Published:Updated:

இயக்குநர் எஸ்.ஏ.சி-யின் கடைசி தமிழ்ப் படம்... ஹீரோவாக ஜெய்!

சனா

நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய 70வது படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குநராக இதுவே தன் கடைசி படம் எனவும் அறிவித்துள்ளார். ஆரம்பகாலத்தில் விஜயகாந்த், ரஜினிகாந்த, விஜய் ஆகியோரை வைத்து நிறைய ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் கடைசியாக 'டூரிங் டாக்கிஸ்' என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் இருந்தார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். குறிப்பாக டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராமசாமி கேரக்டரை ஏற்று நடித்தார்.

நடிகர் ஜெய்
நடிகர் ஜெய்

தற்போது, நடிகர் ஜெய் நடிக்கும் படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இது காதல், ஆக்ஷன், காமெடி என இளமை பொங்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா என ஜெய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும், ஜெய்க்கு இது 25 வது படமாகும். இந்தப் படத்துக்கு 'கேப்மாரி' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெய் நடிப்பில் கடைசியாக ரிலீசான 'நீயா 2' வில் கேத்ரினா தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது.