுமையா வடிவம் கொடுக்கலைனாலும், சீக்கிரமே கண்டிப்பா டிரை பண்ணிப் பார்த்துடுவேன்" என்றார் உற்சாகமான குரலில்.