Published:Updated:

`விக்ரம் வேதா' படக்குழு வெளியிட்ட கதிரின் `ஜடா' படத்தின் டீசர்!

நடிகர் கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் `ஜடா' படத்தின் டீசர் வெளியானது.

அறிமுக இயக்குநர் குமரன் எடுத்திருக்கும் திரைப்படம் `ஜடா'. `பரியேறும் பெருமாள்' படத்துக்குப் பிறகு இதில் ஹீரோவாக கதிர் நடித்திருக்கிறார். இதனாலேயே படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. யோகிபாபுவும் கால்பந்து வீரராக முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இப்படம், வடசென்னை பகுதியில் இருக்கும் கால்பந்து வீரர்கள் பற்றியது. படத்தின் ஹீரோயினாக புதுமுகம் ரோஷினி நடித்திருக்கிறார்.

jada movie poster
jada movie poster

பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் `ஆடுகளம்’ கிஷோர், லிஜீஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை `விக்ரம் வேதா' படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, நடிகர் நடிகைகள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், வரலட்சுமி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டிருக்கின்றனர்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் ஓவியர் ஶ்ரீதர் நடித்திருக்கிறார். `விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சி.எஸ்தான் இப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். மேலும், கதிர் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் `பிகில்' படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.