Published:Updated:

``பொன்னியின் செல்வன் படத்துக்கு என்னைக் கூப்பிட மாட்டாங்கன்னு நினைச்சேன்...ஆனா!" - ரகுமான் ஷேரிங்ஸ்

'பொன்னியின் செல்வன்' ஸ்பாட்டில்..

ஆனாலும் ஒரு நடிகரா என்னோட பெஸ்ட் உழைப்பு என்னவோ அதைக் கொடுத்தேன். நான் ரியல் லைஃப்ல சந்திச்ச போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பாங்களோ அவங்கள மாதிரி, என் கேரக்டரை ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டேன்.

Published:Updated:

``பொன்னியின் செல்வன் படத்துக்கு என்னைக் கூப்பிட மாட்டாங்கன்னு நினைச்சேன்...ஆனா!" - ரகுமான் ஷேரிங்ஸ்

ஆனாலும் ஒரு நடிகரா என்னோட பெஸ்ட் உழைப்பு என்னவோ அதைக் கொடுத்தேன். நான் ரியல் லைஃப்ல சந்திச்ச போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பாங்களோ அவங்கள மாதிரி, என் கேரக்டரை ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டேன்.

'பொன்னியின் செல்வன்' ஸ்பாட்டில்..

தமிழ் சினிமா ஹீரோக்களில் 90களின் காலகட்டத்தில் ஸ்மார்ட் பாய் ஆக மின்னியவர் ரஹ்மான். இப்போதும் அதே ஸ்மார்ட் மேனாக புன்னகைக்கிறார். `பொன்னியின் செல்வன்' படத்தில் மதுராந்தக சோழனாக அசத்தியவரின் சென்ற வார பேட்டியின் தொடர்ச்சி இது.

ரகுமான்
ரகுமான்

`துருவங்கள் பதினாறு' பண்றப்ப அந்தப் படத்துக்கு மக்கள்கிட்ட அமோக வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?

``எந்த ஒரு படம் பண்ணினாலும், அதை மக்கள் ஏத்துக்குவாங்க என்கிற நம்பிக்கை நமக்கு இருக்காது. ஒரு நல்ல படம் பண்ணியிருக்கோம். நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கோம் என்பது மட்டும்தான் நம்ம கையில இருக்கும். மீதியெல்லாம் நல்ல இடம், நல்ல நேரம், சரியான ஆட்கள்கிட்ட கொண்டு சேர்க்கறதுனு இப்படி பல விஷயங்களை சார்ந்தே, ஒரு வெற்றி அமையுது. `துருவங்கள் பதினாறு' படத்துக்கு முன்னாடி, நான் சில படங்கள்ல போலீஸா நடிச்சிருந்தேன். இனிமே போலீஸா நடிக்க வேணாம்னு முடிவு பண்ணின டைம்ல கார்த்திக் நரேன் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் பார்த்ததும், அவர் தான் இயக்குநரா இருப்பார்னு எனக்கு தெரியாது. அவர் யாரோட உதவியாளராகவோ இருப்பார். டைரக்டர் யாரும் அவரை கதை சொல்ல அனுப்பி வச்சிருப்பாங்கனு நினைச்சேன். ஆனா, அவர்தான் இயக்குநர்னு தெரிஞ்சதும், கதை என்னனு கேட்காமல், என் கேரக்டர் என்ன?னு மட்டும் கேட்டேன். அவரோட 'நீங்க ஒரு முறை கதையை கேளுங்க.. 'னு மட்டும் சொல்லிட்டிருந்தார்.

‘துருவங்கள் பதினாறு’
‘துருவங்கள் பதினாறு’

அப்புறம், அவர்தான் இயக்குநர்னு தெரிஞ்சது. சின்னப் பையனா தெரியறார். சினிமா பத்தி அவருக்கு என்ன தெரியும்னு நினைச்சேன். நான் ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணியிருக்கேன்னார். அவர் என்னை மூணு மாசம் விடாமல் தொடர்ந்து அப்ரோச் பண்ணினார். ஒருநாள் அவரோட டெக்னிக்கல் குழுவோடு வந்திருந்தார். அப்ப அவர் கதை சொன்னப்ப, நான் சில டவுட்ஸ் கேட்டேன். என்னோட ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் அவர் டீம்ல உள்ள அத்தனை பேரும் விளக்கங்களை சொன்னாங்க. அவங்க சொன்ன முறையில நான் இம்ப்ரஸ் ஆகிட்டேன். அப்புறம், ஷூட்டிங் கிளம்பினோம். அந்தப் படம் பெரிய ஹிட் அடிக்கும்னு நினைக்கவே இல்ல. ஆனாலும் ஒரு நடிகரா என்னோட பெஸ்ட் உழைப்பு என்னவோ அதைக் கொடுத்தேன். நான் ரியல் லைஃப்ல சந்திச்ச போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பாங்களோ அவங்கள மாதிரி, என் கேர்க்டரை ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டேன். அப்புறம் படம் ரெடியானதும் தியேட்டர்ல போட்டு பார்த்தேன். அவ்ளோதான் நான் அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டேன். ரொம்பவே திருப்தியா வந்திருந்ததுல என் கண்ணு கலங்கிடுச்சு. அந்த எமோஷனலோட கார்த்திக் நரேனை கட்டியணைத்து பாராட்டினது இன்னமும் ஞாபகத்துல இருக்கு. அந்தப் படம் ரிலீஸ் ஆனப்ப சூப்பர் ஸ்டார்ஸ் படங்களும் அப்ப ரிலீஸ் ஆகியிருந்தது. அதையெல்லாம் தாண்டி, 'துருவங்கள் பதினாறு' ஓடுச்சு.''

ரெண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் நீங்க.. பெண் குழந்தைகளை வளர்க்கறதுக்கான டிப்ஸ் சொல்லுங்க..?

நடிகர்கள் ரீயூனியனில்..
நடிகர்கள் ரீயூனியனில்..

''என்னோட 5 வயசில இருந்து, காலேஜ் வரைக்குமே நான் போர்ட்டிங்ல தான் தங்கி படிச்சிருக்கேன். அப்பா, அம்மாவோட வீட்ல இருந்த நேரங்கள் மிகக்குறைவு. என் ஃபேமிலியை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். அப்படி ஒரு சூழல் என் குழந்தைகளுக்கு இருக்கக் கூடாதுனு நினைச்சேன். பிசியா நடிச்சிட்டு இருந்தாலும், கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அதை வீணடிக்க மாட்டேன். குடும்பத்தோடுதான் செலவு பண்ணுவேன். என் குழந்தைகள் ஸ்கூல், காலேஜ்னு போறப்பவும் அவங்களை கார்ல டிரைவர் போட்டு அனுப்பாமல், நானோ என் மனைவியோ டிரைவ் பண்ணி கொண்டு போய் விடுவோம். அழைச்சிட்டு வருவோம். அதைப் போல சாயந்திரம் டியூஷன் போனாக் கூட, அவங்கள விட்டுட்டு ரெண்டு மணி நேரமானாலும் கார்ல காத்திருந்து அழைச்சிட்டு வருவோம். ஏன்னா, பிள்ளைங்க வீட்டுல நம்மகிட்ட மனம்விட்டு பேச நேரம் அமையாது. ஆனா, டிராவல்ல தனியா போறப்ப, எல்லா விஷயமும் பேசிட்டு வருவாங்க. அன்பும், புரிதலும் இன்னும் ஜாஸ்தியாகும். இது என் அனுபவ வார்த்தைகள்''

'பொன்னியின் செல்வன்' ஸ்பாட்டில்..
'பொன்னியின் செல்வன்' ஸ்பாட்டில்..

நீங்க ரெண்டு கதைகள் எழுதி வச்சிருக்கீங்க.. அதை டைரக்ட் பண்ணப் போறீங்கனு சொல்றாங்களே?

''உண்மைதான்! எல்லா மொழிகள்லேயும் ஜாம்பவான் இயக்குநர்களோட படங்கள்ல நடிச்சிருக்கேன். அந்த அனுபவத்துல டைரக்‌ஷன் ஆர்வம் எப்பவோ வந்திடுச்சு. எனக்கு நேரம் கிடைக்கறப்ப, கதைகள் எழுத ஆரம்பிச்சேன். த்ரில்லர் ஜானர் பிடிக்கும். நிறைய கதைகள் இருந்தாலும் என்னை மனசுல வச்சு, எனக்கான கதை ஒண்ணும் ரெடி பண்ணியிருக்கேன். அதை தயாரிப்பாளர் ஒருத்தர்கிட்டேயும் பேசிட்டிருக்கேன். மத்த ஹீரோக்களை வச்சு, படம் பண்ணுவேனானு என் கதைகள் தான் முடிவு பண்ணனும். நல்ல தயாரிப்பாளர் அமைந்ததும், டைரக்டர் ரகுமானை பார்க்கலாம் ஆனாலும் டைரக்‌ஷனுக்கு அவசரப்படல. நிதானமா போயிட்டிருக்கேன்.)

முழு நேர்காணல் வீடியோவாக... கீழே