Published:Updated:

“என்னை மாதிரி சினிமாவுலகூட அவரை யாரும் காதலிக்கலை!”

சுசித்ரா - மோகன்லால்
பிரீமியம் ஸ்டோரி
சுசித்ரா - மோகன்லால்

- மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மனைவி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

“என்னை மாதிரி சினிமாவுலகூட அவரை யாரும் காதலிக்கலை!”

- மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மனைவி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Published:Updated:
சுசித்ரா - மோகன்லால்
பிரீமியம் ஸ்டோரி
சுசித்ரா - மோகன்லால்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்... ரசிகர்களுக்கு செல்லமாக ‘லாலேட்டன்’. கடந்த 40 ஆண்டுகளில் 400 படங்களுக்கும் மேல் நடித்து, தனது முந்தைய படங்களின் வசூல் சாதனைகளைத் தானே முறியடித்து வருபவர். 62 வயதிலும் இதையெல்லாம் சாத்தியப்படுத்தும் மோகன்லாலின் வளர்ச்சிக்குப் பின்னிருந்து ஊக்கமளிக்கும் அவரின் நிஜ நாயகி சுசித்ரா, சென்னைப் பெண். மறைந்த நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் மகள். கல்லூரிக் காலத்தில் மோகன்லாலின் ரசிகையான சுசித்ரா, அவரைக் காதலித்து கரம்பிடித்தது சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம். மலையாள மீடியாக்களுக்கே பேட்டி எதுவும் கொடுக்காமல் அன்புடன் மறுத்துவரும் சுசித்ராவை, அவரின் முதல் தமிழ் பேட்டிக்குச் சம்மதிக்க வைத்தோம்.

“எங்கம்மா உட்பட குடும்பத்துல பலரும் மலையாளிகள். வீட்டுல மலையாளப் படங்கள் நிறைய பார்ப்போம். 1980-களின் தொடக்கத்துல சினிமாவுல அறிமுகமான என் கணவர், வில்லன் ரோல்கள்ல அதிகமா நடிச்சதால அப்போ அவரை எனக்குச் சுத்தமா பிடிக்காது. அப்புறமா ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சதும் ரசிகையா அவர்மேல ரொம்பவே ப்ரியம் வெச்சிருந்தேன். பி.ஏ செகண்டு இயர் படிச்சு கிட்டிருக்கும்போதே எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. குடும்ப நண்பரின் கல்யாணத்துல யதேச்சையா அவரைப் பார்த் தேன். அந்த முதல் சந்திப்புலயே என் சேட்டா வைப் (மரியாதைக்குரியவர்) பிடிச்சுப்போகவே, ‘எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது மோகன்லால்கூடதான்’னு என் வீட்டுல உறுதியா சொன்னேன்.

‘இது சரிவருமா?’ன்னு ஆரம்பத்துல தயங் கின அப்பா, அப்புறமா அவர் வீட்டுல பேசினார். எங்க ரெண்டு பேர் ஜாதகமும் சரியா பொருந்தலைனு கல்யாண பேச்சை நிப்பாட்டிட்டாங்க. எங்க வீட்டுக்குத் தெரி யாம அவர்கிட்ட போன்ல பேசினேன். என்னை மாதிரி சினிமாவுலகூட அவரை யாரும் காதலிச்சிருக்க மாட்டாங்க. அவருக்கும் என்னைப் பிடிச்சதால, எங்க காதல் வளர்ந் துச்சு. ஒருவழியா ரெண்டு வீட்டார் சம்மதத் துடன் எங்க கல்யாணம் தடபுடலா நடந்துச்சு. பிறகு, கேரளாவுல சில வருஷங்கள் வசிச்சோம். ஷூட்டிங் விஷயமா அவர் அடிக்கடி சென்னை வருவார். அதனால, சென்னையிலேயே குடியேறினோம்” கலகலவென பேசுபவர், கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனையே தன் நலனாக பாவிக்கும் பக்கா இல்லத்தரசி.

 மகள், மகன், கணவருடன் சுசித்ரா...
மகள், மகன், கணவருடன் சுசித்ரா...

மலையாள சினிமாவின் உச்ச நாயகனான மோகன்லால், ‘இருவர்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘ஜில்லா’, ‘காப்பான்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

“மலையாள சினிமாவுல ரொம்பவே போராடித்தான் முன்னணி நாயகனா அவர் தன்னை நிலைநிறுத்திகிட்டார். நீண்டகால சினிமா அனுபவத்துல, அவருக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு நல்லா தெரியும். அதனாலதான், ஃபேமிலி, ஹியூமர், ஆக்‌ஷன்னு ஒவ்வொரு படத்துக்கான கதையையும் வித்தியாசமா செலக்ட் பண்றார். வெற்றி, தோல்வி எதுவானா லும் தன்னைப் பெரிசா பாதிக்காத வகையில சீக்கிரமே அடுத்த வேலைக்கு நகர்ந்திடுவார். இப்பவும் அவரோட பெரிய ரசிகை நான். அவர் படங்களை முதல் நாளே பார்த்துட்டு, வெளிப்படையா என் கருத்தைச் சொல்லுவேன். விமர்சனம் எப்படி இருந்தாலும் இன்முகத் துடன் ஏத்துப்பார்” என்கிற சுசித்ரா, கணவரின் நினைவுகளில் மலர்கிறார்.

சமையலில் ஆர்வம்கொண்ட மோகன்லால், விதவிதமாக சமைத்துப் பரிமாறி மகிழ்வது அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமேயான சந்தோஷ தருணம். “சேட்டாவோட கைமணம் பிரமாதமா இருக்கும். அவருக்கு ரொம்ப பிடிச்ச ஜாப்பனீஸ் சமையலுக்காகவே, எங்க வீட்டுல பிரத்யேக கிச்சன் ஒண்ணு வடிவமைச் சிருக்கோம். வீட்டுல இருந்தார்னா, ஸ்பெஷல் டிஷ் ஏதாச்சும் செஞ்சு பரிமாறுவார். வீட்டைத் தாண்டி நான் வெளியே போயிட்டு வந்தாலே, ‘எனக்கு என்ன வாங்கிட்டு வந்தே...’னு குழந்தை மாதிரி கேட்பார். சின்னதா ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் ஹேப்பியாகிடு வார். ஒருமுறை எங்க கல்யாண நாளை மறந்துட்டு, துபாய்க்குப் போயிட்டார். ஏர்போர்ட்டுல டிராப் பண்ணிட்டு, அவர்கிட்ட ஒரு கவர் கொடுத்து, ‘ஃப்ளைட்டுல ஏறினதுக்கு அப்புறமா இதைப் பிரிச்சுப் பாருங்க’னு சொன்னேன். ‘இந்த ஒருநாளாச்சும் நான் மட்டுமே உங்களோட உலகமா இருக் கணும்னு ஆசைப்படுவேன். ஆனா, இந்தத் தினத்தையும் மறந்துட்டீங்களே...’னு ரொம்பவே ஃபீல் பண்ணி நான் எழுதியிருந்த லெட்டருடன், ஒரு கிஃப்ட்டும் அந்த கவர்ல வெச் சிருந்தேன். அதைப் படிச்சவர், துபாய் ஏர்போர்ட்டுல இறங்கின துமே எனக்கு போன் பண்ணி உருக்கமா `ஸாரி 'கேட்டார். எங்க லைஃப்ல அவர் ரொம்பவே எமோஷனல் ஆனது அப்போ தான். அதுக்கப்புறமா இப்ப வரைக்கும் எங்க கல்யாண நாளை மறக்காம கிஃப்ட் கொடுத்து விஷ் பண்ணிடுவார்” வெட்கச் சிரிப்புடன் சிலாகிப் பவர், வீட்டு உள் அலங்கார வேலைப்பாடுகளை வடிவமைப் பதில் கைதேர்ந்தவர்.

“என்னை மாதிரி சினிமாவுலகூட அவரை யாரும் காதலிக்கலை!”

“என் கணவர் ஒரு படம் முடிஞ்சதும் சில தினங்கள்லயே அடுத்த பட வேலைகளை ஆரம்பிச்சுடுவார். கொச்சியிலயும் சென்னையிலயும் மாறி மாறி வசிப்போம். ‘குழந்தைகளோடு கூடுமானவரை நாம நேரம் செலவிடணும். பிற்காலத்துல நமக்கு நேரம் இருந்தாலும், படிப்பு, வேலை, தனிப்பட்ட வாழ்க்கைனு பிள்ளைகளுக்கு அப்போ நம்மோடு நேரம் செலவிட வாய்ப்பு குறைய லாம்’னு அவர்கிட்ட அடிக்கடி கொஞ்சலாவும் கோபமாவும் சொல்லுவேன். அதனால, இப்போ குடும்பத்துக்கான நேரத்தைக் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கார். லாக் டெளன் நேரத்துல, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தி லேருக்கிற வீட்டுல ஆறு மாதங்கள் எங்களோடு இருந்தது மறக்க முடியாத தருணம்.

‘இப்படியே நடிச்சுகிட்டே இருந்தா எப்படி? எப்போ ரிட்டயர்மென்ட்...’னு சேட்டாகிட்ட கிண்டலா கேட்பேன். ‘இன்னும் சில வருஷத்துல ஓய்வெடுக்கப் போறேன்’னு சமீபகாலமா உதட்டளவுல சொல்லுறார். இத்தனை வருஷமா அவரோடு குடும்பம் நடத்தி, அவரை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கிறதால, சினிமாவைப் பிரிஞ்சு அவரால இயங்க முடியாதுனு எனக்குத் தெரியும். அதனால, சினிமா வேலைகளைச் சுதந்திரமா செய்ய என்னாலான ஒத்துழைப்பை அவருக்குக் கொடுக்கிறேன்” கணவர் மீதான அன்பில் பூரிக்கும் சுசித்ராவின் மகன் பிரணவ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகன்.

“பிரணவ் நடிப்புல சமீபத்திய ஹிட்டான ‘ஹிருதயம்’ படத்தைப் பத்து முறைக்கும் மேல பார்த்துட் டேன். பையன் மேல அவருக்கும் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. பொண்ணு விஷ்மயா, தாய் லாந்துல தற்காப்புக்கலை கத்துக்கிறா. பிள்ளைகளோட கனவை நிறைவேத்த ஆசைப்படுற சராசரி பெற்றோர்தான் நாங் களும்!” - யதார்த்தமான பேச்சால், நட்சத்திரக் குடும்பத்தின் அஸ்தி வாரமாகப் பளிச்சிடுகிறார் சுசித்ரா.

மோகன்லாலின் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!

மோகன்லாலின் சுறுசுறுப்புக்கான காரணம் பகிர் கிறார் சுசித்ரா... “ஐஸ்க்ரீம் ப்ரியரான என் கணவர், நடுராத்தியிலதான் அதை விரும்பிச் சாப்பிடுவார். மருமகனுக்காக நிறைய ஃப்ளேவர்ல ஐஸ்க்ரீம் வாங்கி வீட்டுல வெச்சிருப்பார் எங்கப்பா. உணவு விஷயத்துல கட்டுப்பாடுடன் இருக்குற என் கணவர், ஐஸ்க்ரீம் சாப்பிடுறதை மட்டும் குறைச்சுக்கவே இல்லை. வீட்டுலயே ஜிம் இருக்கு. தினமும் உடற்பயிற்சி பண்ணுவார். பூனைகளோடு செல்லம் கொஞ்சுவார். நிறைய புக்ஸ் படிப்பார். வருஷத்துக்கு ஒருமுறை ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்துப்பார்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism