Published:Updated:

"வாக்களிக்கப்படாத தபால் ஓட்டுகள் யாருக்கு சாதகம் பாதகம்னு பார்ப்போம்" - நடிகர் நாசர்

நாசர்
நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் நாசர், செய்தியாளர்களை சந்தித்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்பட நடிகர்களும் நாடக நடிகர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இது வரை 400க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

விஷால்
விஷால்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நாசர், "2016ல் இதே இடத்தில்தான் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் நடக்கணும்னு கொண்டுவந்ததே பாண்டவர் அணிதான். தேர்தல் நடத்த ஆறு மாதம் தாமதத்திற்கான காரணமெல்லாம் சொல்லியாச்சு.

``இந்தத் தேர்தல் ‘இருக்கு ஆனா இல்ல’ " - நடிகை சங்கீதா

இப்போ இருக்கிற கட்டிடத்தின் நிலைமை, சங்க உறுப்பினர்களுக்கு செய்த விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கும்னு நம்புறேன். தபால் வாக்குகள் நிறைய பேருக்கு போய் சேரலை. ரஜினி சாருக்கே தபால் ஓட்டு தாமதமாகத்தான் போய் சேர்ந்திருக்கு. நிறைய உறுப்பினர்களால் தபால் ஓட்டு போட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானதுதான். அந்த வாக்களிக்கப்படாத ஓட்டுகள் யாருக்கு சாதகம் பாதகம்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு