Published:Updated:

"சினிமா சான்ஸ் தேடறப்ப கார் கழுவியிருக்கேன், மூட்டைத் தூக்கியிருக்கேன்!"- முனீஷ்காந்த் பேட்டி

முனீஷ்காந்த்

"2002ல சினிமாவுக்கு வந்தேன். இங்கே பார்க்காத வேலைகள் இல்லை. கார் கழுவுறது, கேட்டரிங்க்ல வேலை, மூட்டை தூக்குறதுனு பல வேலைகள்ல இருந்திருக்கேன். இப்படி வேலைகளை பார்க்க காரணம் என்னன்னா..." - முனீஷ்காந்த்

"சினிமா சான்ஸ் தேடறப்ப கார் கழுவியிருக்கேன், மூட்டைத் தூக்கியிருக்கேன்!"- முனீஷ்காந்த் பேட்டி

"2002ல சினிமாவுக்கு வந்தேன். இங்கே பார்க்காத வேலைகள் இல்லை. கார் கழுவுறது, கேட்டரிங்க்ல வேலை, மூட்டை தூக்குறதுனு பல வேலைகள்ல இருந்திருக்கேன். இப்படி வேலைகளை பார்க்க காரணம் என்னன்னா..." - முனீஷ்காந்த்

Published:Updated:
முனீஷ்காந்த்

மகிழ்ச்சியில் முறுக்கேறி புன்னகைக்கிறார் முனீஷ்காந்த் ஆக மாறி விட்ட ராமதாஸ். காமெடி நடிகராக மட்டுமில்லாமல், கிடைத்த ரோல்களில் எல்லாம் ஸ்கோர்களை அள்ளி வருவதால், 'பேட்ட', 'ஈஸ்வரன்', 'பேச்சுலர்' எனக் கவனிக்க வைக்கிறார். இப்போது தெலுங்கில் முதன்முறையாக ஆதியுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தும் கார்த்தியின் 'சர்தார்', 'ஹாஸ்டல்', 'ஆலம்பனா', 'மிடில் கிளாஸ்' என வரிசை கட்டி நிற்கிறார். விகடன் out of topic வீடியோ பேட்டியில் அவர் பேசியதிலிருந்து சில துளிகள் இங்கே...

முனீஷ்காந்த்
முனீஷ்காந்த்

"இப்ப நான் பண்ற படங்கள்ல எல்லாமே கதையோடு இணைந்த காமெடிகள் பண்ணிட்டு இருக்கேன். வத்தலகுண்டு பக்கம் நிலக்கோட்டைதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். நடிக்க வர்றதுக்கு முன்னாடி கோயம்புத்தூர், மலேசியானு பல ஊர்லகள்ல வேலை செய்திட்டிருந்தேன். 2002ல சினிமாவுக்கு வந்தேன். இங்கே பார்க்காத வேலைகள் இல்லை. கார் கழுவுறது, கேட்டரிங்க்ல வேலை, மூட்டை தூக்குறதுனு பல வேலைகள்ல இருந்திருக்கேன். இப்படி வேலைகளை பார்க்க காரணம், இதுல கமிட்மென்ட் இருக்காது. சினிமா சான்ஸ் வந்து, நாலு நாள்கள் நடிக்க போகணும்னா... எனி டைமும் விட்டுட்டுப் போயிட முடியும். அதனாலேயே அப்படி வேலைகள்ல இருந்தேன். ஆரம்பத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தேன். தாடியெல்லாம் வளர்த்து வில்லனாகவும் ட்ரை பண்ணிட்டிருந்தேன். 'நாளைய இயக்குநர்'ல 'முண்டாசு பட்டி' குறும்படம்ல நடிச்சிருந்தேன். அது படமானது என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. ஒரே நாளில் எனக்கென தனி அடையாளத்தை கொடுத்துச்சு" என உற்சாகமாகப் பேசுகிறார் முனீஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'பேட்ட'ல ரஜினி சாரோட நடிச்சிட்டீங்க...

"கார்த்திக் சுப்புராஜ் சாருக்குத்தான் பெரிய நன்றி சொல்லணும். கனவு நனவானது மாதிரி இருக்கு. ரஜினி சாரோட நடிச்ச அனுபவங்களை மறக்க முடியாது. சில நேரங்கள்ல ஸ்பாட்ல ஷாட்ல நாம நிக்குற இடத்தை மார்க் செய்திருப்பாங்க. அப்படி மார்க் செய்திருக்கற இடத்துலதான் நாம நின்னு நடிக்க வேண்டியதிருக்கும். இப்படி மார்க் செய்திருக்கற இடத்துல ரொம்ப நேரம் நிக்கணும்னாலே எனக்கு ஒரு சலிப்பு வந்திடும். வந்திருக்கு. அந்த எண்ணத்தை அறவே ஒழிச்சவர் ரஜினி சார்தான். எவ்வளவோ படங்கள் அவர் நடிச்சிருந்தாலும் இன்னமும் முதல் படம் பண்றவர் மாதிரிதான் அவர் ஸ்பாட்ல ஆர்வமா இருப்பார். ஆத்மார்த்தமா இருப்பார். அவர்கிட்ட கத்துக்கிட்ட விஷயம் நிறையவே இருக்கு. என் நண்பர்கள் கூட 'தலைவர் கூடவே நடிச்சிட்டீயே'னு சந்தோஷமா சொல்வாங்க."

munishkanth
munishkanth
KIRBAAKARAN

ஞாயிற்றுகிழமைனாலே லாக்டௌன்...

"ஆனா, முதல் லாக்டௌனை மறக்க முடியாது. எங்க அம்மா தவறிட்டாங்க. அம்மாவுக்கு அண்ணனுக்கு, எனக்கு... இப்படி மூணு பேருக்குமே பாசிட்டிவ். அப்பவே மனசு தளர்ந்திடுச்சு. இருபது நாள்கள் சிகிச்சைக்குப் பிறகும் அம்மாவைக் காப்பாத்த முடியல. அம்மாவை இழந்ததும் சில மாதங்கள் அவங்க நினைப்பாகவே இருந்துச்சு. இழப்புங்கறது எல்லாருக்கும் ஒண்ணுதான். ஆனா, அந்த டைம்ல உறவினர்களால் கூட அம்மாவை பார்க்க வரமுடியாமல் போச்சு. யார் மீதும் தப்பு சொல்லவும் முடியல. கோபப்படாமலும் இருக்க முடியல. நாம அப்படி இப்படினு நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, ஒரு சின்ன வைரஸ், சின்னாபின்னாமாக்கிடுச்சு. நடக்கறதுதான் நடக்கும்னு இருக்க வேண்டியதுதான். ஆனாலும் அந்த சூழல்ல கார்த்திக் சுப்பராஜின் அப்பா கஜராஜ் சார், சமுத்திரக்கனி அண்ணன் உதவியாளர்னு பலரும் உதவியா இருந்தாங்க. இந்தத் தருணத்தில் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்க மனைவிக்கு, உங்களைத் தவிர வேற யாரோட காமெடி பிடிக்கும்?

''அவங்களுக்கு என் காமெடி ரொம்ப பிடிக்கும்னாலும் அவங்க சந்தானம் சாரின் ரசிகை. வீட்ல அவர் படத்தை பார்த்துட்டு இருக்கும்போது, டி.வி.யில சந்தானம் சார் சும்மா வந்து நின்னாலே போதும். என்னை வெறுப்பேத்த சிரிப்பாங்க. நான் எமோஷனலா நடிக்கறது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என் படங்கள்ல 'ராட்சசன்' அவங்களுக்கு பிடிக்கும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism