Published:Updated:

``நான் 20 வருஷமா போராடிட்டிருக்கேன்!" - நடிகர் நந்தா சிறப்புப் பேட்டி

நந்தா
நந்தா

நான் நினைக்கிற வெற்றியை அடைய 20 வருஷமா போராடிட்டிருக்கேன். கஷ்டமா, சவாலாதான் இருக்கு. அதேசமயம் இந்த சினிமா வாழ்க்கை ரொம்ப அழகாவும் இருக்கு

'மெளனம் பேசியதே' நண்பன், 'புன்னகைப் பூவே' ஹீரோ, 'ஈரம்' வில்லன் என நடிகர் நந்தாவின் திரைப்பயணத்தில் பல பரிமாணங்கள். சமீபத்தில் 'வானம் கொட்டட்டும்' படத்தில் டபுள் ஆக்‌ஷனில் அசத்தியிருந்தார். நந்தா, நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பரும்கூட. அவர் உடனான ஓர் உரையாடல்...

'`நீங்க சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்கள் இலக்கை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?''

'`ஹீரோவா நிறைய படம் பண்ணினேன். வில்லனா நடிச்சு நல்ல பேர் வாங்கினேன். நிறைய தோல்விகள். ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைக் கத்துக்கொடுத்திருக்கு. நிறைய வலிகள். அந்த வலிகள் நிறைய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கஷ்டப்படும்போதுதான் நாம சரியா போயிட்டிருக்கோம்னு அர்த்தம். நான் நினைக்கிற வெற்றியை அடைய 20 வருஷமா போராடிட்டிருக்கேன். கஷ்டமா, சவாலாதான் இருக்கு. அதேசமயம் இந்த சினிமா வாழ்க்கை ரொம்ப அழகாவும் இருக்கு.''

'`ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வாழ்க்கை வரலாற்றுல நடிச்சிட்டிருக்கீங்க. எதற்காக இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தீங்க?''

'`திலீபனோட வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கணும் என்பது என் சினிமாக் கனவோட உச்சம். அதை எல்லோர்கிட்டேயும் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு நினைக்கிறேன். அதற்காகத்தான் அந்தப் படத்தை எடுத்திருக்கேன். இன்னும் கொஞ்சம் காட்சிகள் எடுக்கப்படணும். விரைவில் அதை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்த்துடுவேன்.''

``நான் 20 வருஷமா போராடிட்டிருக்கேன்!" - நடிகர் நந்தா சிறப்புப் பேட்டி

'`அடுத்து 'பரமபத விளையாட்டு' படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். 'துப்பறிவாளன் -2' படத்தில் என்ன கேரக்டர் ?''

'` 'பரமபத விளையாட்டு' படத்துல த்ரிஷாதான் லீட். எனக்கும் ரொம்ப நல்ல கேரக்டர். 'துப்பறிவாளன் -2' படத்துல நான் நடிக்கல. விஷாலோட நண்பனா அவர்கூட இருந்து தயாரிப்புப் பணிகளைப் பார்த்துக்குறேன். அவ்ளோதான்.''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > "மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!" https://bit.ly/36ZqJES

'`நடிகர் சங்கக் கட்டடம் பாதியில் நிற்குது... தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்னு விஷால் சொல்றார். ஒரு நண்பரா விஷாலின் இந்தச் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீங்க?''

'`நடிகர் சங்கக் கட்டடம் பாதியில் நிற்கக் காரணம் சில பேரோட சுயநலம்தான். குறிப்பா ஐசரி கணேஷ் சார்.

ஒரு தனிப்பட்ட மனிதரால இந்தக் கட்டடம் கட்டமுடியாது. இந்தக் கட்டடத்துக்கு அவரோட பெயர் மட்டும் வரணும்னா அதை எப்படிப் பண்ணமுடியும். இது ஒரு கூட்டு உழைப்பு. இந்த இடத்துக்கு எம்ஜிஆர் சார், சிவாஜி சார் காலத்துல இருந்து பெரிய வரலாறு இருக்கு. பல கலைநிகழ்சிகள் நடத்தி நிதி திரட்டி 80 சதவிகிதம் கட்டடத்தைக் கட்டி முடிச்ச பிறகு நிறுத்தியிருக்காங்க.

பல போராட்டங்களுக்குப் பிறகுதான் போன வருஷம் தேர்தல் நடந்தது. கிட்டத்தட்ட தமிழக அரசோடு போராடித்தான் இந்தத் தேர்தலே நடந்தது. அப்போ பதியப்பட்ட வாக்குகளை எண்ணினா யார் ஜெயிச்சிருக்காங்கன்னு தெரியும். ஆனா, எண்ண மாட்டேங்கிறாங்க. அதற்காகத்தான் நாங்க நீதிமன்றத்துக்குப் போயிருக்கோம். தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தலைவரா விஷால் எதுவும் செய்யலைன்னு சிலர் சொல்றாங்க. செயல்படவிடவில்லை என்பதுதான் உண்மை. அதற்கும் நேரடியா தேர்தல் நடத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் அரசு அதிகாரிகள் போட்டு இப்போ இயக்கிட்டு இருக்காங்க.''

``நான் 20 வருஷமா போராடிட்டிருக்கேன்!" - நடிகர் நந்தா சிறப்புப் பேட்டி

> '`நீங்கள் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் பேரன் என்பதால் இதைக் கேட்கிறேன். ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது, போர் நிறுத்தத்துக்காக கருணாநிதியும் அரைநாள் உண்ணாவிரதம் இருந்தாரே... அந்தச் சம்பவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?''

> '` 'துப்பறிவாளன் -2' படத்தில் என்னதான் பிரச்னை?''

> '`நடிகர் சங்கத்துக்குத் தேர்தலே நடத்தாமல் பிரச்னைகளை சுமூகமாகப் பேசித் தீர்க்க முடியாதா?''

> '`தேர்தல் இல்லாமல் செயல்படமுடியுமான்னு ஐசரி கணேசன் சாரும், கார்த்தி சாரும் நேர்ல சந்திச்சுப் பேசினாங்க. தேர்தல் இல்லாம சுமுகமாப் போறதுக்கு ஐசரி சார் சொன்ன கண்டிஷன் விஷால் சங்கத்துக்குள்ள வரக்கூடாதுங்கிறது. இதை எப்படி ஏத்துக்க முடியும்?

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > "மிஷ்கின் மட்டும்தான் ஒரே பிரச்னை!" https://bit.ly/36ZqJES

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு