Published:Updated:

``விக்ரம்தான் நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்!'' - ரீஎன்ட்ரி ராஜா

"சினிமால நடிச்சு 18 வருஷங்கள் ஆச்சு. முரளி நடிச்ச 'கண்ணுக்கு கண்ணாக' படத்துலதான் கடைசியா நடிச்சேன். அதுக்கு அப்புறம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் எதுவும் வராததனால் சினிமாவை விட்டு விலகியிருந்தேன். இடையில் என்னோட மார்பிள் பிசினஸ் பார்த்துட்டிருந்தேன்."

ராஜா
ராஜா

விக்ரம் மகன் துருவ் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது 'ஆதித்ய வர்மா'. இந்தப் படத்தில் துருவின் அப்பாவாக 'கடலோரக் கவிதைகள்' ராஜா நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து ராஜா இந்தப் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவரிடம் பேசினேன்.

ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா

"'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலமா சினிமாவுக்குள் என்னை பாரதிராஜா சார் கொண்டு வந்தார். வெங்கடேஷ்ங்கிற என்னோட பெயரை மாத்தினார். என்னில் பாதியை உனக்கு கொடுத்துட்டேன்னு 'ராஜா'னு பேர் வெச்சார். அவரோட இயக்கத்துல நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டுட்டேன். இப்போ ரீ-என்ட்ரி'' என உற்சாகமாகப் பேசுகிறார் ராஜா.

''சினிமால நடிச்சு 18 வருஷங்கள் ஆச்சு. முரளி நடிச்ச 'கண்ணுக்கு கண்ணாக' படத்துலதான் கடைசியா நடிச்சேன். அதுக்கு அப்புறம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் எதுவும் வராததனால் சினிமாவை விட்டு விலகியிருந்தேன். இடையில் என்னோட மார்பிள் பிசினஸ் பார்த்துட்டிருந்தேன். அப்போதான் 'ஆதித்ய வர்மா' படத்தோட வாய்ப்பு வந்தது. இது விக்ரம் மூலமாதான் வந்தது.

Raja
Raja
தள்ளிப்போகும்`ஆதித்ய வர்மா' ரிலீஸ்... காரணம்,`பிகில்'?!

'பொன்னியில் செல்வன்' படத்தோட குதிரைப் பயிற்சிக்காக கிளப்புக்கு வருவார் விக்ரம். அங்கேதான் ரெண்டு பேரும் அடிக்கடி சந்திப்போம். நிறைய விஷயங்கள் பற்றிப் பேசுவோம். அவரோட பிரச்னைகள் பத்தியெல்லாம் சொல்லுவார். அப்போதான் 'ஆதித்ய வர்மா' படத்தை திரும்ப எடுக்கயிருக்குறது பத்திச் சொன்னார். சொல்லிட்டு, 'படத்துல வர்ற அப்பா கேரக்டர் பண்ண முடியுமா'னு கேட்டார். 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு வெர்ஷன் பார்த்திருக்கேன். எனக்குப் படமும் பிடிக்கும். ஆனா, எதுக்காக சரினு சொன்னேன்னு எனக்கே தெரியல. விக்ரம் சார் கேட்டவுடனே சரினு சொல்லிட்டேன்.

சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலங்களிலிருந்தே விக்ரம் தெரியும். அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டா இருக்குறப்போ கலா மாஸ்டர் கிட்ட டான்ஸ் க்ளாஸுக்கு வருவார். நானும் அங்கே கிளாஸ் போவேன். அப்போ ரெண்டு பேரும் சந்திச்சுப் பேசியிருக்கோம். அதுக்கு அப்புறம் அவர் படங்களில் நடிச்சு பெரிய நடிகரா வந்துட்டார். அடிக்கடி நடிகர் சங்கத்தில் சந்திப்போம்.

Raja in Adithya Varma
Raja in Adithya Varma

ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் எப்போதும் இருப்பார். எப்படி நடிக்கணும்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பார். குறிப்பா படத்தில் எனக்கான காட்சிகளை அவர்தான் சொல்லிக் கொடுத்தார். துருவ் பாடி லாங்குவேஜ் எப்படியிருக்கணும்னு சொல்லிக் கொடுத்துட்டே இருப்பார். முக்கியமா படத்தோட டப்பிங் அப்பவும் இருந்தார். அவர்கூட இருந்ததே பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு.

தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனில் இந்தப் படத்தை பார்த்திருந்தாலும் ரசிகர்களுக்கு இது தமிழில் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும். துருவ் அவரோட நடிப்பு மூலமா வித்தியாசத்தைக் காட்டியிருக்கார். நல்ல அப்பா அவருக்கு கிடைச்சிருக்கார். ஆசீர்வதிக்கப்பட்டவர் துருவ்!

துருவ், விக்ரமுடன்...
துருவ், விக்ரமுடன்...
`வசூல்ராஜா' டு `ஆதித்ய வர்மா'... தமிழ் சினிமா டாக்டர்கள் எப்படி?

விக்ரமுக்கு இயக்குநர் ஆகுற எல்லா வாய்ப்பும் இருக்கு. அந்தளவுக்குத்தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார். டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. பல வருஷங்களுக்குப் பிறகு நானும் நடிக்க வந்ததனால் எனக்குள்ளே இருந்த தயக்கத்தையும் உடைச்சு ஸ்பாட்டில் நல்ல நண்பரா இருந்தார் விக்ரம். படத்தோட டிரெய்லருக்குப் பிறகு நிறைய பேர் மத்த படங்களில் நடிக்கக் கேட்குறாங்க. நல்ல கேரக்டர்கள் வந்தா நடிப்பேன்'' என்கிறார் ராஜா.