Published:Updated:

சர்தார் சக்சஸ் மீட்: `கைதி 2', `சர்தார் 2', `விஜய் 67' பரபர அப்டேட்களைக் கொடுத்த கார்த்தி!

நடிகர் கார்த்தி

"சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளோம். 'கைதி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை அடுத்த வருடம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்." - கார்த்தி

சர்தார் சக்சஸ் மீட்: `கைதி 2', `சர்தார் 2', `விஜய் 67' பரபர அப்டேட்களைக் கொடுத்த கார்த்தி!

"சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளோம். 'கைதி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை அடுத்த வருடம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்." - கார்த்தி

Published:Updated:
நடிகர் கார்த்தி
இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ஸ்பை திரில்லர் திரைப்படமான `சர்தார்' தீபாவளியையொட்டி கடந்த அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, `சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
'சர்தார்' திரைப்படத்தின் வெற்றி விழா
'சர்தார்' திரைப்படத்தின் வெற்றி விழா

இது பற்றிப் பேசிய நடிகர் கார்த்தி, "இந்த வருடம் வெளியான 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' என மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 'சர்தார்' திரைப்படத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிப் பேசியுள்ளோம். நான் அமெரிக்காவில் படித்தபோது அங்குள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் எப்போதும் குளிர்ச்சியாக வைக்கப்பட்டிருக்கும். அது அங்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வெப்பம் அதிகமானால் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து நச்சுத்தன்மை வெளிவரும். ஆனால் நம் நாட்டில் அப்படியில்லை. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. 'சர்தார்' படத்தின் கதையைக் கேட்ட பிறகு வெளியில் தண்ணீர் வாங்குவதைத் தவிர்த்துவிட்டேன்.

சர்தார் ஸ்பை திரில்லர் திரைப்படம். எனவே இன்று பல ஓடிடி தளங்களில் வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்க்கும் திரைப்பட ரசிகர்கள் 'சர்தார்' திரைப்படத்தை ஹாலிவுட் படங்களுடன் கம்பேர் செய்து பார்ப்பார்கள் என்று தெரியும். எனவே கவனத்துடன் இத்திரைப்படத்தைக் கையாண்டோம்" என்று கூறினார்.

மேலும், "சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளோம். 'கைதி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை அடுத்த வருடம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். லோகேஷ் இயக்கும் தளபதி-67 படத்தில் 'நான் வருவேனா இல்லையா' என்று எனக்குத் தெரியாது. அது அந்தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் எடுக்கும் முடிவு" என்று சில அப்டேட்களையும் கொடுத்தார்.