Published:Updated:

``அமீர்கான் கூட நடிக்க ஆடிஷன்... அங்க என்ன நடந்துச்சுன்னா?!’’- காளி வெங்கட்

Kali Venkat

`அமீர் கான் நடிக்கிற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்துடைய பாலிவுட் ரீமேக்ல நடிக்க என்னை ஆடிஷன் பண்ணாங்க.’

``அமீர்கான் கூட நடிக்க ஆடிஷன்... அங்க என்ன நடந்துச்சுன்னா?!’’- காளி வெங்கட்

`அமீர் கான் நடிக்கிற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்துடைய பாலிவுட் ரீமேக்ல நடிக்க என்னை ஆடிஷன் பண்ணாங்க.’

Published:Updated:
Kali Venkat

ஹீரோ, வில்லன் என்றில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் பலர். ஆனால், வழக்கமான கதாபாத்திரங்களாக இல்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் சேஞ்ச் ஓவர் கொடுக்கும் வெகுசில குணச்சித்திர நடிகர்களில் காளி வெங்கட் முக்கியமானவர். 'முண்டாசுப்பட்டி' அழகு மணி, 'மாரி' கான்ஸ்டபிள், 'இறுதிச்சுற்று' சாமுவேல், 'கொடி' பகத்சிங், 'மெர்சல்' ஆட்டோ டிரைவர் என இவரது ஒவ்வொரு கேரக்டரும் கவனிக்கப்பட்டது. இப்போது 'பெட்ரோமாக்ஸ்', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவருடன் பேசினேன்.

''சமீபமா உங்களை திரையில் அதிகமா பார்க்கமுடியுறதில்லையே?''

`` `எல்லா படங்களிலும் நீங்கதான் இருக்கீங்க'னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ நான் நடிச்ச நிறைய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாச்சு. ஆனா, இப்போ நான் நடிச்சு முடிச்ச நிறைய படங்கள் வெளியாகாமல் இருக்கு. அதனால என்னை அதிகமா பார்க்கமுடியாத சூழல். மத்தபடி என் வேலையை நான் செஞ்சுக்கிட்டேதான் இருக்கேன். எல்லா படங்களும் வெளிவர தயார்நிலையிலதான் இருக்கு. 'பெட்ரோமாக்ஸ்' ரிலீஸ் ஆகிடுச்சுன்னா அடுத்தடுத்த படங்கள் வெளியாகும்னு நம்புறேன்."

தமன்னாகூட 'பெட்ரோமாக்ஸ்' படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

Kali Venkat
Kali Venkat

"ரொம்ப அருமையான அனுபவம். செம கலாட்டாவான படமா இருக்கும். யோகிபாபு, முனீஷ்காந்த், சத்யன் சார், விஜய் டிவி டி.எஸ்.கேனு பெரிய பட்டாளமே இருக்காங்க. 'முண்டாசுப்பட்டி' படத்துக்குப் பிறகு, எனக்கும் முனீஷ்காந்த்துக்கும் இந்தப் படத்துல நல்ல ஹியூமர் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியிருக்கு. அவர்கூட சிரிக்காமல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்தது. யோகிபாபு போர்ஷன் வேற லெவல்ல இருக்கும். சத்யன் சார் ரொம்ப நாள் கழிச்சு படம் பண்றார். தெலுங்குல டாப்ஸி நடிச்ச 'அனந்தோ பிரம்மா' படத்துடைய ரீமேக்தான் இது. ஆனால், நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி நிறைய விஷயங்கள் மாத்தியிருக்கார், இயக்குநர் ரோஹின். வழக்கமான ஹாரர் படமா இல்லாமல் எமோஷனலா இருக்கும். இதுவரை டயலாக், ரியாக்‌ஷன் மட்டும் பண்ணிட்டு இருந்த என்னை இந்தப் படத்துல ரோப் கட்டி தொங்கவிட்டுட்டாங்க. ஸ்டன்ட் சீன் எடுக்கும்போது எப்படா பேக் அப் சொல்லுவாங்கன்னு ஏங்கிட்டு இருந்தேன்."

'சூரரைப் போற்று' படத்துல நடிச்ச அனுபவம்?

