Published:Updated:

"இப்ப மக்கள் உழைக்கறதில்லை, பொறுமையில்லை; எல்லாமே ஓசியில கிடைக்குது!"- கருணாஸ் எக்ஸ்க்ளூசிவ்

கருணாஸ்

"மைலாப்பூர்ல அம்புஜம் மாமிகிட்ட கிளாசிக்கல் கத்துக்கிட்டேன். ஆனா, அவங்களுக்கு ஃபீஸ் கொடுக்கல. மாமியோட வீட்டுக்காரர் சின்னதா ஒரு பஜ்ஜி, போண்டா கடை மாதிரி அவர் வீட்டு ஜன்னல்லேயே வச்சு விற்பார். நான் அவருக்கு ஒத்தாசையா இருப்பேன்." - கருணாஸ்

"இப்ப மக்கள் உழைக்கறதில்லை, பொறுமையில்லை; எல்லாமே ஓசியில கிடைக்குது!"- கருணாஸ் எக்ஸ்க்ளூசிவ்

"மைலாப்பூர்ல அம்புஜம் மாமிகிட்ட கிளாசிக்கல் கத்துக்கிட்டேன். ஆனா, அவங்களுக்கு ஃபீஸ் கொடுக்கல. மாமியோட வீட்டுக்காரர் சின்னதா ஒரு பஜ்ஜி, போண்டா கடை மாதிரி அவர் வீட்டு ஜன்னல்லேயே வச்சு விற்பார். நான் அவருக்கு ஒத்தாசையா இருப்பேன்." - கருணாஸ்

Published:Updated:
கருணாஸ்
சமீபத்திய `விருமன்' படத்திற்குப் பிறகு புது தெம்பில் இருக்கிறார் கருணாஸ். கதை நாயகனாக `ஆதார்', தயாரிப்பாளராக `சல்லியர்கள்' என இரண்டு படங்களை முடித்துவிட்டு, அதன் ரிலீஸுக்குக் காத்திருக்கும் கருணாஸிடம் உரையாடினோம்.
கருணாஸ்
கருணாஸ்

இப்ப நடிகரா என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?

"ஆறெழு வருஷம் நடிக்காம இருந்தேன். அந்த இடைவெளியில் கடைசியா நடிச்ச படம் 'சூரரைப் போற்று', இடையே 'சங்கத்தலைவன்' படமும் பண்ணினேன். அப்புறம் 'அம்பாசமுத்திரம் அம்பானி' இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் ஒரு நல்ல கதையோடு வந்தார். அந்தக் கதைதான் 'ஆதார்', அதன்பிறகு கமிட்டான படம்தான் 'விருமன்'. இதுவரை நான் நடிச்ச படங்கள்லேயே வித்தியாசமான ரோல் அதுல அமைஞ்சது. இப்ப நடிச்சு முடிச்சிருக்கற 'ஆதார்' படமும் பேசப்படும்."

பாடகர், நடிகர், தயாரிப்பாளர்ன்னு பெயர் வாங்கிட்டீங்க... எப்படி இருக்குது இந்தப் பயணம்?

"என்னோட பன்னிரண்டாவது வயசிலேயே பாடகர் ஆகிட்டேன். சில ஊர்களுக்குப் பாடப்போகுறப்ப அங்குள்ள இளைஞர்கள் ரூபாய் நோட்டு மாலை போட்டெல்லாம் வரவேற்பாங்க. அந்தக் காலகட்டத்துலதான் எங்க அப்பா தியேட்டர்ல கேண்டீன் வச்சிருந்தார். இன்டர்வெல்ல நான் முறுக்கு வித்திருக்கேன். அதே தியேட்டர்ல ஒரே படத்தைத் திரும்பத் திரும்ப பார்த்ததுல வசனங்கள், காட்சிகள் எல்லாம் நமக்கும் அத்துபடியாகிடும். அதன்பிறகு ஸ்கூல், காலேஜ்ல கல்சுரல்ஸ் நடக்கறப்ப, அதை முறையா பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கிட்டேன். காலேஜ்லதான் நான் கானா பாடல்கள் பாடி பிரபலமானேன். 'ஐசாலக்கடி மெட்டுதானுங்க'ன்னு முதல் கானா ஆல்பம் போட்டிருக்கேன். சிம்பொனி நிறுவனம்தான் அதைப் பண்ணினாங்க. அப்புறம், கிராமியப் பாடல்கள் பண்ணினேன். அப்புறம், அதிலிருந்து மாறுபட்டு 'ஷாக்'ன்னு ஒரு ராப் இசை பாடல் ஆல்பம் பண்ணினேன். அப்புறம் மேடைக்கச்சேரிகள் அதிகமாச்சு. அப்பவே ஒரு கச்சேரிக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்கினேன்.

'ஆதார்' இயக்குநர் ராம்நாத், அருண்பாண்டியன், ரித்திகா, கருணாஸ்
'ஆதார்' இயக்குநர் ராம்நாத், அருண்பாண்டியன், ரித்திகா, கருணாஸ்

சென்னை சின்ன ஊர் கிடையாது. பரந்த ஊர்... இங்கே என்னைவிட திறமைசாலிகள் அதிகம் இருக்கறாங்க. அதனால சிரமப்பட்டுத்தான் ஒரு இடத்தைப் பிடிச்சேன். நான் அப்ப மிமிக்ரியும் நல்லா பண்ணுவேன். 'பெஸ்ட் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்'ன்னு ஜெயலலிதாம்மாகிட்ட ஐந்து சவரன் சங்கிலி பரிசு வாங்கி வாங்கியிருக்கேன். இப்படி என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பிரமிப்பா தெரியும். ஆனா, இன்றைய தலைமுறைக்கு இது சாதாரணமாகத்தான் தெரியுது. ஏன்னா, இப்ப உழைப்பு கம்மியாகிடுச்சு. எல்லாமே ஓசியில கிடைக்குது. யார்கிட்டேயும் பொறுமை இல்லை. எல்லாமே உடனே நடந்திடணும்னு நினைக்கறாங்க. எதுக்கும் காத்திருக்கணும்னு நினைக்கறதில்ல. ஏன் சொல்றேனா முன்னாடி தலைமுறையை ஒரு ரோல்மாடலாக எடுத்துட்டு உழைக்கணும்னு இப்ப யாரும் நினைக்கறதில்லை என்பதுல எனக்கு ஒரு சின்ன வருத்தம்தான்."

நீங்க முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டதுண்டா?

ஜல்லிக்கட்டுக் காளையுடன் கருணாஸ்
ஜல்லிக்கட்டுக் காளையுடன் கருணாஸ்

"அப்ப நான் மவுண்ட் ரோட்டுல உள்ள பேரமவுன்ட் எலக்ட்ரோ பிளேட்டிங் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல மைலாப்பூர்ல அம்புஜம் மாமிகிட்ட கிளாசிக்கல் கத்துக்கிட்டேன். ஆனா, அவங்களுக்கு ஃபீஸ் கொடுக்கல. மாமியோட வீட்டுக்காரர் சின்னதா ஒரு பஜ்ஜி, போண்டா கடை மாதிரி அவர் வீட்டு, ஜன்னல்லேயே வச்சு விற்பார். நான் அவருக்கு ஒத்தாசையா இருப்பேன். அந்தத் தெருவுல முப்பது குடும்பங்கள் இருப்பாங்க. காலையில எழுந்து குழந்தைகளுக்கு இட்லி, தோசை கடையில வாங்குவாங்க... இங்கே பஜ்ஜி, போண்டா வாங்குவாங்க. அங்கே சங்கீதம் கத்துக்க வரும் குழந்தைகளுக்கு சரணங்கள், கீர்த்தனைகளை நானும் கத்துக்குடுப்பேன். இப்படி நிறைய மெமரீஸ் இருக்கு. மாமிகிட்ட கிளாசிக்கல் முழுவதும் கத்துக்கிட்டேன். அப்புறம், மியூசிக் ஸ்கூல்ல பியானோ கிளாஸும் போயிருக்கேன். எனக்கு மியூசிக் தெரியும். ஆனா, நான் மியூசிக்ல எக்ஸ்பெர்ட் இல்லை."