Published:Updated:

`` `மாஸ்டர்' ஸ்பாட்ல விஜய் சார் ஆல்வேஸ் ஹாப்பிதான்!'' - ரமேஷ் திலக்

ரமேஷ் திலக்

`ஓ மை கடவுளே' படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் சகாவாக ரகளை பண்ணியவர் ரமேஷ் திலக்.

`` `மாஸ்டர்' ஸ்பாட்ல விஜய் சார் ஆல்வேஸ் ஹாப்பிதான்!'' - ரமேஷ் திலக்

`ஓ மை கடவுளே' படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் சகாவாக ரகளை பண்ணியவர் ரமேஷ் திலக்.

Published:Updated:
ரமேஷ் திலக்

"போன வருஷம் இந்த டைம்ல 'கும்பளங்கி நைட்ஸ்' படம் பண்ணிகிட்டு இருந்தேன். இந்த வருஷம் 'ஓ மை கடவுளே' படம் வெளியாகி எல்லா தரப்பு ஆடியன்ஸுக்கும் பிடிச்ச மாதிரி போய்ட்டு இருக்கு. இந்த ரெண்டு படங்களுமே என்னோட கரியர்ல முக்கியமான படங்களா அமைஞ்சதுல ரொம்பவே சந்தோஷம்" எனச் சிரிக்கிறார் ரமேஷ் திலக். 'ஓ மை கடவுளே' படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் சகாவாக ரகளை பண்ணியவர்.

`ஓ மை கடவுளே' படத்தில்...
`ஓ மை கடவுளே' படத்தில்...
`சூது கவ்வும்', `ஆண்டவன் கட்டளை', `நேரம்', `ஆரஞ்சு மிட்டாய்', `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' எனப் பல வெற்றிப்படங்களில் தனது கதாபாத்திரத்தில் வெரைட்டி காட்டியவர் இந்த வருடம் தமிழ், மலையாளம் என நிறைய படங்களில் பிஸி!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்.ஜே-விலிருந்து நடிகரா ஆரம்பிச்ச இந்தப் பயணம் இப்ப எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?

ரமேஷ் திலக்
ரமேஷ் திலக்

"ஜாலியா போய்க்கிட்டு இருக்கு. ஆர்.ஜே-வா வேலை செய்யுறதுக்கு முன்னாடி நிறைய சின்னச் சின்ன வேலைகள் பண்ணிகிட்டு இருந்தேன். அப்பவும் சரி, இப்பவும் சரி ஜாலியாதான் இருக்கேன். நடிப்புல இதை சாதிச்சே ஆகணும்னு எந்த நோக்கமும் இல்லாமதான் உள்ள நுழைஞ்சேன். படங்களுக்கான வாய்ப்பு வரும்போது சின்ன ரோலா, பெரிய ரோலான்னு எல்லாம் பார்க்க மாட்டேன். இதுவரை நான் நடிச்ச படங்கள் எல்லாமே அஞ்சு நிமிஷமே வந்தாலும், எனக்கான முக்கியத்துவம் இருக்கா எனக்குப் பிடிச்சிருக்கான்னு மட்டும்தான் பார்ப்பேன். சில படங்கள் மட்டும் அந்த லைனைத் தாண்டி போயிடும். அதுவுமல்லாம நான் நடிகன் மட்டும்தான், ஹீரோலாம் கிடையாது. ஹீரோவா பண்ணணும்னு ஏக்கமும் எனக்கிருந்ததில்லை. `சின்ன ரோலும் பண்றீங்க, பெரிய ரோலும் பண்றீங்க, எப்படி?'னு பலபேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. எனக்குனு எந்த ஒரு இமேஜும் நான் கிரியேட் பண்ணிக்கலை. நண்பர்கள் கேட்டுக்கிட்டதுக்காகவும் நிறைய படங்கள் பண்ணியிருக்கேன்.

சத்யம் தியேட்டர்ல, ஸ்கிரீன்ல என்னுடைய முகத்தை ஒரு முறை பார்க்கணும்னு சினிமாத்துறையில் எல்லாருக்கும் இருக்கற மாதிரியான ஆசை எனக்கும் இருந்தது. அது நிறைவேறினதுல சந்தோஷம்."

நீங்க குறும்படங்கள்ள நடிக்க ஆரம்பிச்ச சமயத்துல இருந்த இயக்குநர்கள் இப்ப பெரிய திரைக்கான இயக்குநர்களா பார்க்கும்போது எப்படி இருக்கு?

வெங்கட் பிரபுவுடன் ரமேஷ் திலக்...
வெங்கட் பிரபுவுடன் ரமேஷ் திலக்...

"குறும்படங்களை இயக்கிவிட்டு, பெரிய திரைக்கு வந்த இந்த இயக்குநர்கள் ஒரு புது டிரெண்டையே சினிமாவுல தொடங்கி வச்சிருக்காங்கன்னு சொல்லுவேன். எனக்கு சினிமாக்குள்ள நல்ல படங்கள் அமைஞ்சது இந்த இயக்குநர்களாலதான். இவங்க அப்போ இல்லைன்னாலும் நான் படங்கள்ள நடிச்சிருப்பேன். ஆனா, இந்த மாதிரியான நல்ல படங்கள், இப்ப இருக்க ரீச் கிடைச்சிருக்குமா என்பது சந்தேகம்தான். இயக்குநர்கள் நளன், அல்போன்ஸ் புத்திரன் இவங்க மூலமாதான் சினிமால என்னுடைய என்ட்ரி சாத்தியமாச்சு. ஆனா, அதுக்கு முன்னாடி எனக்கு சினிமா சொல்லி தந்த இயக்குநர்கள் வெங்கட்பிரபு சார், சுராஜ் சார், 'பூ' சசி சார், பாண்டிராஜ் சாரும்தான். நான் குறும்படங்கள் பண்ணிகிட்டு இருந்த சமயத்துலயே பாண்டி சார் என்மேல பெரிய நம்பிக்கை வச்சிருந்தார்.

என்னுடைய முதல் படம் 'மாப்பிள்ளை', அடுத்து 'மங்காத்தா'. வசனம் பேசின படம்னா அது 'மெரினா'. அப்புறம் 'நேரம்' பண்ணினேன். ஆனா அதுக்கு முன்னாடி 'சூது கவ்வும்'."

'ஓ மை கடவுளே' படத்துக்கான வாய்ப்பு வந்த கதை?

`ஓ மை கடவுளே' படத்தில்...
`ஓ மை கடவுளே' படத்தில்...

"ஒரு நாள் நைட்டு 11 மணிக்கு, அசோக் செல்வன் கிட்ட இருந்து கால் வந்தது. 'கல்யாணம்னு மட்டும் சொல்லிடாத மச்சான்'னுதான் ஆரம்பிச்சேன். ஏன்னா, எப்பவும் இந்த டைம்ல கால் பண்ண மாட்டான். அப்பதான், 'ஓ மை கடவுளே'ல நான் பண்ணின கேரக்டருக்கு வேற ஒரு ஆர்ட்டிஸ்ட் கமிட்டாகி அவங்க பண்ண முடியாம போனதால, 'பண்ண முடியுமா... ஒரு நாள் கால்ஷீட் வேணும்'னு கேட்டு எனக்கு கால் பண்ணியிருந்தான்.

அடுத்த நாள் கிளம்பி ஸ்பாட்டுக்குப் போனபோது, பக்கத்து கேரவன்ல இருந்து விஜய் சேதுபதி வெளிய வந்தார். `நீ என்ன இங்க பண்ற?'னு அவர் கேட்க, அவரைப் பார்த்து `நீங்க என்ன இங்க பண்றீங்க?'னு நான் கேட்டேன். `நான் ஒரு கடவுள்டா'னு அவர் சொல்ல, `நானும் ஒரு கடவுள்தான்'னு அவரைப் பார்த்து சொன்னேன். ஏன்னா, அதுக்கு முந்தின நாள்தான் `லாபம்' பட ஷூட்ல இருந்தோம். இப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்தா ஏட்டிக்குப் போட்டியா ஜாலியா போகும். 'ஓ மை கடவுளே'க்கான ஷூட் காலைல 10.30-க்கு ஆரம்பிச்சு அடுத்த நாள் காலைல 4.30 வரைக்கும் போச்சு. கொஞ்சம்கூட டயர்டு தெரியாம சேது அண்ணாகூட ஜாலியா போச்சு."

விஜய் சேதுபதிக்கும் உங்களுக்கும் இருக்கிற நட்பு எப்ப ஆரம்பிச்சது?

விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக்
விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக்

```சூது கவ்வும்' படத்திலேயிருந்துதான். ஆரம்ப காலத்துல நான் 'அஸ்தமனம்'னு ஒரு படம் பண்ணினேன். அந்த வாய்ப்பு வந்தது விஜய் சேதுபதி மூலமாதான். அப்போ அவர் நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணிகிட்டு இருந்தார். 'சூது கவ்வும்' படம் சேர்ந்து பண்ணும்போது இதை அவர்கிட்ட சொன்னேன். கேட்டுட்டு, 'அப்டியாடா?'னு சிரிச்சார். அவர் கூட யார் இருந்தாலும் பயங்கரமா கேர் பண்ணி பார்த்துப்பார். அடிக்கடி அவர்கிட்ட லவ் யூ சொல்லிகிட்டே இருப்பேன். அவரும் லவ் யூ சொல்வார். பக்கத்துல இருக்கவங்களாம் எங்களை ஒரு மாதிரி 'யார்ரா இவங்க' என்கிற ரேஞ்சுக்குதான் பார்ப்பாங்க. அவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலேயும் மிஸ் யூஸ் பண்ணிடக் கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். அந்த விஷயம் அவருக்கு என்கிட்ட ரொம்பவே பிடிக்கும்.

அவருக்கு சினிமால இன்னைக்கு இருக்க இடம் நிச்சயம் அவருடைய உழைப்புக்கானது. அவர் சினிமால பரிசோதிச்சு பார்க்கிற ஒவ்வொரு விஷயமும் கூட இருந்து பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு. 'சினிமாவுல இப்ப செஞ்சுகிட்டு இருக்கிறதையும் தாண்டி, அடுத்து என்னதான் பண்ணப்போறார்' என்கிற கேள்வி ஒவ்வொரு முறையும் எனக்கு வந்துகிட்டே இருக்கும். 10 நிமிஷம் அவரை தனியா விட்டீங்கன்னா, ஏதாவது யோசிச்சுகிட்டேதான் இருப்பார். செய்யுற வேலைய சிறப்பா செய்யணும்னு நினைக்கிறவர் அவர். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒழுங்கா நடிக்காம போனதுக்காக பல முறை அவர்கிட்ட திட்டெல்லாம் வாங்கியிருக்கேன்."

'ஓ மை கடவுளே' படத்துல வர மாதிரி வாழ்க்கையில உங்களுக்கு கிடைச்ச கோல்டன் டிக்கெட்?

ரமேஷ் திலக்
ரமேஷ் திலக்

"என்னுடைய மனைவி ஒவ்வொரு முறை மன்னிச்சு எனக்கு தர இரண்டாவது வாய்ப்புதான் என்னுடைய கோல்டன் டிக்கெட்."

'மாஸ்டர்'க்குள்ள என்ட்ரி ஆனது?

ரமேஷ் திலக்
ரமேஷ் திலக்

```தெறி'ல ஆரம்பிச்சு `பிகில்' வரைக்கும் அடுத்தடுத்து அஞ்சு படங்கள் விஜய் சார்கூட பண்ண இருந்தது மிஸ் ஆகிடுச்சு. இப்போ `மாஸ்டர்'ல அது கைகூடி வந்திருக்கு. `மாநகரம்' சமயத்துல இருந்தே லோகேஷ் கனகராஜ் எனக்கு நல்ல பழக்கம். `கைதி'யில் ஒரு ரோல் நான் பண்ண வேண்டியது சில காரணங்களால் அது மிஸ் ஆகிடுச்சு. விஜய் சார் கூட அவர் படம் பண்ண இருக்கார்ங்கிறதை கேள்விப்பட்டதுமே அவர்கிட்ட வாய்ப்பு கேட்டேன்.

