Published:Updated:

"லண்டன்ல `அசுரன்' படம் பார்த்தப்போ... தனுஷ் சார் சொன்ன அந்த விஷயம்..." - `ஜகமே தந்திரம்' சரத் ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜேம்ஸ் காஸ்மோ, சரத் ரவி, தனுஷ்
ஜேம்ஸ் காஸ்மோ, சரத் ரவி, தனுஷ்

'ஜகமே தந்திரம்' திரைப்படத்தில் சரத் ரவியின் கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது. அவரிடம் அப்படத்தின் அனுபவங்களை கேட்டேன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஜகமே தந்திரம்' திரைப்படத்தில் சுருளிக்கும் பீட்டருக்கும் இடையே இருக்கும் மொழிபெயர்ப்பாளராக நடித்து அசத்தியிருந்தார் சரத் ரவி. ஏகப்பட்ட படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த இவருக்கு இந்தப் படமும் கதாபாத்திரமும் ஜாக்பாட் என்றே சொல்லலாம். அவரிடம் 'ஜகமே தந்திரம்' படத்தின் அனுபவங்களைக் கேட்டேன்.

இந்தக் கேரக்டரா எப்படி மாறுனீங்க?

''எனக்கு இந்த மாதிரி கேரக்டர்தான்னு படம் ஆரம்பிக்கிறதுக்கு மூணு மாசம் முன்னாடியே தெரியும். ஸ்கிர்ப்ட் ரீடிங் செஷனெல்லாம் நடந்துட்டு இருந்தது. அப்போதிலிருந்து நிறைய இங்கிலீஷ் பேப்பர் படிக்க ஆரம்பிச்சேன்; நிறைய இங்கிலீஷ் வெப் சீரிஸ் பார்த்தேன். இங்கிலீஷ்ல அதிகம் பேச ஆரம்பிச்சேன். காரணம், சரளமா இங்கிலீஷ்ல டயலாக் பேச வேண்டியிருந்தது. அந்த மேனரிஸம் எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் இன்புட்ஸ் கொடுத்ததுதான். அவரும் ஐடி துறையில இருந்ததனால நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொழிபெயர்ப்பாளர் கேரக்டருக்கு எப்போதும் வெயிட்டேஜ் இருந்திருக்கு. அதே மாதிரிதான் நீங்க நடிச்ச கேரக்டரும். இவ்வளவு பெரிய கேரக்டர் பண்றோம்னு நினைச்சீங்களா ?

'ஜகமே தந்திரம்' டீமுடன் சரத் ரவி
'ஜகமே தந்திரம்' டீமுடன் சரத் ரவி

''இவ்வளவு பெரிய கேரக்டர் பண்றேன், அந்த கேரக்டருக்கு இவ்வளவு வெயிட் இருக்குனு எந்தவொரு ப்ரஷரையும் கார்த்திக் சுப்புராஜ் சார் என் மேல போடவேயில்லை. அவர் என்கிட்ட சொன்னது ஒரேயொரு விஷயம்தான், 'தமிழ்நாட்ல இருந்து லண்டன் போய் ஐடி துறையில வேலை பார்க்கிறவன், லண்டன் வர சுருளிக்கு மொழிப்பெயர்ப்பாளராகவும் இருக்கணும். இந்தக் கேரக்டரை எந்தளவுக்கு சுவாரஸ்யமா பண்றீங்களோ, அந்தளவுக்கு கேரக்டர் வெயிட்டாகும்'னு சொன்னார். பத்து வருஷமா நடிச்சுட்டு இருக்கேன். இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காகதான் காத்திருந்தேன். ஜனகராஜ் சார், டெல்லி கணேஷ் சார்னு நிறைய பேர் இந்த மாதிரி கேரக்டர் பண்ணிருக்காங்க. அந்த லெகஸியை கெடுத்திடக்கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன். தனுஷ் சாருடைய டயலாக்கை தொந்தரவு பண்ணாத அளவுக்கு நான் உடனுக்குடன் மொழிப்பெயர்க்கணும். அந்த டைமிங்ல நான் ரொம்ப கவனமா இருந்தேன். அந்த டைமிங் பிடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனா, தனுஷ் சார் எனக்கு ரொம்ப ஸ்பேஸ் கொடுத்தார்.''

லண்டன்ல ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்தது ?

''லண்டன் போகப்போறோம்னு தெரிஞ்சது ஒரு மாதிரி ப்ளாங்கா இருந்தது. நம்ம வாழ்க்கையில இதெல்லாம் நடக்கணும்னு யோசிச்சு வெச்சிருப்போம். அதெல்லாம் நடக்கவே நடக்காது. ஆனா, நிறைய நேரங்கள்ல நம்ம யோசிக்காதது நடந்திருக்கும். அப்படிதான் இந்தப் பட வாய்ப்பு அமைஞ்சது. 'மாரி'க்கு பிறகு, மறுபடியும் தனுஷ் சார்கூட நடிப்பேன்னு நினைக்கவேயில்லை. லண்டன் போவோம்னு யோசிச்சதேயில்லை. அதனாலதான், இப்போ நான் எதையும் யோசிக்கிறதேயில்லை. என்னதான் முதல்முறை லண்டன் வந்தாலும் அந்த கேரக்டர்ல எப்படி பண்ணப்போறோம்னுதான் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது.''

'அசுரன்' படத்தை லண்டன்ல டீமா படம் பார்த்தீங்களாமே?

சரத் ரவி
சரத் ரவி

''ஆமா. எங்க டீமுக்குனு தனியா ஒரு தியேட்டர்ல 'அசுரன்' படம் பார்க்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. படத்தைக் கொண்டாடி பார்த்தோம். அந்த ரெண்டு மணி நேரம் நம்ம ஊர்ல இருந்த மாதிரியே இருந்தது. அப்போ தயாரிப்பாளர் சசிகாந்த் சார் தனுஷ் சார்கிட்ட, 'இப்போ நீங்க ஊர்ல இருந்தா நல்லாயிருக்குமே... நீங்க வேணா போயிட்டு வாங்க'னு சொன்னார். அதுக்கு, 'எப்போவும் சக்சஸை தள்ளி வெச்சுதான் பார்க்கணும். ஃபெய்லியரைதான் பக்கத்துல வெச்சு பார்க்கணும். சக்சஸ்கிட்ட இருந்தால் அதுக்கு போதையாகிடுவோம். அதனால, இங்க இருக்கிறதுதான் நல்லது'னு சொன்னார். எனக்கு அதெல்லாம் பெரிய பாடமா இருந்தது. அவருடைய எண்ணமெல்லாம் தொலைநோக்கு பார்வையோடுதான் இருக்கும்.''

தனுஷ் கூட பயணிச்சது எப்படி இருந்தது ?

''ரொம்ப பாசிட்டிவான நபர். எந்தவொரு நெகட்டிவிட்டியும் அவரை நெருங்கவே முடியாது. அவர் செட்ல இருந்தார்னா, அவருடைய பாசிட்டிவிட்டி எல்லோருக்கும் கிடைக்கும். நான் டேக் அதிகமா எடுத்துக்கிட்டா, பக்கத்துல வந்து, ஊக்கப்படுத்தி 'என்னாச்சு? சூப்பரா பண்ணுவீங்களே! டைம் எடுத்து ரிலாக்ஸா ஜாலியா பண்ணுங்க'னு சொல்லுவார். அவர் பேசி முடிச்சதும், 'அட ஆமா... நம்ம சூப்பரா பண்ணுவோமே'னு நமக்கே தோணும். ரொம்ப மரியாதையாதான் எல்லார்க்கிட்டேயும் பேசுவார். படம் ரிலீஸானவுடன் தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லிட்டு, 'நல்லா பண்ணிருக்கீங்க. கலக்குங்க'னு சொன்னார். படம் வந்த பிறகு, அவரே போன் பண்ணி பேசணும்னு அவசியமே இல்லை. ஆனா, பண்ணார்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு