Published:Updated:

``கமல் சார் கார் வந்தா, முதல் ஆளா கதவைத் திறக்க ஓடுவேன்... ஏன்னா?!''- எம்.எஸ்.பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர்

''நீங்க எந்த மதத்தை வேணும்னாலும் கும்பிடுங்க, இல்ல கும்பிடமாக்கூட இருங்க. அது உங்க இஷ்டம். என் கடவுள்தான் ஒஸ்தி, கடவுளே கும்பிடாம இருயானு எதுக்காகப் பேசணும்.''

``கமல் சார் கார் வந்தா, முதல் ஆளா கதவைத் திறக்க ஓடுவேன்... ஏன்னா?!''- எம்.எஸ்.பாஸ்கர்

''நீங்க எந்த மதத்தை வேணும்னாலும் கும்பிடுங்க, இல்ல கும்பிடமாக்கூட இருங்க. அது உங்க இஷ்டம். என் கடவுள்தான் ஒஸ்தி, கடவுளே கும்பிடாம இருயானு எதுக்காகப் பேசணும்.''

Published:Updated:
எம்.எஸ்.பாஸ்கர்

கந்த சஷ்டி கவசம், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்களில் தொடர்ந்து வெளிப்படையாகப் பேசிவரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரிடம் பேசினேன். லாக்டெளன் பிரச்னைகளில் இருந்து பேச ஆரம்பித்தார்.

''கிட்டத்தட்ட அஞ்சு, ஆறு மாசமா வேலையே இல்ல. பத்து ரூபாய் செலவு செய்யுற இடத்துல ரெண்டு ரூபாய் செலவுல சாப்பிடுற அளவுக்கு ஆண்டவன் வாழ்க்கையை கொடுத்திருக்கான். ஆனா, இந்த ரெண்டு ரூபாய் மட்டும்தான் வருமானம்னு இருக்குறவங்க எத்தனைப் பேர் இருக்காங்க. அவங்க நிலைமையை நினைச்சுப் பார்க்கணும். அப்படிப் பார்க்கும்போது நம்ம வாழ்க்கை பெட்டர்னு நினைச்சிட்டா நல்லாயிருக்கும். சீக்கிரம் இந்த பிரச்னை சரியாகணும். எல்லாரும் நல்லபடியா வேலைக்குப் போகணும்னுதான் இறைவனை வேண்டிட்டிருக்கேன்'' என்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''உச்ச நட்சத்திரங்கள் எல்லோர் கூடவும் நடிச்சிருக்கீங்க, சினிமாவுல கடந்து வந்த பாதை பற்றி சொல்லுங்க?''

''கஷ்டப்படமா எதையுமே சாதிக்க முடியாது. இதை எத்தனைப் பேர் சொல்லியிருக்காங்க. கஷ்டப்பட்டு சாதிச்சதுக்குப் பிறகு இன்னும் ஷூட்டிங் போறப்போ முதல் நாள் மாதிரியே நினைச்சிட்டு இருந்தா, நமக்குள்ள தலைக்கனம், பெருமைனு எதுவும் வராது. மத்தவங்க சொல்றது சரியா இருந்தா கேட்டுக்குறது, நம்மகிட்ட கேட்குறவங்ககிட்ட கேட்குறதை சொல்லி தர்றதுனு இருக்கணும். நாகேஷ் சார், மனோராமா ஆச்சி கூடவும் நடிச்சிருக்கேன். இவங்களை ரோல் மாடலா எடுத்துட்டு செய்யுற வேலையை சரியா செய்யணும்ங்குறதுதான் என்னோட எண்ணம். இதுக்குப் பிறகும் நல்லா நடிச்சிருக்கோம்னு பேர் வாங்குனா அதுக்குக் காரணம் டைரக்டர் நமக்கு கொடுத்த சுதந்திரம், நாம ஒரு கேரக்டர் மேல காட்டுற ஈடுபாடு, இறைவனின் அருள் அவ்வளவுதான்.''

'' 'திருமதி ஒரு வெகுமதி' படத்தின் மூலமா விசு உங்களை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் கூட வேலைப் பார்த்த அனுபவம் சொல்லுங்களேன்?''

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

''ஒரு இயக்குநரா, கதையாசிரியரா, வாய்ப்பு கொடுத்தவரா நான் விசு அண்ணாவைப் பார்க்கல. என்னோட சொந்த அண்ணாவாதான் பார்ப்பேன். கீழ்ப்பாக்கம் ஏரியாவுல அண்ணா இருந்தப்போ நைட் நேரத்துல லேட் ஆச்சுனா சாப்பிட அவர் வீட்டுக்குப் போயிடுவேன். 'என்ன பாஸ்கர் இந்தப் பக்கம்'னு கேட்பார். 'இந்தப் பக்கம் வந்தேன். பசி எடுத்துச்சுண்ணா'னு சொல்லுவேன். 'போ போ சாப்பிடு'னு சொல்லுவார். 'பசிக்குது மன்னி சாப்பாடு போடுங்கனு' கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கேன். இப்படியிருந்த என்னால அண்ணா இறப்புக்குப் போக முடியலைனு சோகம். மன்னிக்கு போன் பண்ணி அழுதேன். டையாலிசிஸ் பிரச்னை காரணமா அண்ணாவும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். எல்லாரும் போய் பார்த்து அண்ணாவை வழியனுப்பி வைக்க முடியலையேனு பெரிய வருத்தமிருக்கு. ஒரு சொந்த சகோதரன் இறந்தது போலிருக்கு.''

''சமீபத்துல, உங்க பாரதியார் போட்டோ ஷூட் வைரல் ஆச்சே?''

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

'' ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பற்றியெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ரொம்ப நாளாவே செங்கல் சைஸ்க்கு ஒரு போன் வெச்சிட்டு இருந்தேன். என்னோட பசங்கதான் 'காலம் எவ்வளவோ முன்னேறிப் போச்சு. இதையே வெச்சுட்டு இருந்தா எப்படி'னு சொல்லி ஐபோன் வாங்கிக் கொடுத்தாங்க. இதைக்கூட எனக்கு சரியா யூஸ் பண்ணத் தெரியாது. பாரதியார் போட்டோகூட 'தம்பிகோட்டை' படத்தின் போது எடுத்தது. இதை யாரோ இப்ப அப்லோட் பண்ணியிருக்காங்க. இதுக்கு எந்த வகையிலும் நான் பொறுப்பில்ல. நான் எந்த சோஷியல் மீடியாலயும் இல்லை. என் பேர்ல ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியல.''

''சமீபத்துல 'கந்த சஷ்டி கவசம்' பற்றி பேசியிருந்தீங்க, அதனால, உங்கப்பேர்ல ஆரம்பிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?''

''அவங்களுக்கு, அதை வசை பாடுறதுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ, அதே அளவுக்கு அதைப் புகழ்ந்து பேசுற உரிமை எனக்கும் இருக்கு. நாலு வயசுல இருந்து கந்த சஷ்டி கவசம் பாடிட்டிருக்கேன். நீங்க எந்த மதத்தை வேணும்னாலும் கும்பிடுங்க, இல்ல கும்பிடமாக்கூட இருங்க. அது உங்க இஷ்டம். ஆனா, என் கடவுள்தான் ஒஸ்தி, கடவுளே கும்பிடாம இருயானு எதுக்காகப் பேசணும்? அப்போ, மத்தவங்க மனசு புண்படுது இல்லையா. இப்படி செய்யக்கூடாது. கந்த சஷ்டி கவசம் பற்றி எதிர்ப்பா பேசியிருந்தா, ஆதரவா நான் பேசுவேன். அதுக்காக எதுக்கு என் பேர்ல அக்கவுன்ட் ஓப்பன் பண்ணணும்னு தெரியல.''

சினிமாவுக்கு கமல் வந்து 61 வருஷம் ஆச்சு... அவர்கூட நடிச்ச அனுபவம் சொல்லுங்க?

எம்.எஸ்.பாஸ்கர், கமல்
எம்.எஸ்.பாஸ்கர், கமல்

''என்னோட பதினேழாவது வயசுல கோவளம்ல அண்ணாவை முதன்முதலாப் பார்த்தேன். 'அன்னை வேளாங்கண்ணி' படத்துல தங்கப்பன் மாஸ்டர்கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தார். அதுக்குப் பிறகு 'தேவர் மகன்', 'மகாநதி' படங்களுக்கு டப்பிங் பேசிட்டு இருந்தப்போ பார்த்திருக்கேன். 'தசாவதாரம்' படத்தின் போதுதான் சேர்ந்து நடிச்சேன். அப்போ, ஒருத்தர்கிட்ட நின்னு பேசிட்டிருக்குறப்போ 'சார் வர்றார்'னு சொன்னார். திரும்பிப் பார்த்தா, அப்படியே, வெள்ளைக்காரன் மாதிரி கீத் ஃபிளெட்சர் கெட்டப்ல வந்து நிக்குறார். சார் வர்றார்னு பக்கத்துல இருந்தவர் சொல்லாம இருந்திருந்தா என்னால அண்ணாவை கண்டுபிடிச்சிருக்கவே முடியாது. அப்படியொரு கெட்டப் போட்டிருந்தார். எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுப்பார். நாம நடிக்குறதையும் ரசிச்சு பார்ப்பார், பாராட்டுவார். அற்புதமான கலைஞர். 'உத்தமவில்லன்' படத்துல கடிதம் படிக்குற சீன்ல எனக்கு அழுகையா வருது. அவர் கூட நிக்குறதே பெருமையா இருக்குனு நினைச்சிட்டு அழறேன். 'ஏன் அழற, அழாதே'னு சொல்லிட்டே இருப்பார். 'பாபநாசம்' படத்துல பாய் கெட்டப் போட்டு திருநெல்வேலி பாஷை பேசியிருப்பேன். அண்ணாவுடைய கார் ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து நின்னுச்சுனா முதல் ஆளா, கார் கதவைத் திறக்க ஓடிருவேன். அவருக்கு செய்யக்கூடிய சேவையா அதை நினைக்கிறேன். இறங்குன உடனே, 'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்'னு சொல்லுவார். 'வ அலைக்கும் (முஸ்)ஸலாம்'னு பதில் சொல்லுவேன். உடனே, 'ஒரு பாய் கேரக்டர்னா எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வந்திருப்பேன்'னு சொல்லுவார். அவர்கூட இருந்தாலே ரொம்ப ஜாலியா இருக்கும். இன்னும் பல படங்கள் அவர்கூட நடிக்கணும்னு ஆசையிருக்கு.''

''புதியக் கல்வி கொள்கை பற்றி உங்க கருத்து என்ன?''

எம்.எஸ்.பாஸ்கர் குடும்பம்
எம்.எஸ்.பாஸ்கர் குடும்பம்

''நான் எப்பவோ படிச்சி முடிச்சிட்டேன். இனி, எந்தக் கல்வி கொள்கை கொண்டு வந்தா எனக்கென்ன? என் பிள்ளைகளும் படிச்சு முடிச்சிட்டாங்க. படிக்குற குழந்தைகளுக்கு எது நல்லதுனு அரசாங்கம் பார்த்து செய்யணும். இதுதான் என்னோட வேண்டுகோள். இதுல போயிட்டு அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாதுனு சொல்ல மாட்டேன். அரசாங்கம் நல்லதுனு நினைச்சு ஒன்னு பண்றாங்க. அது நல்லதா, இல்ல கெட்டதானு முடிவு செய்ய வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள். இதுல இந்தி படிக்க கூடாதுனுலாம் யாரும் சொல்லக் கூடாது. ஏன் இந்தி படிக்கக் கூடாது, ஆங்கிலம் மட்டும் படிக்கலாமா? மொழியா படிச்சா எதுவும் தப்பில்ல. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம்னு நான் அஞ்சு மொழிகள் பேசுவேன். தமிழ் மட்டும்தான் பேசுவேன்னு சொன்னா, ஆந்திர பார்டருக்கு என்னாலப் போக முடியாது. எல்லா மொழியும் கத்துக்கணும். தாய்மொழியை நேசிக்கணும்.''