சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நாசரைப் பார்த்ததும் உதறல் எடுத்துச்சு!”

நட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
நட்டி

நான் எப்பவுமே ஒரு படம் முடிச்ச பிறகுதான் அடுத்த படத்துக்குள் போறேன். அது ஒளிப்பதிவா இருந்தாலும் சரி, நடிப்பா இருந்தாலும் சரி. குழப்பமில்லாமல் பார்த்துக்கறேன்.

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராகி, ஹீரோவாக ‘வெப்’, ‘இன்பினிட்டி’, ‘குருமூர்த்தி’, ‘பகாசூரன்’ எனப் பல படங்கள் கைவசம் வைத்திருக்கும் நட்டியிடம் பேசினேன்.

“நண்பர்களாலதான் நான் நடிகரானேன். நண்பர்களாகச் சேர்ந்து ஒரு சின்ன பட்ஜெட்ல ஒரு படம் பண்ணலாம்னு இறங்கினாங்க. அதான் ‘நாளை.’ அதுல நான் நடிக்கறதாவே இல்ல. நண்பர் உதயபானு மகேஸ்வரன்தான் (‘ஃபேமிலிமேன்’ செல்லம் சார்) இயக்குநர். ‘நாளை’யில நடிக்க வேண்டியவர் வரலை. அமெரிக்காவுக்குப் போயிட்டார். அதனால செல்லம் சார் என்னையே நடிக்கச் சொல்லிட்டார். படத்துல என் ரோலுக்கு முதல்ல வேற ஒரு பெயர்தான் இருந்துச்சு. ஆனா, நண்பர்கள் `நட்டி’ன்னு என்னைக் கூப்பிடுறதையே என் கேரக்டர் பெயரா வச்சிட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் அந்த நட்டி நிலைச்சிடுச்சு. ஆனா, முதல்நாள் கேமராவுக்கு முன்னாடி நின்னதை இப்பவும் மறக்கமுடியல.

“நாசரைப் பார்த்ததும் உதறல் எடுத்துச்சு!”

ஏன்னா, இந்தியில அப்ப நிறைய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணி முடிச்சிருந்தாலும், திரைக்கு முன்னாடி நின்னது திகில் அனுபவம்தான். அதுவும் ‘நாளை’ படத்துல முதல்நாள் நாசர் சார் காம்பினேஷன்ல ஷாட். அவரைப் பார்த்ததும் உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா, கமல் சாருக்கு சரிசமமா நடிச்சவர்கூட நடிக்கறோம்னு பயம் வந்து, பேச்சு வரல. அப்புறம் நாசர் சார் என்னை கூல் பண்ணினார்.

நான் எப்பவுமே ஒரு படம் முடிச்ச பிறகுதான் அடுத்த படத்துக்குள் போறேன். அது ஒளிப்பதிவா இருந்தாலும் சரி, நடிப்பா இருந்தாலும் சரி. குழப்பமில்லாமல் பார்த்துக்கறேன். ‘கர்ணன்’ கண்ணபிரான் மாதிரி கதாபாத்திரங்கள் கிடைச்சா, கண்டிப்பா பண்ணுவேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சதில்ல. சினிமாவுல 23 வருஷத்துக்கு மேல இருக்கறதால, கதைகளை ஓரளவு ஜட்ஜ் பண்ணத் தெரியுது.’’

“நாசரைப் பார்த்ததும் உதறல் எடுத்துச்சு!”

``இப்ப நடிச்சிருக்கிற ‘வெப்’ எப்படி வந்திருக்கு?’’

`` `வெப்’ ஒரு சுவாரசியமான த்ரில்லர். வாழ்க்கை ஒரு வலை. நம்மளச் சுத்தி நமக்கே தெரியாம பின்னப்பட்டிருக்க வலைகள்ல நாம விழுந்திடுறோம்னு உணர்த்துற ஒரு கதை இது. அறிமுக இயக்குநர் ஹாரூன் கதையைச் சொல்லும்போது, உடனே ஷூட்டிங் போயிடலாம்னு சொல்லச் தோணுச்சு. கொரோனா லாக்டௌன் டைம்லதான் இதோட ஷூட் போச்சு. ஷில்பா மஞ்சுநாத், ஷாஸ்வி பாலா, சுபப்ரியா, அனன்யா மணின்னு நாலு பேர் நடிக்கறாங்க. இவங்க யாரும் புதுமுகம் இல்ல. ஏற்கெனவே படங்கள் பண்ணினவங்க. அசாத்தியமா நடிச்சிருக்காங்க. இதுல ஷில்பாவை எல்லாருக்கும் தெரியும். படத்துக்கு கார்த்திக்ராஜா இசையமைச்சிருக்கார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். முழுக்க முழுக்க சென்னையிலதான் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த ‘வெப்’ கண்டிப்பா பேசப்படும்.’’

“நாசரைப் பார்த்ததும் உதறல் எடுத்துச்சு!”
“நாசரைப் பார்த்ததும் உதறல் எடுத்துச்சு!”

`` ‘கர்ணன்’ வெளியாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு..?’’

‘`தாணு சார் என் குரு. அவர் என்னைக் கூப்பிட்டு மாரி செல்வராஜ் சார் படத்துல நடிக்கச் சொன்னார். மாரி சார் என்கிட்ட ‘கண்ணபிரான் கேரக்டருக்கு நீங்க... நீங்களாக வாங்க. அது போதும்’னு சொல்லிட்டார். முதல்நாள் திருநெல்வேலியில் ஏதோ ஒரு ஊர்ல போய் இறங்குறேன். ஸ்பாட்டுல எல்லாரும் இருந்தாங்க. ஊர் மக்கள்னு நினைச்சிருந்தேன். ஆனா, அதுல ஜி.எம்.குமாரை மட்டும்தான் அடையாளம் தெரிஞ்சது. வேற யாரையும் தெரிஞ்சுக்க முடியல. மத்தவங்களும் நடிகர்கள்தான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அந்த ஷெட்யூல் ஒர்க் பண்றப்பவே ‘இந்தப் படம் வரும்போது உங்களுக்குத் தெரியும்ங்க... கொண்டாடுவீங்க’ன்னு ட்வீட் போட்டேன். அதேபோல படம் வந்த பிறகு மக்கள் கொண்டாடினாங்க. படம் பார்த்துட்டு எனக்கு போன்கால்லயும், மெசேஜ்லேயும் அத்தனை ஏச்சு பேச்சுகள் வந்துச்சு. எல்லாத்தையுமே எனக்குக் கிடைச்ச பாராட்டுகளா நினைச்சேன்!’’