Published:Updated:

“ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”

சதீஷ்
பிரீமியம் ஸ்டோரி
சதீஷ்

டைரக்டர் சிவா சார், ரஜினி சார் படம் பண்றார்னு அறிவிப்பு வந்த அன்னிக்கு, அவரை வாழ்த்த போன் பண்ணினேன். ‘தெறிக்க விடுங்க சார்’னு சொன்னேன்.

“ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”

டைரக்டர் சிவா சார், ரஜினி சார் படம் பண்றார்னு அறிவிப்பு வந்த அன்னிக்கு, அவரை வாழ்த்த போன் பண்ணினேன். ‘தெறிக்க விடுங்க சார்’னு சொன்னேன்.

Published:Updated:
சதீஷ்
பிரீமியம் ஸ்டோரி
சதீஷ்

“இந்த தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். தலைவரோட நான் நடிச்ச ‘அண்ணாத்த’ வெளியாகுது. அன்னிக்குத்தான் என் மகள் நிகாரிகாவின் முதல் பிறந்தநாள். ‘அண்ணாத்த’வை அவளோட பிறந்த நாள் கிஃப்ட் ஆகவும் நினைச்சுக்கலாம். இன்னொரு சிறப்பு, ‘நாய் சேகர்’ மூலம் ஹீரோவாகியிருக்கேன்’’ - சந்தோஷத்தில் சதீஷ்.

“நிறைய கதைகளில் லீடு ரோல்ல நடிக்கக் கேட்டு வந்தாங்க. அந்த டைம்ல லவ் சீன்லேயும், எமோஷனல் சீன்லேயும் என்னால நடிக்க முடியுமான்னு ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு. ‘நாய்சேகர்’ இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் கதையைச் சொன்னதும், உடனே சம்மதிச்சேன். முதல் மூணு நாள் படப்பிடிப்பு முடிஞ்சதும், அதை எடிட் பண்ணி எங்க தயாரிப்பாளர்கள்கிட்ட காட்டினாங்க. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சாருக்கு என்மீது பெரிய நம்பிக்கை வந்துடுச்சுபோல. என்னைக் கூப்பிட்டு ‘ஹீரோவாகிட்டீங்க சதீஷ்’னு சந்தோஷமா சொன்னார். இது ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட். நாய்தான் முதல் ஹீரோன்னு சொல்லலாம். எனக்கு ஜோடியா பவித்ரா லட்சுமி நடிச்சிருக்காங்க. எங்க ரெண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரியைவிட, எனக்கும் இன்னொரு ஹீரோவான நாய்க்குமான கெமிஸ்ட்ரி செமையா ஒர்க்கவுட் ஆகியிருக்கு.’’

 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”
 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”

``அதுசரி, ‘நாய் சேகர்’ டைட்டில்ல ஏன் இவ்ளோ பிடிவாதமா இருந்தீங்க..?’’

‘‘2019-ல எனக்குக் கல்யாணமாச்சு. அதிலிருந்து அஞ்சாவது நாள், கிஷோர் இந்தக் கதையைச் சொன்னார். ஸ்கிரிப்ட்லேயே ‘நாய் சேகர்’னு தான் வச்சிருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பும் ஓகே ஆனதும், டைட்டில் ஞானவேல்ராஜா சார்கிட்ட இருந்தது தெரிய வந்துச்சு. அவர்கிட்ட ‘டார்லிங், இந்தக் கதைக்கு உங்க டைட்டில் தாங்க’ன்னு கேட்டதும், ‘வச்சுக்குங்க டார்லிங்’னு சொல்லி என்.ஓ.சி கொடுத்துட்டார். கடந்த மே மாசம் 23-ம் தேதி என் பிறந்தநாள் அன்னிக்கு இந்த டைட்டிலோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட இருந்தோம். அப்ப, கொரோனா ரெண்டாவது அலை இருந்ததால, போஸ்டர் வெளியிடல. அதன்பிறகு இப்ப நாங்க வெளியிட நினைக்கும்போதுதான், வடிவேலு சார் மறுபடியும் நடிக்கப்போறதா செய்திகள் வந்துச்சு. நாங்க முழுப்படமும் முடிச்சிட்டு, கதைக்குப் பொருத்தமான ஒரு டைட்டிலை வச்சிருக்கோம். நாங்க ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடி அவங்க கேட்டிருந்தா, கண்டிப்பா இந்த டைட்டிலைக் கொடுத்திருப்போம். நான் வடிவேலு சாரின் ரசிகனா பார்க்கும்போது, எனக்குமே அவர்தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனா, என் படத்தை முடிச்சிட்டோம். அதான் இந்தப் பிடிவாதம்.’’

 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”
 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”
 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”

``அடுத்து சன்னி லியோனோட நடிக்கிறீங்க போல..?’’

‘‘ஆமாங்க. அந்தப் படமும் ஷூட் முடியப்போகுது. ‘சிந்தனை செய்’ யுவன் இயக்கியிருக்கும் படம், ‘ஓ மை கோஸ்ட்.’ இது பக்கா ஹாரர் காமெடி. டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருக்கேன். இதுல எனக்கு ஜோடியா சன்னி லியோனும், தர்ஷா குப்தாவும் நடிச்சிருக்காங்க. ஹீரோ ஆனாலும் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன்.’’

 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”
 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”
 “ஹீரோ ஆனாலும் காமெடியனா தொடர்வேன்!”

`` ‘அண்ணாத்த’ ரஜினி என்ன சொல்றார்?’’

‘‘டைரக்டர் சிவா சார், ரஜினி சார் படம் பண்றார்னு அறிவிப்பு வந்த அன்னிக்கு, அவரை வாழ்த்த போன் பண்ணினேன். ‘தெறிக்க விடுங்க சார்’னு சொன்னேன். அதுக்கு சிவா சாரும் ‘ஆமா சார், உங்க ரோலும் சூப்பரா வந்திருக்கு. நீங்களும் நடிக்குறீங்க. கதை எழுதும்போதே, உங்களையும் மனசுல வச்சுதான் எழுதினேன்’னு சொன்னார். அந்த ஆச்சரியத்தோட நடிக்கப் போனேன். ரஜினி சாரோட இருந்த இருபது நாள்களும் மறக்க முடியாதவை. அவரைப் பத்தி பலரும் ஆச்சரியமா சொல்லும் போதே சிலிர்க்கும். ஆனா, அவரே அப்படிப்பட்ட தகவல்களை நம்மகிட்ட பகிர்ந்துகிட்டார்னு நினைக்கறப்ப, மகிழ்ச்சியா இருக்கு.’’