Published:Updated:

"அந்த மூணு பேர் பயங்கரமா சிரிச்சாங்க; விஜயகாந்த் சாருக்கு கோபத்துல கண்ணு சிவந்திடுச்சு"-லிவிங்ஸ்டன்

லிவிங்ஸ்டன்

‘சொல்லாமலே’ தயாராகிட்டிருந்தப்ப பிரகாஷ்ராஜை எதுக்குங்க கமிட் செய்றாங்க, நீங்க படம் முழுக்க உழைச்சதையெல்லாம் அஞ்சு நிமிஷத்துல வந்து காலி பண்ணிட்டுப் போயிடுவார்னு சொன்னாங்க.

"அந்த மூணு பேர் பயங்கரமா சிரிச்சாங்க; விஜயகாந்த் சாருக்கு கோபத்துல கண்ணு சிவந்திடுச்சு"-லிவிங்ஸ்டன்

‘சொல்லாமலே’ தயாராகிட்டிருந்தப்ப பிரகாஷ்ராஜை எதுக்குங்க கமிட் செய்றாங்க, நீங்க படம் முழுக்க உழைச்சதையெல்லாம் அஞ்சு நிமிஷத்துல வந்து காலி பண்ணிட்டுப் போயிடுவார்னு சொன்னாங்க.

Published:Updated:
லிவிங்ஸ்டன்

‘சுந்தரபுருஷன் பார்ட் 2’வுக்கான திரைக்கதையை எழுதி சினிமாவில் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார் நடிகர் லிவிங்ஸ்டன். நடிப்பு, இசை, சமீபமாக சீரியல் என பல ஏரியாக்களில் பிஸியாக இருக்கும் அவரிடம் ‘அண்ணாத்த’ ஷூட் அனுபத்திலிருந்து பேசலாமே’ என உரையாடத் தொடங்கினேன்.

‘’சினிமாவுல முதல் இன்ஸ்பிரேஷனே ரஜினி சார்தான். இதை அவர்கிட்ட நான் சொன்னதில்லை. ஒருத்தரை முகத்துக்கு நேரா புகழ்றதுல எனக்கு விருப்பமில்லை. அவரைப் பத்தி மத்த நாலு பேர்கிட்டதான் சொல்லணும், ரஜினி சார் என்னைப் பொறுத்தவரை ஒரு மகான், சித்தர்னு கூடச் சொல்வேன். கடின உழைப்பு, தொழிலை நேசிக்கிறது, எல்லாரையும் சமமா மதிக்கிறதுன்னு இந்த எல்லா விஷயங்களையும் அவரைப் பார்த்துக் கத்துக்கணும். ஒரு தடவை அவர்கிட்ட நீங்க போட்டுருக்கிற மாதிரி ருத்ராட்சை வேணும்னு கேட்டேன். அடுத்த முறை இமயமலை போயிட்டு வர்றப்ப வாங்கிட்டு வர்றேன்னு சொன்னார். ஆறு மாசம் கழிச்சு வாங்கிட்டு வந்து எனக்குப் போன் பண்ணிக் கூப்பிட்டுக் கொடுத்தார். இந்த குணமெல்லாம் எல்லாருக்கும் வராது." என்றார் உற்சாகமாக.

நீங்க ஹீரோவா நடிச்ச படங்கள் எல்லாமே ஹிட். பிறகு ஏன் அதைத் தொடராம விட்டுட்டீங்க?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்துல நடந்தது. நல்லா நினைவுல இருக்கு. ஒரு ரயில் பயணம். விஜயகாந்த் சார் நான் இன்னும் மூணு பேர் போயிட்டிருக்கோம். அந்த இடத்துலதான் முதன் முதலா நான் ஹீரோவா பண்ணனும்னு நினைக்கிற விருப்பம் பத்தி வாய் திறக்கேன். நான் சொன்னதும் பக்கத்துல இருந்த அந்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு அவமானமாப் போச்சு. நான் கூனிக் குறுகுறதைப் பார்த்த விஜயகாந்த் சார் கண் சிவந்திடுச்சு. அவங்களைப் பார்வையாலேயே முறைச்சவர. இந்த மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்கன்னு திட்டினார். அந்த நிமிஷம் எனக்குள்ள் வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்துலயாச்சும் நடிச்சிடணும்னு முடிவு செய்தேன். கடவுள் அருளால் அது நடக்கவும் செய்தது. இப்ப, உங்க கேள்விக்கு வர்றேன். ஹீரோ ஆகறதை விட அந்த இடத்தைத் தக்க வச்சுக்கிடறது பெரும்பாடு. இஷ்டத்துக்குச் சாப்பிட முடியாது, உடம்பை மெயின்டெய்ன் பண்ணணும். வெளியில சுதந்திரமாப் போய் வர முடியாது. ரசிகர்கள் மொய்ச்சிடுவாங்க. சினிமா பிசினஸ், சூட்சுமங்கள் தெரிஞ்சிருக்கணும். இதெல்லாம் என்னால முடியலை. எனக்கு கொஞ்சம் சம்பாதிச்சாலே போதும்கிற மனசு வந்திடுது. அதை சோம்பல்னு கூடச் சொல்லலாம். இந்த மாதிரி குணங்களை வச்சுக்கிட்டு எப்படி ஹீரோவா நிலைச்சிருக்க முடியும்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"வடிவேலு, விவேக் ரெண்டு பேருடனும் சேர்ந்து நடிச்சப்பெல்லாம் ரெண்டு பேருக்கும் எப்படி டஃப் கொடுக்கிறதுன்னு யோசிச்சதுண்டா?"

விஜயகாந்த்
விஜயகாந்த்

"எதுக்கு அப்படி யோசிக்கணும்? எனக்கு வந்த கேரக்டரை நான் பண்றேன். அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டர்களை அவங்க செய்றாங்க. அவ்ளோதான். நான் எப்பவுமே அந்த மாதிரியெல்லாம் நினைச்சதில்லீங்க. ‘சொல்லாமலே’ படத்துல நான் ஹீரோ. பிரகாஷ் ராஜும் நடிச்சிருக்கார். படம் தயாராகிட்டிருந்தப்ப சிலர் எங்கிட்டயே வந்து, வேற யாரையாச்சும் போடச் சொல்லலாமே, இவரை எதுக்குங்க கமிட் செய்றாங்க, நீங்க படம் முழுக்க உழைச்சதையெல்லாம் அஞ்சு நிமிஷத்துல வந்து காலி பண்ணிட்டுப் போயிடுவார்னு சொன்னாங்க. நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அந்தக் கேரக்டர் அவருக்கு கிடைச்சது. அது பத்தி நான் ராங்கா யோசிக்கறது தப்புங்க’’

கூடிய விரைவில் அப்டேட் வரும் என்றவரிடம் வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.