Published:Updated:

"சாவறதா இருந்தாலும் சண்டைபோட்டு சாவணும் சார்!" பரபர லாரி சேஸுடன் மிரட்டும் 'கைதி' டிரெய்லர்

’மாநகரம்’ படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ’கைதி’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்க படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. தீபாவளி தினத்தன்று `பிகில்' திரைப்படம் வரலாம் என்ற தகவல் வெளியான நிலையில், `கைதி' படமும் தீபாவளிப் பண்டிகையை நோக்கி வெளியாக இருக்கிறது. ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் விறுவிறு டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

```விஜய் 64' டெக்னிக்கல் டீம், `கைதி' நைட் ஷூட் அனுபவம், `லக்கி சார்ம்' கார்த்தி!'' - லோகேஷ் கனகராஜ்
அடுத்த கட்டுரைக்கு