இந்தப் படத்துல மட்டும் கிட்டத்தட்ட 17 அஸிஸ்டென்ட் டைரக்டர்ஸ்க்கும் மேல இருக்காங்க. ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் டீம்னு எல்லாமே பெருசு. பசங்க எல்லாரும் தீயா உழைச்சு படத்தை மாஸா கொண்டு வந்திருக்காங்க. ஒவ்வொருவரும் தங்களோட வேலையைப் புரிஞ்சு செய்யுறதுனால இவ்வளவு பெரிய டீமை எடுத்துகிட்டு போறதுங்கிற வேலை லோகேஷ்க்கு ஈஸியா இருக்கு. அதேமாதிரிதான், 'குட்டி ஸ்டோரி'க்கான ஐடியாவை, புரிஞ்சு அதுக்கான ஸ்பாட்லைட்டை லோகி மேல திருப்பி விட்டுருக்கிறதுன்னு தன்னோட டீமுக்கும் லோகேஷ் எப்பயுமே சப்போர்ட்டா இருப்பார். `மாஸ்டர்' படம் அவ்வளவு பாசிட்டிவா, யூத்ஃபுல்லான டீமோட இருக்கு. என்னுடைய போர்ஷனுக்கான ஷூட் முடிஞ்சாச்சு. காலேஜ் கேம்பஸ்க்குள்ள பசங்கள விட்டா எப்படி ஜாலியா இருக்குமோ அப்படிதான் ஷூட்டிங் ஸ்பாட் இருந்தது. படத்துல இப்படித்தான் ஜாலியா வரணும்கிற தெளிவு லோகேஷ் கிட்ட இருக்கு."

விஜய் என்ன சொன்னார்?

ரமேஷ் திலக்
ரமேஷ் திலக்

```ஓ மை கடவுளே' படத்துக்கான டப்பிங்க்குப் போனபோது, அங்க விஜய் சாரை பார்த்துப் பேசினேன். பேசினேன்னு சொல்றதைவிட, அவர் பேசினார் நான் கேட்டேன்னுதான் சொல்லணும். முதல்முறை அவரை நேர்ல பார்த்தபோது, அவரை பார்த்தோம்னு ரிஜிஸ்டர் ஆகுறதுக்கே டைம் எடுத்துருச்சு. அந்த அளவுக்கு பதற்றமா இருந்தேன். 'கும்பளங்கி நைட்ஸ்' படம் பார்த்தேன். நைஸ் வொர்க். நல்லா பண்ணிருக்க'னு சொன்னார்.

அதுக்கப்புறம் 'மாஸ்டர்'ல பார்த்தபோது என்னுடைய போர்ஷனுக்கான ஷூட்டிங் முடியுற வரை தினமும் ஹாய் சொல்லி ஹக் பண்ணாம இருந்தது இல்லை."

'ஒரு வடக்கன் செல்ஃபி', 'கும்பளங்கி நைட்ஸ்'னு மலையாளம், தமிழ் ரெண்டுலயுமே படங்கள் பண்ணிகிட்டு இருக்கீங்களே?

நிவின் பாலியுடன் ரமேஷ் திலக்
நிவின் பாலியுடன் ரமேஷ் திலக்

"மலையாளம் ஓரளவுக்கு பேச வரும். `நேரம்', 'வாயை மூடி பேசவும்' ரெண்டு படங்களுமே தமிழ், மலையாளம்னு பைலிங்குவலா வந்த படங்கள். அந்தப் படங்களே எனக்கு மலையாளத்துல நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தது. 'நேரம்' சமயத்துல இருந்தே எனக்கு நிவின் பாலி நல்ல பழக்கம். அவர் மூலமா வந்த வாய்ப்புதான் 'ஒரு வடக்கன் செல்ஃபி'. அந்த படத்துல என்னுடைய கதாபாத்திரத்துக்கான ஷூட் சென்னைல நடந்தது. அப்புறம் 'கும்பளங்கி நைட்ஸ்'க்கான வாய்ப்பு வந்தது. மலையாள இன்டஸ்ட்ரில எனக்கு நல்லதொரு பெயர் வாங்கி கொடுத்த படம் அது."