Published:Updated:

"மனம் சமநிலை இழக்கிறது..." - பொன்வண்ணனின் இன்னொரு முகம்!

பொன்வண்ணன்
பொன்வண்ணன்

பணத்துக்காகச் செய்யும் வேலைகளை நம் திருப்திக்காக மட்டும் செய்யமுடியாது. ஆத்ம திருப்திக்காக நாம் செய்யும் வேலைகளைப் பணத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ளக் கூடாது

"ஓவியத்தின் வழியே சமகால அரசியலைப் பதிவு செய்து வருகிறீர்கள். அந்த அரசியல் பார்வை எப்போது தொடங்கியது?''

"அரசமைப்பு, போர் போன்றவை எளிய மக்களை எப்படி பாதிக்கின்றன என்ற பார்வையை நான் படித்த கம்யூனிச புத்தகங்கள் கொடுத்தன. கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோதே உள்ளூர் அரசியலை விமர்சித்து ஓவியங்கள் வரைவேன். நமக்கென வாழ்க்கை அனுபவத்தில், வாசிப்பில் ஒரு அரசியல் பார்வை இருக்குமல்லவா, அதைத்தான் என் ஓவியத்தில் நான் பிரதிபலிக்கிறேன்.

இவ்வளவு வளர்ச்சியடைந்த நாட்டில் கைக்குழந்தைகளைச் சுமந்து கொண்டு நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்லும் மனிதர்களைப் பார்க்கையில் மனம் சமநிலை இழக்கிறது. வழியில் குடிநீர் கூடக் கிடைக்குமா அவர்களுக்கு என்பது தெரியாது. என்னிடம் உள்ள கருவியின் வழியே என் கருத்தை நாகரிகமாக, பொறுப்புணர்வுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன்."

"கொரோனா காலகட்டத்தில் நம் சமூகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"மனிதர்கள் என்கிற அடையாளம் தவிர்த்து சாதி, மதம், நிறம், என வேறு வேறு அடையாளங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நமது சமூக வளர்ச்சி என்பது இந்தக் காரணங்களால் பின்னோக்கி இருக்கிறது. இங்கு அரசியலும் அப்படிதான் இருக்கிறது. இன்று கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசின் உதவிகள் போதுமானதாக இல்லை. நண்பர்கள், சுற்றியிருப்பவர்களின் உதவியும் நிறைவானதல்ல..."

பொன்வண்ணன் வரைந்த ஓவியங்கள்
பொன்வண்ணன் வரைந்த ஓவியங்கள்

"பணத்துக்காகச் செய்யும் வேலைகளை நம் திருப்திக்காக மட்டும் செய்யமுடியாது. ஆத்ம திருப்திக்காக நாம் செய்யும் வேலைகளைப் பணத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ளக் கூடாது. எனக்குள் இருக்கும் கலை என் உழைப்பின் களைப்பைப் போக்கும். அது நம்மை மீறி மக்களுக்காக மாறும்போது வேறு வடிவம் பெறுகிறது. இயல்பில் நமக்கு இருக்கும் திறமையை நாம் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்."

ஓவியரின் நிதானத்தோடு பேசுகிறார் நடிகர் பொன்வண்ணன். நடிகர், இயக்குநர் எனத் தனது திரைத்துறைப் பங்களிப்பின் வழியே மக்களுக்கு அறிமுகமானவர், ஊரடங்கு காலத்தில் சமூகவலைதளத்தில் தன் ஓவியங்கள் மூலம் கவனம்பெறுகிறார்.

அவ்வப்போது வெளிப்படையாக அரசியல் கருத்துகளையும் முன்வைக்கும் பொன்வண்ணனுடன் உரையாடை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "கடவுளும் மதமும் நம்மைக் காப்பாற்றவில்லை!" Click here https://bit.ly/36loIm5

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு