Published:Updated:

``கார்த்திக் சுப்புராஜ் டென்ஷனானா எப்படித் திட்டுவார் தெரியுமா?'' - `ஜகமே தந்திரம்' கலையரசன்

கலையரசன்
கலையரசன்

கார்த்திக் சுப்புராஜின் 'ஜகமே தந்திரம்' ஷூட்டிங் முடித்துவிட்டு இப்போது பா.இரஞ்சித் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், கலையரசன். 'மெட்ராஸ்' அன்பு கேரக்டர்தான் இவரின் விசிட்டிங் கார்டு. சினிமாவில் அடுத்தடுத்த உயரங்கள்தொட கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் கலையரசனிடம் பேசினோம்.

''கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல நடிக்கணும்ங்கிறது என்னோட ஆசை. அவர் அப்பாகூட ரெண்டு படம் பண்ணியிருக்கேன். அப்போ, அவர்கிட்ட 'கார்த்திக் சார் படத்துல நடிக்கணும்'னு சொல்லிட்டே இருப்பேன். ஏதோ காரணங்களால அது தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. இந்தச் சூழலில்தான் ஒருநாள் 'ஜகமே தந்திரம்' படத்துக்கான ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. சீன் பேப்பர் கொடுத்து நடிக்கச் சொன்னாங்க. நடிச்சதுக்குப் பிறகு எதுவும் சொல்லலை. ரெண்டு வாரத்துக்கு அப்புறம் திடீர்னு கார்த்திக் சார்கிட்ட இருந்து போன். 'தனுஷ் ஹீரோவா நடிக்கிறார். நீங்க முக்கியமான ரோல் பண்றீங்க'ன்னு சொன்னார். அப்புறம் படத்தோட கதை, என்னோட கேரக்டர்லாம் சொன்னாங்க. படத்தின் கதையும், என்னோட கதாபாத்திரமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. லண்டன்ல வசிக்கிற இலங்கைத் தமிழரா நான் நடிச்சிருக்கேன். நானேதான் எனக்கு டப்பிங்கும் பேசியிருக்கேன். கார்த்திக் சார் டீம்ல இருந்த சோமிதரன், இலங்கைத் தமிழர். இவர் எழுத்தாளுரும்கூட. சோமி, எனக்கு இலங்கைத் தமிழ் உச்சரிப்புகளைச் சொல்லிக்கொடுத்தார்."

கலையரசன்
கலையரசன்

``கார்த்திக் சுப்புராஜ் சார், ஸ்பாட்டுல வேலை வாங்குறதே செம ஸ்வீட்டா இருக்கும். ஜாலியாதான் இருப்பார். அதிகமா டென்ஷனாகி அவர் அதிகபட்சமா சொன்ன வார்த்தை 'இடியட்'தான். இதை மீறி எதுவும் சொல்ல மாட்டார். நமக்குத் தோணுற ஐடியாவுல நடிச்சி சீன் நல்லாயிருந்தா உடனே ஓகே சொல்லிடுவார். அவர்கிட்ட எந்த ஈகோவும் இருக்காது."

இந்தப் படத்துக்காகத்தான் முதல் முறையா வெளிநாட்டுக்கு ஷூட்டிங் போயிருக்கேன். முப்பது நாள் வரைக்கும் லண்டன்ல இருந்தோம். அதுல எனக்கான ஷூட்டிங் 25 நாள் வரைக்கும் நடந்தது. சந்தோஷ் நாராயணன் சாரும் லண்டனுக்கு வந்திருந்தார். ரொம்ப ஜாலியா இருந்த இந்த ஸ்பாட்ல நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அதுக்குக் காரணம் தனுஷ் சார். அவர் நடிப்பைப் பார்த்து அவ்ளோ விஷயங்கள் கத்துக்கிட்டேன். படத்துல அவரோட டீம்ல அஞ்சு பேர் இருப்பாங்க. அதுல நானும் ஒருத்தன். நம்மகூட நடிக்குற நடிகரோட சப்போர்ட் இருந்தாதான் நமக்கும் எனர்ஜி வரும். இந்த விஷயத்துல பெரிய உதவியா இருந்தது தனுஷ் சாரோட நடிப்பு. டேக்ல ஒரு மேஜிக் நிகழ்த்திக் காட்டிடுவார். அவரை ஏற்கெனவே ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல சேர்ந்து வேலைபார்த்தவுடனே இன்னும் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.

 ஜோஜூ ஜார்ஜ்
ஜோஜூ ஜார்ஜ்

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் சாரோட படங்களைப் பார்த்திருக்கேன். நடிக்குறார்னே தெரியாத அளவுக்கு அவரோட நடிப்பு இருக்கும். அவர்கூட எனக்கான சீன்ஸ் படத்துல இருக்கு. சீனியரா இருந்தாலும் சின்னப் பையன் மாதிரி விளையாடிக்கிட்டே சுத்திட்டிருப்பார். நல்ல அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கு'' என்ற கலையரசனிடம் சில கேள்விகள் கேட்டோம்.

'மெட்ராஸ்' அன்பு கதாபாத்திரம் பேசப்பட்ட மாதிரி இந்தப் படத்தின் கதாபாத்திரமும் பேசப்படுமா?

'மெட்ராஸ்' அன்பு கேரக்டர் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. பெரிய சுவர் அது. அதைத்தாண்டி போகத்தான் முயற்சி பண்றேன். எந்த ரோல் பண்ணாலும் அதுகூடத்தான் எல்லாரும் ஒப்பிட்டுப் பேசுறாங்க. பார்ப்போம்.

`இதனாலே எனக்கும் இயக்குநருக்கும் விவாதம் வரும்!' - `தயாரிப்பாளர்' ஏ.ஆர்.ரஹ்மான்

ஆர்யா ஹீரோவா நடிக்கிற பா.இரஞ்சித்தின் அடுத்த படத்துலயும் நடிச்சிட்டு இருக்கீங்க... அதுல என்ன ஸ்பெஷல்?

இரஞ்சித் அண்ணா படத்துல நடிக்குறதுனா எனக்கு செம சந்தோஷம். அவரோட தம்பி மாதிரிதான் என்னை பார்த்துக்குவார். ஆர்யாவோட நண்பனா நான் இந்தப் படத்துல நடிச்சிட்டிருக்கேன். இந்தப் படத்துக்கு முன்னாடி இருந்தே ஆர்யாவை நல்லா தெரியும். ரெண்டு பேரும் ஒண்ணா சைக்ளிங் போவோம். ஃபிட்னஸ் பண்ணுவோம். அதனால அவர்கூட சேர்ந்து நடிக்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. இது ஒரு ஸ்போர்ட்ஸ் பீரியட் படம். பாக்ஸிங் கதை. ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. நிச்சயம் எங்க எல்லோருடைய கேரியர்லயும் மிக முக்கியமான படமா இருக்கும்'' என்றார் கலையரசன்.

நடிப்புல நாக்-அவுட் பண்ணுங்க பிரதர்!

``துல்கர் இதுல செம ஸ்ட்ரிக்ட்; விஜய் தேவரகொண்டா கொஞ்சம் சோம்பேறி!" - ரீது வர்மா ஷேரிங்ஸ்
அடுத்த கட்டுரைக்கு