Published:Updated:

`விஜய் சார் மீது அன்பும் மரியாதையும் கொண்டவன் நான்; ட்வீட் போலியானது!’ - நடிகர் கருணாகரன்

நடிகர் விஜய்
News
நடிகர் விஜய்

`யாரோ ட்விட்டரில் என் பெயர் கொண்ட போலிக் கணக்கு மூலமாக இதைச் செய்திருக்கிறார்கள்... இது முழுக்க முழுக்க பொய்யான விஷயம். விஜய் சார் மீது மிகப் பெரிய அன்பும் மரியாதையும் கொண்டவன் நான்’.

இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று நோயைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்புக்கு தங்களால் முடிந்த நிதிகளை வழங்குமாறு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார். பிற மாநில முதல்வர்களும் மக்களிடம் கொரோனா நிதிக்கான கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அதையடுத்து பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்று தடுப்பு நிதிகளை அளித்து வருகின்றனர். அதனடிப்படையில் நடிகர் விஜய் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் மத்திய அரசின் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு ரூ.25 லட்சமும் வழங்கியிருக்கிறார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அதேபோல கேரள மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு, ரூ.10 லட்சமும், புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆ மாநிலங்களுக்குத் தலா ரூ.5 லட்சமும் கொரோனா நிதியாக வழங்கினார். மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1.30 கோடி வழங்கியதுடன், தனது ரசிகர் மன்றங்களின் மூலம் கஷ்டப்படும் ரசிகர்களைத் தேர்வு செய்து அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 செலுத்தினார். இதன்மூலம் தெனனிந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி கொடுத்தது எங்கள் தலைவர்தான் என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதையடுத்து புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி, ``கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி தேவைப்பட்டதால் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். அதையடுத்து பல தரப்பினரும் தாமாக முன் வந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். பல திரைப்படங்களின் காட்சிகளை படமாக்குவதற்காக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் புதுச்சேரிக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே புதுச்சேரிக்கு உதவுவதற்கான பொறுப்பும் கடமையும் இருக்கிறது. நடிகர் விஜய் ரூ.5 லட்சம் கொடுத்து உதவவியதற்கு நன்றி. அவரின் தாராள மனதை வரவேற்கிறேன். அவரைப்போல மற்ற நடிகர்களும், திரைத்துறையினரும் தாமாக முன் வந்து தாராளமாக நிதியை அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கருணாகரன்
கருணாகரன்

அந்தச் செய்தியை விமர்சிக்கும் வகையில் நடிகர் கருணாகரன் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், `Same Salary Please' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய்க்கு கொடுக்கும் சம்பளத் தொகையைப்போல கொடுத்தால் தானும் உதவி செய்வேன் என்ற ரீதியில் கருணாகரன் கருத்துச் சொன்னதாகத் தகவல் பரவியது. இதனால், கொந்தளித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கருணாகரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக நடிகர் கருணாகரனைத் தொடர்பு கொண்டு பேசினோம், ``இந்த அபாயகரமான சூழலில் மக்கள் சோஷியல் மீடியாவில் வரக்கூடிய எல்லாத்தையும் நம்பிட்டு வர்றாங்க... நான் சோஷியல் மீடியாவை விட்டு வெளியே வந்தே ரொம்ப நாளாகி விட்டது. விஜய் சார் குறித்து வெளியாகி இருக்கும் கருத்து என்னுடையது இல்லை. யாரோ ட்விட்டரில் என் பெயர் கொண்ட போலிக் கணக்கு மூலமாக இதைச் செய்திருக்கிறார்கள்... இது முழுக்க முழுக்க பொய்யான விஷயம். விஜய் சார் மீது மிகப் பெரிய அன்பும் மரியாதையும் கொண்டவன் நான். அவர் இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு செய்திருக்கும் உதவி பெரியது” என்றார்