Published:Updated:

"ஏய் வேம்புலி... யு ஆர் நாட் எ புலிமேன்!" - `சார்பட்டா' சந்தோஷம் பகிரும் ஜான் விஜய்!

ஜான் விஜய்

''ஆரம்பத்துல எம்.ஜி.ஆரோட ரசிகரான மஞ்சா கண்ணன் கேரக்டருக்குத்தான் என்னை கேட்டாங்க. அப்புறம் ரஞ்சித் என்னை கூப்பிட்டு, 'இன்னொரு ரோல் ஒண்ணு இருக்குது... எல்லாரும் வேற சஜஷன் குடுத்தாங்க. ஆனா, அதை நீங்க பண்ணாதான் கரெக்ட்டா இருக்கும்னு எனக்குத் தோணுதுனா!'' என்றார்.

"ஏய் வேம்புலி... யு ஆர் நாட் எ புலிமேன்!" - `சார்பட்டா' சந்தோஷம் பகிரும் ஜான் விஜய்!

''ஆரம்பத்துல எம்.ஜி.ஆரோட ரசிகரான மஞ்சா கண்ணன் கேரக்டருக்குத்தான் என்னை கேட்டாங்க. அப்புறம் ரஞ்சித் என்னை கூப்பிட்டு, 'இன்னொரு ரோல் ஒண்ணு இருக்குது... எல்லாரும் வேற சஜஷன் குடுத்தாங்க. ஆனா, அதை நீங்க பண்ணாதான் கரெக்ட்டா இருக்கும்னு எனக்குத் தோணுதுனா!'' என்றார்.

Published:Updated:
ஜான் விஜய்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படத்தில் மிக முக்கியமான கேரெக்டராக ஆங்கிலோ இந்தியன் கதபாத்திரத்தில் 'டேடி' கெவினாக அசத்தியிருக்கிறார் ஜான் விஜய்.

''எனக்கு முன்னாடி ரொம்ப பிடிச்ச படம் 'ஓரம்போ'. இப்போ 'சார்பட்டா'தான். அதிலும் ஆர்யா. இதிலும் ஆர்யா. 15 வருஷத்துக்கு பிறகு மறுபடியும் ஆர்யாவோட நடிச்சிருக்கேன். அங்கே இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி ஃபேவரிட் மாதிரி, இங்கே தம்பி ரஞ்சித். என்னுடைய சினிமா கரியர்ல இவங்க மூணு பேருமே முக்கியமானவங்க. ஏன்னா, என்னை முதல்ல அடையாளம் காட்டின படம் 'ஓரம்போ'. அடுத்து எல்லோருக்கும் என்னை பிடிக்கவைக்கிற படமா 'கபாலி' இருந்துச்சு. 'சார்பட்டா'ல ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் கதைக்கான ஆட்களா இருப்பாங்க. ரஞ்சித் ஓவியராவும் இருக்குறதால எல்லாருடைய லுக்கும் இப்படித்தான் இருக்கணும்னு ஸ்கிரிப்ட்லேயே வரைஞ்சு வெச்சிருந்தார்.

johnvijay
johnvijay

ஆரம்பத்துல எம்.ஜி.ஆரோட ரசிகரான மஞ்சா கண்ணன்னு ஒரு கேரக்டருக்குத்தான் என்னை கேட்டாங்க. அப்புறம் ரஞ்சித் என்னைக் கூப்பிட்டு, 'இன்னொரு ரோல் ஒண்ணு இருக்குது. அதை நீங்க பண்ணாதான் கரெக்ட்டா இருக்கும்னு எனக்கு தோணுதுனா... எல்லாரும் வேற சஜஷன் குடுத்தாங்க. ஆனா, எனக்கு என்னமோ அதை நீங்க பண்ணா நல்லாயிருக்கும்'னு சொன்னார். அப்ப அதையே பண்ணிடுறேன்னு சொல்லி பண்ணினதுதான் கெவின் கேரக்டர். நான் லயோலாவில் படிச்சதால, ஆங்கிலோ இந்தியன் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் உண்டு. அப்புறம் வண்ணாரப்பேட்டையிலும் ஃப்ரெண்ட்ஸ் உண்டு. அதனால அவங்களோட மேனரிசம், ஸ்லாங், இங்லீஷ் எல்லாம் எனக்கு இயல்பாகவே வந்திடுச்சு. மெட்ராஸ் தமிழும், இங்கிலீஷும் கலந்துகட்டி பேசியிருப்பேன்.

ஆனா, ஒரு விஷயம் ஒரிஜினல் ஆங்கிலோ இந்தியன்ஸ் எல்லாரும் மெல்போர்ன் போயிட்டாங்க. இங்கே இருக்கறவங்களுக்கு நார்மல் இங்கிலீஷே வரமாடேங்குது. சில நேரம் தமிழ்ல பேசியிருப்பேன். ரஞ்சித்தோட அசிஸ்டென்ட் ஜெனி, சர்க்கஸ்ல ரிங் மாஸ்டர் மாதிரி டப்பிங்ல என்கிட்ட வேலை வாங்கிட்டாங்க. படத்துல நான் ஃபுல் சீக்குவென்ஸும் கரெக்ட்டா பேசினதுக்கு ஜெனிதான் காரணம். மஞ்சா கண்ணனா மாறன் நடிச்சார். அவர் நைஸ் மேன். ஸ்பாட்டுல எங்களை நல்லா கவனிச்சுக்கிட்டார். இந்த கொரோனா அவர் உயிரை அநியாயாமா கொண்டுபோனதுல வருத்தமா இருக்கு.

johnvijay
johnvijay

படத்துல டயலாக்லயும் நான் கூடுதலா கவனம் செலுத்தினேன். ஸ்கிரிப்ட்ல 'வேம்புலி'னு மட்டும் இருந்து. நான் பேசுறப்ப ''ஏய் வேம்புலி... யூ ஆர் நாட் புலிமேன். நீ மூக்கில வர்ற சளிமேன்''னு ஸ்லாங்கா பேசினதுக்கு நிறைய பாராட்டுகள். படம் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு. மக்கள் கொண்டாடுறதை உழைச்ச உழைப்புக்கு கிடைச்ச பலனாத்தான் பார்க்குறேன்' என மனநிறைவோடு நிறைவு செய்தார் ஜான் விஜய்.