Published:Updated:

`` `பகவதி'ல அப்படி பண்ணதுக்காக விஜய்ணாகிட்ட மன்னிப்பு கேட்கணும்" - ஜெய் ஃபீலிங்ஸ்

ஜெய் விஜய்
ஜெய் விஜய்

`சென்னை 28', `சுப்ரமணியபுரம்', `ராஜா ராணி' என முக்கியமான படங்களில் நடித்தும், ஜெய்யின் கரியர் கிராஃப் ஏனோ உச்சம்தொடவில்லை. காதல், கால்ஷீட் என அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள். ஆனாலும், அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, எப்போதும் பாசிட்டிவ்வாகவே பேசுவார் ஜெய். அவருடன் பேசினோம்.

திறமை, வாய்ப்பு, புகழ் இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர்கள் என்கிற லிஸ்ட்டில் ஜெய்யை சேர்க்கிறது சினிமா உலகம். `சென்னை 28', `சுப்ரமணியபுரம்', `ராஜா ராணி' என முக்கியமான படங்களில் நடித்தும், ஜெய்யின் கரியர் கிராஃப் ஏனோ உச்சம்தொடவில்லை. காதல், கால்ஷீட் என அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள். ஆனாலும், அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு எப்போதும் பாசிட்டிவ்வாகவே பேசுவார் ஜெய். அவருடன் பேசினோம்.

ஜெய்
ஜெய்

``சினிமாவில் நடிகர் ஜெய்-யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?"

``நான் நடிகன் ஆனது தற்செயலா நடந்தது. சின்ன வயசுல இருந்தே இசையமைப்பாளரா ஆகணும்கிறதுதான் என் லட்சியம். சின்ன வயசுல படிக்கிற நேரம்போக மீதி நேரம் எப்பவுமே தேவா அப்பாகூடதான் இருப்பேன். அவர் மியூஸிக் கம்போஸ் பண்றதைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். ஜெய்க்குள்ள இருந்து விரைவில் ஒரு இசைக்கலைஞன் வருவான்... விரைவில் முன்னணி ஹீரோ ஒருத்தரோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும்... அதுல இசையமைப்பாளர்னு என் பெயர் இருக்கும்."

``எல்லோருக்குமே நயன்தாராவைப் பிடிக்கும். ஆனா நயன்தாராவோ, எனக்குப் பிடிச்ச ஹீரோ ஜெய்னு சொல்லியிருக்காங்களே?"

``நயன்தாரா தெலுங்குல சீதா கேரக்டர்ல நடிச்சிட்டு சினிமாவுக்கு ஒரு பிரேக் விட்டிருந்தாங்க. அப்போதான் `ராஜா ராணி' படத்துல நடிக்கிறதுக்கு நயன்தாராவை அணுகினார் அட்லி. `ராஜா ராணி'லதான் நயன்தாராவோட செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாச்சு. அதனால சென்ட்டிமென்ட்டா என்னைப் பிடிச்சிருக்கலாம். அந்தப் படம் ஷூட்டிங் பண்ணும்போதே நானும் நயன்தாராவும் நடிச்ச சீன்ஸுக்கு யூனிட்ல செம அப்ளாஸ் பண்ணாங்க. அப்பவே மக்கள்கிட்டயும் நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நம்பிக்கை வந்துடுச்சு. பெரிய ஹீரோக்கள்கூட நடிச்சிருந்தாலும் ஸ்பாட்ல என்கிட்ட ரொம்ப இயல்பா இருப்பாங்க. என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணாங்க. நல்லா நடிக்கிறீங்கன்னு பாராட்டினாங்க. நிறைய ஐடியாஸ் கொடுத்தாங்க. பல படங்கள் நான் நடிச்சிருந்தாலும் எனக்கு சரியா மேட்ச் ஆன ஹீரோயின்னா அது நயன்தாராதான். `ராஜா ராணி'க்கு அடுத்து `நானும் ரவுடிதான்' படத்துல நான்தான் நயன்தாராவோட நடிக்கிறதா இருந்தது. படத்தோட ஸ்கிரிப்ட்டை முதல்ல என்கிட்டதான் கொடுத்தார் விக்னேஷ்சிவன். ஆனா, கால்ஷீட் பிரச்னையால அந்தப்படத்துல நடிக்க முடியாமப் போயிடுச்சு."

ஜெய்
ஜெய்

``விஜய்கூட நடிச்சிருந்தாலும் நீங்க பெரிய அஜித் ரசிகர்னு சொல்றாங்களே?"

`` `சென்னை 28' படத்தை அஜித் சாருக்கு தனியா போட்டு காண்பிச்சிருக்கார் வெங்கட் பிரபு சார். அந்தப் படத்தைப் பார்த்ததுமே, நைட்டு அஜித் சார்கிட்ட இருந்து போன். `ஜெய், படம் பார்த்தேன். நல்லா நடிச்சிருக்க. நடிப்புல நல்லா கவனம் செலுத்தினா உனக்கு சினிமால பெரிய எதிர்காலம் இருக்கு'னு வாழ்த்தினார். அப்போலயிருந்தே எப்பலாம் டவுணா ஃபீல் பண்றேனோ அப்பல்லாம் தலகிட்ட பேசி சார்ஜ் ஏத்திப்பேன்."

``விஜய்-க்கு தம்பியா `பகவதி' படத்துல நடிச்சீங்க... அந்த அனுபவம் சொல்லுங்க?"

``இயக்குநர் வெங்கடேஷ் சார்தான் முதல் வாய்ப்பைக் கொடுத்தவர். எவ்ளோ நடிகர்கள் இருந்தும் நான் தம்பியா நடிக்கிறதுக்கு ஓகே சொன்ன விஜய் சாருக்கு ரொம்ப நன்றி. `பகவதி' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுல நடந்ததை இப்போ நினைச்சாலும் டென்ஷனாகிடும். விஜய் சாருக்கு தம்பியா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சும் அதை சரியா பயன்படுத்திக்கலையேங்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே இருக்கு. இப்ப டி.வி-ல படம் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி வந்துடும். ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல ஒவ்வொரு நாளும் விஜய் சாரை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன். சினிமா, நடிப்பு, கேமரா ஆங்கிள் எதுவுமே எனக்குத் தெரியாது. அதனால தப்புத்தப்பா நடிப்பேன், என்னோட டயலாக் டெலிவரி ரொம்ப சொதப்பும். முக்கியமா விஜய் சார் காம்பினேஷன்ல நடிக்கும்போது... அவர் சரியா நடிச்சிடுவார், நான் சொதப்பிடுவேன். என்னால அவர் திரும்பத் திரும்ப நடிக்கவேண்டியிருக்கும். அதெல்லாம் இப்ப நினைச்சா கடுப்பா இருக்கு. `பகவதி' படத்துல நான் செஞ்ச தப்பையெல்லாம் சரி செய்யணும்னு ஆசைப்படுறேன். அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும். இப்போ அவரோட நடிக்கிறதைப் பத்தின வேல்யூ தெரியுது. இப்ப அவருக்கு வில்லனா நடிக்கணும்னு ஆசைப்படுறேன். `பகவதி படத்துல நான் பார்த்த சின்னப்பையனா இப்படி நடிக்கிறான்'னு அவரோட வாயாலயே பாராட்டு வாங்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா, வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல."

அடுத்த கட்டுரைக்கு