Published:Updated:

`குடும்பத்தையே வர வச்சிட்டாங்க!' - ஷூட்டிங் ஸ்பாட்டில் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய சரவணன்

நடிகர் சரவணன் தனது மகனின் பிறந்த நாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார்.

saravanan with radhika
saravanan with radhika

'பிக் பாஸ்' ஷோவிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டாலும், நடிகர் சரவணனுக்கு அந்த ஷோவுக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

saravanan
saravanan

தற்போது தேனியில் 'மருத' என்கிற படத்தின் படப்பிடிப்பில் இருக்கிற சரவணனின் மகன் தீரஜ் கிர்த்திக்கிற்கு நேற்றைய தினம் (அக்டோபர் 14) பிறந்த நாள். படக்குழு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தீரஜ்ஜின் பிறந்த நாளைக் கொண்டாடியது. சரவணனிடம் பேசினோம்.

 “நான் எப்பவுமே இப்படித்தாங்க!” - நடிகர் சரவணன்

``பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணா இயக்கி ஹீரோவா நடிக்கிற படம் `மருத'. இசை இளையராஜா. நானும் ராதிகாவும் அண்ணன் தங்கச்சியா நடிச்சிருக்கோம். தேனி சுற்றுவட்டாரத்துல ஷூட்டிங் தொடங்கி நடந்திட்டிருக்கு. இந்தச் சூழல்லதான் பையனோட பிறந்தநாள் வந்தது.

`குடும்பத்தையே வர வச்சிட்டாங்க!' - ஷூட்டிங் ஸ்பாட்டில் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய சரவணன்

பையனோட பிறந்த நாள் அன்னைக்கு நிச்சயம் நான் அவனுடன் இருக்கணும்னு சொன்னதால, குடும்பத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வச்சிட்டாங்க. அங்கேயே ராதிகா முன்னிலையில கேக் வெட்டிக் கொண்டாடினோம். சில வருடங்களா சினிமாவுல இருந்து ஒதுங்கியிருந்த மாதிரி ஒரு ஃபீலிங் இருந்தது. இந்தச் சூழல்ல என் வாழ்க்கையில மறுபடியும் ஷூட்டிங் பரபரப்பு தொடங்கிடுச்சுன்னு நினைக்கிறேன்' என்று புன்னகைத்தார் சரவணன்.