Published:Updated:

``நான் நன்றிகெட்டவன் இல்லைன்னு நானே நிரூபிக்க வேண்டியிருக்கு!” - மனம் திறக்கும் கருணாஸ்

கருணாஸ்

``நானாவது சோத்துக்கே வழியில்லாம ஊர்ல இருந்து வந்தவன். ஆனா, அவங்க அப்படியில்ல. அவங்க வசதியான வீட்டுப் பொண்ணு. ஆனாலும் உண்மையான அன்பு, காதல்னால இதெல்லாம் சாத்தியமாச்சு.''

``நான் நன்றிகெட்டவன் இல்லைன்னு நானே நிரூபிக்க வேண்டியிருக்கு!” - மனம் திறக்கும் கருணாஸ்

``நானாவது சோத்துக்கே வழியில்லாம ஊர்ல இருந்து வந்தவன். ஆனா, அவங்க அப்படியில்ல. அவங்க வசதியான வீட்டுப் பொண்ணு. ஆனாலும் உண்மையான அன்பு, காதல்னால இதெல்லாம் சாத்தியமாச்சு.''

Published:Updated:
கருணாஸ்

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அரசியலிலிருந்து ஒதுங்கியதுடன் சினிமாவில் முழுக்கவனம் செலுத்திவருகிறார் கருணாஸ். கதை நாயகனாக 'ஆதார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள கருணாஸிடம் பேசினேன்.

குடும்பத்தினருடன் கருணாஸ்
குடும்பத்தினருடன் கருணாஸ்

என்ன சொல்றாங்க உங்க மனைவி கிரேஸ்?

''கிரேஸ் என்னோட பலம். கணவன் ஒரு தோல்வி, ஒரு அப்செட், ஒரு தொய்வில் இருக்கும்போது, மனைவி அவனுக்கு ஆறுதலா இருக்கணும். இந்த மாதிரி நேரங்கள்ல கிரேஸ் எனக்கு நூறு சவரன், இருநூறு சவரன் நகைன்னாலும் அடகுவைக்க எடுத்துக் கொடுப்பாங்க. அந்த நகைகளை வித்துத்தான் நான் என் கடனை அடைக்கணும்னு என்கிற சூழல் வந்தால்கூட, 'விக்கணும்னா வித்துருப்பா... உன் மரியாதைமீறி வேற எந்தப் பொருளும் முக்கியமில்லப்பா'ன்னு சொல்வாங்க. 'நான் கிரேஸைக் கல்யாணம் பண்ணும்போது கைனெடிக் ஹோண்டா பைக்ல இதே சென்னையில ஒண்ணா சுத்தியிருக்கோம். சின்ன ஹோட்டல்ல ஏழு ரூபாய், எட்டு ரூபாய்க்கு எடுப்புச் சாப்பாடு வாங்கி சாப்பிட்டிருக்கோம், அந்த இடத்தில இருந்துதான் இந்த இடத்துக்கே வந்திருக்கேன்.

நானாவது சோத்துக்கே வழியில்லாம ஊர்ல இருந்து வந்தவன். ஆனா, அவங்க அப்படியில்ல. அவங்க வசதியான வீட்டுப் பொண்ணு. ஆனாலும் உண்மையான அன்பு, காதல்னால இதெல்லாம் சாத்தியமாச்சு. என் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் பங்கெடுக்கறதாலதான், எனக்குப் பொருளாதார நஷ்டங்கள் வந்த போதெல்லாம் நான் அந்தத் தொல்லைகள் இல்லாமல் இருந்திருக்கேன். நான் நேர்மையா உழைச்சு சம்பாதிச்சேன். 'திண்டுக்கல் சாரதி'ங்கற ஒரு படம், சன் டி.வி.யில வந்தது என்னை சட்டமன்ற உறுப்பினராகவே ஆக்கியது.''

கிரேஸ் - கருணாஸ்
கிரேஸ் - கருணாஸ்

'உங்களோட எல்லாப் பேட்டிகள்லேயும், சென்னையை எப்பவும் பெருமையாகவே சொல்றீங்களே ஏன்?

''சென்னை மக்களை என்னைப்போல வேறு யாரும் இவ்ளோ நேசிச்சிட முடியாது. ஏன்னா, இந்த ஊர் எனக்கு அவ்ளோ கொடுத்திருக்கு. உயர்த்தியிருக்கு. எத்தனையோ பேர் சென்னைக்குப் பொழைக்க வந்திருக்கீங்க. உருவாகியிருக்கிங்க.. ஆனா, யாராவது ஒருத்தர் இந்தச் சென்னைக்கு நன்றி சொல்லியிருக்கீங்களா? எனக்குத் தெரிஞ்சு யாரும் நன்றி சொல்லலை. அதனால என் படத்துல சென்னைக்கு நன்றி சொல்லி பாடல் வச்சேன். வைரமுத்துகிட்ட சொன்னேன். 'அன்னை பெற்றாள் அன்பால் என்னை, சென்னை தானடா இரண்டாம் அன்னை'ன்னு எழுதிக் கொடுத்தார். அவர் எழுதினாலும், அப்படி ஒரு பாடலை எழுதச் சொன்னவன் நான்தானே! என்னை நான் நன்றிகெட்டவன் இல்லைன்னு நானே நிரூபிக்க வேண்டியிருக்கு இல்லையா! ஏன்னா, சென்னை வந்தாரை வாழவைக்கும்னு சொல்றதை புத்திசாலித்தனம்னு சொல்லலாம். அல்லது ஏமாளித்தனம்னு சொல்லலாம். இல்ல, பரந்தமனப்பான்மை உள்ளவன்னும் சொல்லிக்கலாம்.

சென்னைக்கு வந்த 99 சதவிகிதம் பேர் வெளியூர்ல இருந்து வந்து முன்னேறியிருப்பாங்க. சென்னை ஒரு தமிழக முதல்வரையும் உருவாக்கல. ஓமந்தூரார்ல இருந்து ஜெயலலிதாம்மா வரை எல்லாருமே எங்கேயோ ஒரு ஊர்ல இருந்துதான் இங்கே வந்திருப்பாங்க. இங்கே இருக்கற பெரிய நிறுவனத்தினர் எல்லோருமே வெளியூர்ல இருந்து வந்திருப்பாங்க. அப்படீனா, இங்குள்ளவங்க என்ன பண்றாங்கன்னு தோணும்.''

உங்க ஒரிஜனல் பெயரான கருணாநிதியை கருணாஸ்னு ஏன் மாத்துனீங்க?

தனது 'ஆதார்' பட வில்லன் நடிகருடன்...
தனது 'ஆதார்' பட வில்லன் நடிகருடன்...

''வீட்ல வச்ச பெயர் கருணாநிதி. ஆனா, அப்ப நான் வறுமையில இருந்தேன். நிதியே இல்லாதவனுக்கு எதுக்கு கருணாநிதி? நான் பெயர் மாத்தினதுக்கு காரணமிருக்கு. கருணாநிதின்னா, கலைஞர்தான் ஞாபகத்துக்கு வருவார். மிகப்பெரிய ஆளுமையா இருக்கார். நூறு வருடத்திற்கு அவருடைய வரலாற்றையோ, செயல்பாடுகளையோ, சாதனைகளையோ நீங்க மறந்து கடந்து போகமுடியாது. அதனால சினிமாவில் கருணாநிதின்னாலே, அவரோட சாதனைகள்தான் தெரியும். ஸோ, நாம வேற பெயரை மாத்தியாகணுமே... எங்க அப்பா பெயர் சேது. ஸோ, கருணாநிதியிலிருந்து கருணா, அப்புறம், என் இன்ஷியஸ் 'எஸ்'ஸைத் தூக்கி, என் பெயருக்குப் பின்னாடி போட்டுப் பார்த்தேன். கருணாஸ்னு வந்துச்சு. பெயரும் சவுண்ட்டும் புதுசா இருந்துச்சு. கருணாஸ் ஆனேன்!''