Published:Updated:

`20 நிமிட சந்திப்பு; ஓவியம் பரிசளிப்பு!' - ரஜினியுடனான சந்திப்பால் நெகிழும் `லெக்ஃபி' புகழ் பிரணவ்

கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.

ரஜினியுடன் பிரணவ்
ரஜினியுடன் பிரணவ்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், தன்னம்பிக்கையால் தனது வாழ்க்கையில் வீறு நடைபோட்டு வருகிறார்.

பிரணவ்
பிரணவ்

சராசரி இளைஞர்கள் செய்யும் காரியங்களை மட்டுமல்லாமல், அவர்கள் செய்யாத காரியங்களையும் செய்து வருகிறார் பிரணவ். பட்டப்படிப்பை முடித்த இவர், ஓவியம் வரைவதிலும் சொல்லி அடிக்கும் கில்லியாக இருந்து வருகிறார்.

``முதல்வர் பினராயி விஜயன் என் காலைப் பிடிச்சதும்...?!’’ - கேரளா `லெக்ஃபீ’ வைரல் பிரணவ் #VikatanExclusive

சமீபத்தில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்தார் பிரணவ். அப்போது, பினராயி விஜயனுடன், பிரணவ் எடுத்த செஃல்பி நாடு முழுவதும் வைரலானது. இதையடுத்து, பிரணவைச் சந்தித்து நாம் பேட்டி எடுத்தோம்.

ரஜினியுடன் பிரணவ்
ரஜினியுடன் பிரணவ்

அப்போது, நடிகர் ரஜினியைச் சந்திக்க வேண்டுமென்பது தனது வாழ்நாள் கனவு என்று பிரணவ் கூறியிருந்தார். அவரது பேட்டி 'ரஜினியைச் சந்திக்க ஆசை' என்ற தலைப்பில் 28.11.2019 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தது.

இதைப்பார்த்த நடிகர் ரஜினி தரப்பினர், பிரணவை தொடர்பு கொண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக,

பிரணவ் பதிவு
பிரணவ் பதிவு

பிரணவ் தனது வாட்ஸ்அப் மற்றும் முகநூல் பக்கங்களில், "மிக முக்கியமான வி.வி.ஐ.பி ஒருவரைப் பார்க்க இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ஆனந்த விகடன் இதழுக்கு நன்றி" என்று பதிவு போட்டிருந்தார்.

``முதல்வர் பினராயி விஜயன் என் காலைப் பிடிச்சதும்...?!’’ - கேரளா `லெக்ஃபீ’ வைரல் பிரணவ் #VikatanExclusive

பிரணவ் மற்றும் அவரது பெற்றோருக்கு ரஜினி தரப்பில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் மாலை 5.30 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் பிரணவ். அவரிடம் எதிர்கால லட்சியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்திந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட ரஜினி, `எல்லாமே நல்லபடியா நடக்கும். என்னோட சப்போர்ட் எப்பவும் இருக்கும்' என்று கூறி தனது பெர்சனல் போன் நம்பரையும் ரஜினி பிரணவிடம் கொடுத்திருக்கிறார். அப்போதுரஜினிக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.அதேபோல, ரஜினியுடன் தனது ஸ்பெஷல் செல்ஃபி ஒன்றையும் எடுத்தார்.