"'இறுதிச்சுற்று' படத்துல எனக்கு ஹீரோயின் அப்பா கேரக்டர்ல நடிக்க வெச்சாங்க சுதா மேடம். இதுல கிராமத்துல இருக்கிற சூர்யா சாருடைய நண்பனா நடிச்சிருக்கேன். 25 நாள் மதுரையில ஷூட்டிங் நடந்தது. சுதா மேடம் எப்படி வேலை செய்வாங்கனு எனக்குத் தெரியும். அதனால ரொம்ப ஈஸியா இருந்தது. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு, டைம் எடுத்து அவங்க பண்ற படம் இது. அதனால ஸ்கிரிப்ட்ல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. சூர்யா சார்கூட நடிச்சது மறக்கவே முடியாதது. நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். 'மகாமுனி' படத்துல நான் நடிச்சிருந்தது ஸ்னீக் பீக்ல வந்திருந்ததைப் பார்த்துட்டு பாராட்டினார். 'அதுல நான் ஒரு சீன்தான் நடிச்சேன். அதுவும் ஸ்னீக் பீக்ல வந்திடுச்சு சார்'னு சொன்னேன். 'குறைவான சீனோ அதிகமான சீனோ உங்களுக்குக் கொடுத்ததை எப்படிப் பண்ணீங்கன்னுதான் முக்கியம். அதுல சூப்பரா நடிச்சிருந்தீங்க'னு சொன்னார். ரொம்பத் தெளிவான மனிதர். அவர்கூட இருந்ததுனால அந்தத் தெளிவு எனக்குள்ளேயும் வந்திடுச்சு. அதே சமயம் ரொம்ப ஜாலியா இருந்தார். "

ஹீரோயின் அபர்ணா பாலமுரளிக்கும் உங்களுக்கும் காம்பினேஷன் இருந்ததா?

Kali Venkat
Kali Venkat

``எங்களுக்கு காம்பினேஷன் இருந்தது. சிம்பிளான ஹீரோயின். செம பர்ஃபார்மர். நிச்சயம் இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய படங்கள்ல கமிட்டாவாங்க. எனக்கு மலையாளம் தெரியும். அபர்ணாகிட்ட பேசும்போது மலையாளத்துலதான் பேசுவேன். ரொம்ப ஜாலியான பொண்ணு. சுதா மேடமும் கேமராமேன் நிகேத்தும் இங்கிலீஷ்லதான் பேசிக்குவாங்க. அவங்க பேசுறதைப் பார்த்து நானும் கொஞ்சம் இங்கிலீஷ் பேச கத்துக்கிட்டேன். கருணாஸ் சார் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவரும் சூர்யா சாரும் 'நந்தா' படத்துல இருந்தே பழக்கம். அந்த அனுபவம் பத்தி எல்லாம் சொல்லிடுவாங்க. சுதா மேடம் கண்டிப்பான டீச்சர்; நான் ஸ்டூடன்ட். என்னை அவங்க பாராட்டவும் மாட்டாங்க; திட்டவும் மாட்டாங்க. ஸ்ட்ரிக்டான டீச்சர் கொடுத்த ஹோம் வொர்க்கை சரியா செய்ற ஸ்டூடன்ட் மாதிரி நான் என் வேலையைச் சரியா செஞ்சுடுவேன்."

என்னென்ன படங்கள் கைவசம் இருக்கு?

"'பெட்ரோமாக்ஸ்', 'சூரரைப் போற்று' தவிர 'டைட்டானிக்', 'யங் மங் சங்', 'ரேஞ்சர்', '1945', 'பற பற பற', அதர்வாகூட ஒரு படம்னு நிறைய படங்கள் இருக்கு. அமீர் கான் நடிக்கிற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்துடைய பாலிவுட் ரீமேக்ல நடிக்க என்னை ஆடிஷன் பண்ணாங்க. ஆனா, அதுல செலக்ட் ஆகலை. எனக்கு பாலிவுட் வாய்ப்பு வந்ததையே ரொம்ப பெருமையா சந்தோஷமா நினைக்கிறேன். ஒன்றரை பக்க இந்தி வசனத்தை முன்னாடியே கொடுத்துட்டாங்க. நான் அதை ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணி நடிச்சுட்டு வந்தேன்."

படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?

Kali Venkat
Kali Venkat

"'இறுதிச்சுற்று' படத்துல அப்பா கேரக்டர் பண்ணவுடன் அடுத்தடுத்து நிறைய அப்பா கேரக்டர்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. 'மாரி' படத்துக்குப் பிறகு, போலீஸ் கேரக்டராவே வாய்ப்புகள் வந்துச்சு. அதனால சில படங்களைத் தவிர்த்துட்டேன். தாத்தா கேரக்டர்ல கூட நடிக்கத் தயார். ஆனா, அடுத்தடுத்து தாத்தாவாகவே நடிக்க முடியாதுல. ஒரேயொரு வேண்டுகோள் என்னன்னா, ஒரு கேரக்டர்ல நடிச்சா அதே கேரக்டர்லதான் தொடர்ந்து நடிப்பாங்கன்னு நினைச்சுக் கூப்பிடாதீங்க. ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்படுறேன்."