Published:Updated:

``ரஜினி சார், ஜிப்பாவை கழட்டுங்கன்னு சட்டையில்லாம என்னை நிக்கவெச்சார்... ஏன்னா?" - ஜான் விஜய்

ஜான் விஜய்

``ரஜினி சார் கூட நடிச்சதுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களுக்கும் என்னைத் தெரிய ஆரம்பிச்சது. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. இதுக்கு இரஞ்சித்துக்கும் ரஜினி சார்க்கும் நன்றி சொல்லணும்.'' #4YearsofKabali

``ரஜினி சார், ஜிப்பாவை கழட்டுங்கன்னு சட்டையில்லாம என்னை நிக்கவெச்சார்... ஏன்னா?" - ஜான் விஜய்

``ரஜினி சார் கூட நடிச்சதுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களுக்கும் என்னைத் தெரிய ஆரம்பிச்சது. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. இதுக்கு இரஞ்சித்துக்கும் ரஜினி சார்க்கும் நன்றி சொல்லணும்.'' #4YearsofKabali

Published:Updated:
ஜான் விஜய்

''சினிமாவுல நடிகனா ஆகுறதுக்கு முன்னாடி இயக்குநர் ஆகணும்னு வந்தவன் நான். அப்போ டைரக்‌ஷன்காக முயற்சி பண்ணிட்டு இருந்தப்போ ரஜினி சாரைப் பார்த்து 'கதிர்வேலன்'ன்ற ஸ்க்ரிப்ட்டை சொன்னேன். டபுள் ஹீரோ சப்ஜெக்ட். ரஜினி சார்க்கு கதை பிடிச்சிருந்தது. இருந்தும் இந்தப் படத்தை பண்ண முடியாம போயிருச்சு. இதுக்குப் பிறகு, 'பாபா' படத்தின்போது, ரஜினி சாரை மீட் பண்ணப் போயிருந்தேன்.

அப்போ, நான் தலையில் தலப்பா கட்டிக்கிட்டு ஜிப்பா போட்டிருந்தேன். என் டிரெஸ்ஸிங் ஸ்டைல் ரஜினி சாருக்குப் பிடிச்சிருச்சு. உடனே, என் ஜிப்பாவைக் கழட்டச் சொல்லி அதை வாங்கிக்கிட்டார். அதேமாதிரி, தலப்பாவும் வாங்கி வெச்சுக்கிட்டார். அதுதான், ரஜினி சாரோட `பாபா' லுக். நான் வெறும் உடம்போடு சட்டை இல்லாம நின்னுக்கிட்டு இருந்தேன். அவர் சட்டையை என்கிட்ட கொடுத்தார். அந்தச் சட்டையை நான் இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரஜினியை `கபாலி' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் பார்த்தேன்'' என ரஜினியுடனான தனது பயணத்தையும், 'கபாலி' படத்தில் நடித்ததைப் பற்றியும் பேசத்தொடங்குகிறார் நடிகர் ஜான் விஜய்.

''விளம்பர படங்கள்ல வேலை பார்த்திருந்த நேரத்துல ஸ்டோரி போர்ட் ஆர்டிஸ்ட் தேவைப்பட்டார். அப்போ, என்னோட நண்பர் ஒருத்தர் 'இரஞ்சித்னு ஒருத்தர் இருக்கார், நல்ல ஆர்டிஸ்ட்'னு சொன்னார். அப்போ, அவரை நேர்ல பார்த்துப் பேச முடியல. அதுக்குப் பிறகு இரஞ்சித் இயக்குநர் ஆகிட்டார். 'மெட்ராஸ்' படத்தை நாலு தடவை பார்த்திருப்பேன். ஆனா, இந்தப் படத்தோட இயக்குநர் இரஞ்சித் பற்றி எனக்கு பெருசா தெரியல. ஒருமுறை ஏர்போர்ட்ல இருந்து வெளியே வர்றப்போ, 'அண்ணே, என்னோட அடுத்த படம் சம்பந்தமா உங்கிட்ட கதை சொல்லணும்'னு இரஞ்சித் சார்கிட்ட இருந்து போன் வந்தது. என்ன படம்னு தெரியாது. எந்த டைரக்டர் கூப்பிட்டாலும் நேர்ல போய் பார்க்குறது வழக்கம். அதே மாதிரி இரஞ்சிதை போய் பார்த்தேன்.

'கபாலி'
'கபாலி'

'என்ன படம், யார் ஹீரோ'னு கேட்டேன். 'உண்மையா தெரியாதா'னு விசாரிச்சார். 'சத்தியமா தெரியாது பா'னேன். ஏன்னா, எனக்கு பெருசா படிக்கிற பழக்கம் கிடையாது. அதனால, சினிமா பற்றி ஏதாவது நியூஸ் வந்திருந்தாலும் படிச்சிருக்க மாட்டேன். இதனால, ரஜினியை வெச்சு இரஞ்சித் டைரக்‌ஷன் பண்ண இருக்கார்னே தெரியாம இருந்திருக்கேன். 'அண்ணே, தலைவர் கூட படம் முழுக்க நீங்க டிராவல் ஆகுற மாதிரியான ஸ்க்ரிப்ட்'னு சொன்னார். எனக்கு குஷியாகிருச்சு. ஏன்னா, அதுவரைக்கும் தலைவர் கூட நடிக்க வாய்ப்பு வரல. உடனே, ஓகே சொல்லிட்டேன்.

`கபாலி' படத்தோட அமீர் கேரக்டருக்காக தொப்பை போட்டு உடம்பையெல்லாம் ஏத்தியிருந்தேன். கிட்டதட்ட 90 நாள்கள் வரைக்கும் படத்தோட ஷூட்டிங் போச்சு. மலேசியா, கோவா, சென்னைனு சுத்திக்கிட்டு இருந்தோம். தலைவருக்கு முதல்ல என்னை அடையாளம் தெரியல. ஏன்னா, நாங்க சந்திச்சு பல வருஷங்கள் கடந்திருந்தன. அப்புறம் அடையாளம் கண்டுபிடிச்சிட்டார். படத்துல, ரஜினி சாரோட நெருங்கிய நண்பரா நடிச்சிருப்பேன். அதனால, ஷூட்டிங் இல்லாதப்போவும் நெருங்கிய நண்பர் மாதிரியே பழகுனார்.

ரஜினி
ரஜினி

நான் நடிச்சிருந்த 'மெளனகுரு', 'ஓரம் போ' படங்களைப் பார்த்திருந்தார். இதைப் பற்றியெல்லாம் பேசினார். முக்கியமா, 'ஓரம் போ' படத்துல 'இது எப்படியிருக்கு'னு டயாலக் பேசியிருப்பேன். ' '16 வயதினிலே' படத்துல நான் பேசியிருந்தது மாதிரியே பேசி நடிச்சிருந்தீங்க, நல்லாயிருந்தது'னார். ரொம்ப கம்ஃபோர்ட் ஸோன்ல வெச்சிருந்தார். சூப்பர் ஸ்டார் கூட நடிக்குறோம்னு பயமில்லாம இருக்க வெச்சார். நாளடைவில நிறைய விஷயங்கள் நாங்க பேச ஆரம்பிச்சிட்டோம். நிறைய ஜோக்ஸ் அடிப்பார். ஒருநாள் ஷூட்டிங்கின்போது என்னோட மனைவி நண்டு சூப் செஞ்சு கொண்டு வந்தாங்க. இதை ரஜினி சாரும் சாப்பிட்டு நல்லாயிருக்குனு பாராட்டுனார். இந்தப் படத்துக்குப் பிறகும் போன் செய்து பேசுவார்.

ரஜினி சார்கூட நடிச்சதுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களுக்கும் என்னை தெரிய ஆரம்பிச்சது. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. இதுக்கு இரஞ்சித்துக்கும் ரஜினி சாருக்கும் நன்றி சொல்லணும். படத்தோட கடைசி நாள் ஷூட்டிங்கின்போது தலைவர் என்னைக் கட்டிப்பிடிச்சார். இதை மறக்கவே முடியாது. படம் ரிலீஸுக்குப் பிறகு எங்கேயாவது போனாகூட, 'அண்ணா, உங்களை ஒருமுறை கட்டிப் பிடிச்சிக்குறேன்'னு நிறைய தலைவர் ரசிகர்கள் வந்து கட்டிப்பிடிப்பாங்க. ஏன்னா, 'தலைவர் உங்களை கட்டிப் பிடிச்சிருக்கார்'னு சொல்லுவாங்க. இந்தளவுக்கு பாசமான ரசிகர்கள் தலைவருக்கு இருக்காங்க. மலேசியாவுல எக்கசக்கமான ரசிகர்கள் தலைவருக்கு இருக்காங்க. எங்கே ஷூட்டிங் நடந்தாலும் வந்துருவாங்க. ஒருமுறை ரசிகர்கள் கூட்டத்துல தலைவர் மாட்டிக்கிட்டார். கூட்டத்துல இருந்து வெளியே வந்த தலைவர் கையிலெல்லாம் கீறி ரத்தம் வந்திருந்தது. அன்பின் மிகுதியால் ரசிகர்கள் இப்படிப் பண்ணியிருந்தாங்க.

பா. இரஞ்சித்
பா. இரஞ்சித்

வெறித்தனமான ரஜினி ரசிகர்களை மலேசியாவுல பார்க்கலாம். தலைவருடைய பர்ஃபாமன்ஸுக்கு ஏத்த மாதிரியான படம் இது. இன்டர்வெல் காட்சியில கூட எமோஷனல் டச் வெச்சுதான் இரஞ்சித் சார் முடிச்சிருப்பார். இதை ரஜினி சாரோட ரசிகர்கள் ஏத்துக்கவே ஒரு வாரம் தேவைப்பட்டது. ஆனா, ஃபேமிலி ஆடியன்ஸ் படத்தை ரசிச்சு பார்த்தாங்க. படத்தோட வெற்றியெல்லாம் தாண்டி, 'தலைவர் கூட ஒரு படத்துல நடிச்சிட்டோம்'னு சந்தோஷமா இருந்தேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் நிறைய பேர் செம ஹாப்பியா இருந்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தப்போ, 'மாமா, உனக்காக நாங்க பார்ட்டி கொண்டாடிக்கிட்டு இருக்கோம்'னு போன்ல பேசுவாங்க. 'கபாலி' படத்துலயும் எமோஷனலான கேரக்டர்ல நடிச்சதுக்கு ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன். இந்தப் படம் மூலமா இரஞ்சித்ங்கிற தம்பி எனக்கு கிடைச்சிருக்கார்" என்று முடித்தார் ஜான் விஜய்.