Published:Updated:

ஜெய்பீம் விவகாரத்தைத் தொடர்ந்து போஸ்டர் சர்ச்சையில் `சபாபதி' சந்தானம்!

சந்தானம்

``மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. எந்த சமூகம், என்ன மாதிரி ஜாதிய வச்சு படமெடுத்தாலும் அதை பார்க்கற மக்கள், அதை படமா ஒரு பொழுது போக்கற விஷயமா நினைச்சுதான் தியேட்டருக்கு வர்றாங்க. எனவே ஜாதி பத்தி பேசுறது அங்கே தேவைப்படாத விஷயம்.'' - சந்தானம்

Published:Updated:

ஜெய்பீம் விவகாரத்தைத் தொடர்ந்து போஸ்டர் சர்ச்சையில் `சபாபதி' சந்தானம்!

``மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. எந்த சமூகம், என்ன மாதிரி ஜாதிய வச்சு படமெடுத்தாலும் அதை பார்க்கற மக்கள், அதை படமா ஒரு பொழுது போக்கற விஷயமா நினைச்சுதான் தியேட்டருக்கு வர்றாங்க. எனவே ஜாதி பத்தி பேசுறது அங்கே தேவைப்படாத விஷயம்.'' - சந்தானம்

சந்தானம்

ஒரே நாளில் இரண்டு சர்ச்சைகளில் சிக்கிவிட்டார் சந்தானம். ஒன்று அவரது பட போஸ்டர் விவகாரம். இன்னொன்று 'சபாபதி' படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய பேச்சு.

சந்தானம் நடித்த 'சபாபதி', வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதை சர்ச்சையாக்கி வருகின்றனர். மேடையில் அவர் பேசியதாவது..

''ஜெய்பீம்' படத்தை இன்னும் பார்க்கல. எந்தப் படமா இருந்தாலும் எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். ஆனா, அடுத்தவங்கள காயப்படுத்துறது மாதிரி பேசக்கூடாது. இந்து மதம் சூப்பர்னா, அதை சூப்பர்னு உயர்த்திப் பேசலாம். ஆனா, இன்னொரு மதமான கிறிஸ்தவ மதத்தை தாழ்த்திப் பேசக்க்கூடாது. அதான் என்னோட கருத்து. நாம எதை வேணா தூக்கி பேசலாம். மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. எந்த சமூகம், என்ன மாதிரி ஜாதிய வச்சு படமெடுத்தாலும் அதை பார்க்கற மக்கள், அதை படமா ஒரு பொழுது போக்கற விஷயமா நினைச்சுதான் தியேட்டருக்கு வர்றாங்க. எனவே ஜாதி பத்தி பேசுறது அங்கே தேவைப்படாத விஷயம்.'' என சந்தானம் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

சபாபதி பட போஸ்டர்
சபாபதி பட போஸ்டர்

'சபாபதி' படத்தின் போஸ்டர் ஒன்றில் சுவரில் ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ளது. அதில் சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றிருந்ததால் அந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ''போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும்'' என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ''அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு 'சபாபதி' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தானம்
சந்தானம்

இது பற்றி ராமகிருஷ்ணனிடம் பேசினேன். ''அந்த போஸ்டர்ல தண்ணீர் திறந்துவிடக்கோரி' எழுதியிருக்கறக்கு பக்கத்துல 'தண்ணீர் திறந்துவிட்டேன் பாரு'ங்கறது மாதிரி அவர் சிறுநீர் கழிக்கற போஸ் கிண்டல் பண்றது மாதிரி இருக்கு. நகைச்சுவைங்கற பெயர்ல அர்த்தமில்லாம இருக்கு. நாகரிகமில்லாம திணிக்கறதால கண்டிக்கறோம். பொது இடத்துல சிறுநீர் கழிக்கக் கூடாதுனு சட்டம் இருக்கு. அது சட்டப்படியும் தப்பு'' என்றார் ராமகிருஷ்ணன்.

இரண்டு சர்ச்சைக்கள் குறித்து சந்தானம் தரப்பில் விசாரித்தால், ''போஸ்டர் விவகாரம் படம் பார்க்கும்போது உண்மை விளங்கும். எந்த சர்ச்சையான விஷயமும் பேசல. 'சபாபதி' மேடையில் சந்தானம் பேசியதை முழுமையாக கேட்டுப்பாருங்கள். எந்த சர்ச்சையான கருத்தையும் பேசவில்லை. வீணாக கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அவரது பேச்சு சர்ச்சையாக்கப்படுகிறது'' என்கிறது அவர் தரப்பு.