Published:Updated:

"எனக்குள்ளேயும் வடிவேலு, சூரி, சந்தானம் எல்லாரும் இருக்காங்க!" - மனம் திறக்கும் ராஜ்கிரண்

'ராஜ்கிரண் சார் ரொம்ப கோபக்காரர்; கதை பிடிக்கலைன்னா வெளியே போடான்னு சொல்லிடுவார், அடிச்சுடுவார்'னு வதந்திகளை வேற பரப்புறாங்க.

"வெளியே இருந்து பார்க்குறவங்களுக்கு நான் முரடனா தெரியுறேன். படத்துக்கு என்னை கமிட் பண்ண வர்றவங்ககூட பயந்து, பயந்துதான் வர்றாங்க. 'ராஜ்கிரண் சார் ரொம்ப கோபக்காரர்; கதை பிடிக்கலைன்னா வெளியே போடான்னு சொல்லிடுவார், அடிச்சுடுவார்'னு வதந்திகளை வேற பரப்புறாங்க. ஆனால், உண்மையில் எனக்கு மேனேஜர்கூடக் கிடையாது. எனக்குள்ளேயும் வடிவேலு, சூரி, சந்தானம் எல்லாரும் இருக்காங்க" என கம்பீரப் புன்னகை சிந்துகிறார் ராஜ்கிரண்.

சீனியர் தயாரிப்பாளரா இன்றைய தமிழ் சினிமாச் சூழலை எப்படிப் பார்க்குறீங்க?

"அந்தக் காலத்தில் தயாரிப்பாளரும் கதை பற்றிய ஞானத்துடன் இருப்பார். ஓரளவுக்குக் கையிலும் பணம் வெச்சிருப்பார். கதை எழுதவும் ஒரு கூட்டம் இருக்கும். அவங்க கிட்ட கதை கேட்டு, பிடிச்சுப்போனால் கதைக்கு யாரெல்லாம் நடிச்சா நல்லாருக்கும்னு யோசிப்பார். மத்தவங்க கிட்டேயும் கலந்து யோசிச்சுட்டு நடிக்குறவங்களுக்கு ஒரு தொகையை அட்வான்ஸா கொடுத்துட்டு வருவார். ஆனால் இன்னைக்கு எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. சினிமா உலகம் ரொம்ப வேகமா போயிட்டிருக்கு. தயாரிப்பாளர்கள் யாரும் இப்போ கதை கேட்குறது கிடையாது. அதனால், கதை ஆசிரியர்கள்ங்கிற இனமே இப்போ இல்லை.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

பெரிய ஹீரோக்களை வெச்சி பண்ணினா பெருசா லாபம் எடுக்கலாம்னு நினைச்சிட்டு, பெரிய ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு கமிட் பண்ணிடுறாங்க. தயாரிப்பாளர் கிட்ட செல்வாக்கு தவிர வேற எதுவும் இருக்காது. பைனான்சியர்தான் மொத்தப் பணமும் கொடுக்கிறார். தயாரிப்பாளருக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்கணும்ங்கிற பொறுப்பைத் தாண்டி வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. இதுதான் இன்னைக்கு நிலைமை. இதனால்தான், அந்தக் காலத்தில் பெரிய நிறுவனமா இருந்த ஏவிஎம், சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் இப்போ படம் தயாரிக்க முன்வர்றது இல்லை."

வெப் சீரிஸ் போன்ற ஆன்லைன் தளத்துல உங்களை எதிர்பார்க்கலாமா?

"எனக்கு வெப் சீரிஸ் பத்தியெல்லாம் தெரியாது. ஆனால், எனக்கான சம்பளம் கொடுத்தால் கண்டிப்பா நடிப்பேன். பிழைப்புக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். என் கொள்கைக்கு மாற்றம் ஏற்படுத்தாத கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பா பண்ணுவேன். 'நெகட்டிவ் கதாபாத்திரங்கள் பண்ணக்கூடாங்கிறது என் கொள்கை. 'சிவாஜி' படத்தில் ரஜினி சாருக்கு வில்லனா நடிக்க வந்த வாய்ப்பையே மறுத்தவன் நான்."

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

"ஒவ்வொரு நாட்டுக்கும் குடியுரிமைச் சட்டம் மிக அவசியம். நம் இந்திய தேசத்துக்கும் தேவை. ஆனால், சட்டத் திருத்தம்னு வர்றப்போ அதைப் பரிசீலனை பண்ணணும். இப்போ நம்ம பிரதமர் மோடி ஐயா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐயா இரண்டு பேரும், 'இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கும் வேறு சமூகத்தினருக்கும் எந்தப் பிரச்னையும் வராது'ன்னு உறுதியா சொல்றாங்க. நம்மளை நம்பவும் சொல்றாங்க. 'அவங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டாங்களா? இதை மட்டும் நாம எப்படி நம்புறது?'ன்னு அடுத்த கேள்வி எழும். அதனால், மோடி மற்றும் அமித்ஷா இருவரும், 'சட்டத்திருத்தம்ங்கிறது இதுதான். இந்த விஷயங்களை, இந்த வழியில்தான் திருத்தம் செய்யப்போறோம்'னு மக்களிடம் தெளிவுபடுத்தணும். போராட்டங்கள் பற்றிக் கவலைகொள்கிற மோடி அரசு, அதை எளிமைப்படுத்தி மக்கள்கிட்ட எடுத்துச்சொன்னால் எல்லோருடைய பிரச்னையும் தீரும்."

- ராஜ்கிரண் பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சினிமாக்காரர்கள் வரக்கூடாது என்பது சின்னப்புள்ளத்தனம்!" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actor-rajkiran

"மிஷ்கின் சார்தான் சைக்கோ!" - சிரிக்கிறார் உதயநிதி

"பார்த்ததும் காதல், ஃபாரீன்ல ஒரு சாங், லவ் ஃபெயிலியர், பார்ல ஒரு சாங்னு நடிச்சுட்டு இருந்தது எனக்கே போர் அடிச்சது. அப்போ மக்களுக்கும் போர் அடிச்சிருக்குமே! அதான் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுலயும் `சைக்கோ' ரொம்ப வித்தியாசமா, மிரட்டலா இருக்கும்" புத்தாண்டை நம்பிக்கையுடன் தொடங்கி யிருக்கிறார் `நடிகர்' உதயநிதி. ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் எனச் சுழன்று கொண்டிருந்தவரை, ஓர் இரவில் அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்...

யார் சைக்கோ?

"மிஷ்கின் சார்தான் சைக்கோ (சிரிக்கிறார்). நான் சைக்கோ கிடையாது. சைக்கோவைக் கண்டுபிடிக்கிற கதாபாத்திரம் என்னுடையது. ராஜ்னு ஒருத்தர் சைக்கோவா பண்ணியிருக்காப்ல. அவர் கதாபாத்திரமும், நடிப்பும் நிச்சயம் பேசப்படும். ஒரு உண்மையைச் சொல்லணும்னா, மிஷ்கின்தான் என்னை அறிமுகப்படுத்துறதா இருந்தது. எனக்காக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட்தான் `யுத்தம் செய்.' அது தொடங்குற நேரத்தில்தான் `ஒரு கல் ஒரு கண்ணாடி' ஸ்க்ரிப்டும் வந்தது. முதல் படம் கொஞ்சம் ஜாலியா, கலர்ஃபுல்லா பண்ணலாம்னுதான் `ஓகே ஓகே' பண்ணினேன். ஒருவேளை, `யுத்தம் செய்' என் முதல்படமா வந்திருந்தால் என் கிராஃபே மொத்தமா மாறியிருக்கும்."

"எனக்குள்ளேயும் வடிவேலு, சூரி, சந்தானம் எல்லாரும் இருக்காங்க!" - மனம் திறக்கும் ராஜ்கிரண்

சினிமா - அரசியல், எப்படி பேலன்ஸ் பண்றீங்க?

"முழுநேர அரசியலுக்கு வந்து ஆறுமாசம் ஆகுது. எல்லா விஷயங்களையும் பக்காவா ப்ளான் பண்ணிடுறதுதான் பேலன்ஸ் பண்ணக் காரணம். என்கிட்ட ரெண்டு குழுக்கள் ஒர்க் பண்ணுது. சினிமாவுக்கு ஒரு குழு, அன்பகத்தில் ஒரு குழு. அவங்களுக்குள்ளே ஒரு கோ-ஆர்டினேஷன் இருக்கும். அதனால், பெரிய கஷ்டம் இல்லை. இதுதவிர, முரசொலி நிர்வாக இயக்குநர், படம் விநியோகம்னு மற்ற வேலைகளும் இருக்கும். அதையெல்லாம், இஷ்டப்பட்டுப் பண்ணும்போது சந்தோஷமாவும் இருக்கும்."

- உதயநிதி பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "ரெண்டு முத்தங்கள், சில 'மிஸ் யூ'க்கள்!" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-udhayanidhi-stalin

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு