Published:Updated:

``ஒரு பன்னிக்குட்டி... யோகி பாபு... நான்... ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன நடந்தது தெரியுமா?!’’ - கருணாகரன் ஷேரிங்ஸ்

கருணாகரன்

``ஒரிஜினல் பன்னிக்குட்டி படத்துல நடிச்சிருக்கு. இதை மையமா வெச்சித்தான் கதையே. படத்துல கஷ்டப்பட்டு நடிச்சது பன்னிக்குட்டி கிடையாது, நாங்கதான். ஏன்னா, அது எந்த டைரக்‌ஷன்ல ஓடுதோ, அந்தத் திசையை நோக்கி நாங்க ஓட ஆரம்பிப்போம்.''

``ஒரு பன்னிக்குட்டி... யோகி பாபு... நான்... ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன நடந்தது தெரியுமா?!’’ - கருணாகரன் ஷேரிங்ஸ்

``ஒரிஜினல் பன்னிக்குட்டி படத்துல நடிச்சிருக்கு. இதை மையமா வெச்சித்தான் கதையே. படத்துல கஷ்டப்பட்டு நடிச்சது பன்னிக்குட்டி கிடையாது, நாங்கதான். ஏன்னா, அது எந்த டைரக்‌ஷன்ல ஓடுதோ, அந்தத் திசையை நோக்கி நாங்க ஓட ஆரம்பிப்போம்.''

Published:Updated:
கருணாகரன்

''நலன் குமாரசாமி ஷார்ட் ஃபிலிம் எடுத்தப்போ, அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். அதுக்கு அப்புறம், 'சூது கவ்வும்' படத்துலயும் வேலைபார்த்தேன். நடிகனா அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடியே நானொரு உதவி இயக்குநர். பல வருடங்களுக்குப் பிறகு, திரும்பவும் உதவி இயக்குநரா வேலைபார்க்கணும்னு ஆசை வந்திருக்கு. அதுக்குக் காரணம், 'பன்னிகுட்டி' இயக்குநர் அனுசரண். டீடெய்லா ஸ்க்ரிப்ட் வொர்க் பண்ணுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுல ரொம்ப கூலா இருப்பார். அவர்கூட வேலைபார்த்தது நல்ல அனுபவம்'' என்று பேச ஆரம்பிக்கிறார், நகைச்சுவை நடிகர் கருணாகரன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'பன்னிகுட்டி' படத்துல நடிச்ச அனுபவம் சொல்லுங்க?

'பன்னிகுட்டி' திரைப்படம்
'பன்னிகுட்டி' திரைப்படம்

'' 'காக்கா முட்டை' மணிகண்டன் சார் ஒரு நாள் போன் பண்ணி, 'நான் ஒரு படம் தயாரிக்கப்போறேன். நல்ல கதை... நீங்க முடியுமா?' எனக் கேட்டார். அடுத்ததா, இந்தப் படத்தோட இயக்குநர் அனுசரண் போன் பண்ணி கதையைச் சொன்னார். கதை ரொம்ப வித்தியாசமா இருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். உசிலம்பட்டியில படத்தோட ஷூட்டிங் நடந்தது. மூணு மாசம் அங்கேதான் இருந்தேன். யோகி பாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, ராமர்னு நிறைய நடிகர்கள் இந்தப் படத்துல இருக்காங்க. கஜேந்திரன் சார் என்னோட அப்பா கேரக்டர்ல நடிச்சிருக்கார். யோகி பாபுவும் நானும் லீட் ரோல் பண்ணியிருக்கோம்.

வேலை வெட்டியில்லாம சுத்திக்கிட்டு திரியிற கேரக்டர்தான் என்னோடது. உத்திராபதியா நானும், திட்டாணியா யோகிபாபுவும் நடிச்சிருக்கோம். ரெண்டு பேருக்கும் எப்பவுமே முட்டிக்கிட்டே இருக்கும். அப்படித்தான் படத்தோட காட்சிகள் இருக்கும்.

ஒரிஜினல் பன்னிக்குட்டி படத்துல நடிச்சிருக்கு. இதை மையமா வெச்சுதான் கதையே. படத்துல கஷ்டப்பட்டு நடிச்சது பன்னிக்குட்டி கிடையாது, நாங்கதான். ஏன்னா, அது எந்த டைரக்‌ஷன்ல ஓடுதோ, அந்தத் திசை நோக்கி நாங்க ஓட ஆரம்பிப்போம். நாங்க சொல்றதை அது கேட்காது. அது சொல்றதைத்தான் நாங்க கேட்டுட்டிருந்தோம். அதிகமான ரெஸ்ட் பன்னிக்குட்டிக்குதான் கிடைச்சது. அது தூங்குறப்போ நாங்களும் கொஞ்சம் தூங்குவோம்.

ஷூட்டிங் ஸ்பாட்டே ரொம்ப ஜாலியா இருக்கும். ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி, ரெண்டு நாள் மணிகண்டன் சாரோட ஸ்டோரி டிஸ்கஷன் போச்சு. நிறைய ஐடியாஸ் கொடுத்தார். அந்த நேரத்துல, அவரோட 'கடைசி விவசாயி' படத்தோட ஷூட்டிங்கும் அதே ஊர்ல நடந்ததனால, அடிக்கடி எங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்துட்டுபோவார். படத்தோட திரைக்கதையில் அவரோட இன்புட்ஸ் நிறைய இருக்கும்.

தம்பதிகளான ஆர்யா, சயிஷாகூட நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு?

கருணாகரன்
கருணாகரன்

இப்ப நான் நடிச்சிட்டிருக்கிற சக்தி செளந்தர்ராஜனின் 'டெடி' படத்துல ஆர்யா ஹீரோ, சயிஷா ஹீரோயின். 'கஜினிகாந்த்' படத்துல ரெண்டு பேர்கூடவும் சேர்ந்து நடிச்சிருக்கேன். ஜாலி பாய் ஆர்யாவைத்தான் தெரியும். ஆனால், அப்போ அது ஆர்யாவுடைய லவ் சீசன். அதனால், ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவுமே பதற்றமாவே இருப்பார். இப்போ, ரெண்டு பேருக்கும் திருமணம் முடிஞ்சதனால ரொம்ப கூலா இருக்கார். படத்துல எனக்கு இந்தியன் எம்பஸியில் வேலைபார்க்கிற கேரக்டர். காமெடி ரோலையும் தாண்டி கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன். இது த்ரில்லர் கலந்த காமெடி ஜானர் படம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கீங்களே...

டிஸ்கவரி தமிழ்
டிஸ்கவரி தமிழ்

ஆமாம்... டிஸ்கவரி தமிழில் 'அசால்ட்டா அலறவிடும் புள்ளிங்கோ' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறேன். எப்பவுமே வெற்றியைக் கொண்டாடுவோம். தோத்துப் போறதையும் கொண்டாடலாமே என்பதுதான் இதுக்கான தீம். நிகழ்ச்சிக்கான ப்ரொமோ வந்தவுடன் நிறைய பேர் வாழ்த்து சொன்னாங்க. மிர்ச்சி சிவாவுடைய ஆங்கரிங் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அது மாதிரி கலகலப்பா பண்ணணும்னு நினைச்சிட்டிருக்கேன். நடிக்கிறதைவிட ஆங்கரிங் பண்ணத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். முதல்நாள் முழுக்க டேக் மட்டும்தான் போச்சு. ஆங்கரா இருக்குறது ரொம்ப கஷ்டம்னு உணர்ந்தேன். என்னால முடிஞ்ச பெஸ்ட்டை கொடுத்திருக்கேன்.

சிவகார்த்திகேயனுடன் முதல் முறையா நடிக்கிற 'இன்று நேற்று நாளை' படம் பற்றிச் சொல்லுங்க...

கருணாகரன்
கருணாகரன்

நம்மோட வேலையை எந்தளவுக்கு பெட்டரா பண்ணலாம்னு யோசிச்சு பண்ணக்கூடியவர், சிவ கார்த்திகேயன். பெரிய ஹீரோகூட நடிக்கிறோம் அப்படிங்கிற ஃபீல் கொஞ்சம்கூட இல்லாம பார்த்துக்கிட்டார். அவரோட டயலாக்ஸ் மட்டுமில்லாம, மத்தவங்களுடைய டயலாக் டெலிவரியும் கவனிச்சிக்குவார். இது, ஃபேன்டஸி காமெடிப் படம். தமிழ்ப் படங்கள்ல இதுவரைக்கும் பார்க்காத பிரமாண்டம் இந்தப் படத்துல இருக்கும். படத்தோட கான்செப்ட் தமிழ் ஆடியன்ஸுக்கு புதுசா இருக்கும்.