Published:Updated:

"ரூ.100 செலவழிச்சாக்கூட, கரெக்ட்டா குறிச்சு வச்சுக்கோங்க- கமல் சொன்ன அட்வைஸ்"- துணைத்தலைவர் கருணாஸ்

கமலுடன் நடிகர் சங்க நிர்வாகிகள்.

''பொதுக்குழுவில் பங்கேற்காத நடிகர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த எண்ணமும் இல்லை. ஏன்னா, பாதிபேர் வெளியூர், வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்''

"ரூ.100 செலவழிச்சாக்கூட, கரெக்ட்டா குறிச்சு வச்சுக்கோங்க- கமல் சொன்ன அட்வைஸ்"- துணைத்தலைவர் கருணாஸ்

''பொதுக்குழுவில் பங்கேற்காத நடிகர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த எண்ணமும் இல்லை. ஏன்னா, பாதிபேர் வெளியூர், வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்''

Published:Updated:
கமலுடன் நடிகர் சங்க நிர்வாகிகள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். இதன் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 8-ம் தேதி அன்று சென்னையில் நடக்கிறது. இதனையொட்டி நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்தனர். நடிகர் சங்க அறங்காவலர் குழு உறுப்பினர் (டிரெஸ்டி) பொறுப்பை ஏற்பதாகக் கமலும் உறுதி கூறினார். வருகிற சங்கப் பொதுக்குழுவில் என்ன பேசப்போகிறார்கள்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரான கருணாஸிடம் பேசினேன்.

கருணாஸ்...
கருணாஸ்...

''கமல் சார் ஏற்கெனவே டிரெஸ்டி பொறுப்பில் இருந்தார். அதனால அதே பொறுப்பில் இருக்கணும்னு கேட்டுக்கிட்டோம். சாரும் ஏத்துக்கிட்டார். 'கட்டட பணிகளை உடனடியாக ஆரம்பிச்சு 20 மாதத்திற்குள் நடத்தி முடிச்சிடணும். அதுக்கான வேலைகளை கவனமா பாருங்க அதைப்போல நூறு ரூபாய் செலவழிச்சாக் கூட, கணக்கு வழக்கு எதுவாக இருந்தாலும் கரெக்ட்டா குறிச்சு வச்சுக்கோங்க முன்னாடி அப்படித்தான் பண்ணிட்டிருந்தீங்க. அதை இப்பவும் ஃபாலோ பண்ணிக்கோங்க. ஒப்பனை (மேக்கப்) போன்று சினிமா தொடர்பான விஷயங்களுக்கு ஒர்க் ஷாப்புகள் நடத்துவது, நாடகக் கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது இனி வரக்கூடிய அடுத்த தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்'ன்னார். இப்படி பல ஆலோசனைகளை நாசர் சார்கிட்ட கமல் சார் சொல்லியிருக்கார். 'அதுக்கான வேலைகளை பண்ண ஆரம்பிச்சிட்டோம்'னு நாசர் சாரும் சொல்லவும் சந்தோஷப்பட்டார் கமல் சார். 'நல்லபடியா பண்ணுங்க. அதுக்கான என் ஒத்துழைப்பு எப்பவும் உண்டு' என கமல் சார் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுக்குழுவில் பங்கேற்குமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருக்கோம். கடந்த சில வருடங்களாக சங்கத்தை அரசு அலுவலர்கள்தான் நடத்தினாங்க. எனவே இப்பத்தான் புது நிர்வாகிகள் கூட்டம் நடக்கப்போகுது. இந்த மூண்றாண்டுகளில் என்ன நடந்ததுனு ஆண்டறிக்கையில் படிக்கிறோம். கொரோனா காலகட்டங்களில் நாடக நடிகர்களுக்கு பலரும் உதவினாங்க. அவங்களுக்கு நன்றி சொல்றோம். விருதுகள் வாங்கின நடிகர்களுக்குப் பாராட்டுக்களும், இறந்த கலைஞர்களுக்கு இரங்கலும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கறோம். வரவு-செலவு கணக்கு, கட்டடம் கட்டுறதுக்கான அனுமதி போன்ற விஷயங்களும் பேசப்போறோம். பொதுக்குழுவில் பங்கேற்காத நடிகர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த எண்ணமும் இல்லை. ஏன்னா, பாதிபேர் வெளியூர், வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கோம்''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism