Published:Updated:

``வாழைப்பழ காமெடியோட அதே ஃபார்முலாதான் 'மாப்ள இவருதான்'க்கும்; ஆனா?"- செந்தில் #21YearsOfPadayappa

செந்தில்

`படையப்பா' வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடிகர் செந்தில் பேசியது...

``வாழைப்பழ காமெடியோட அதே ஃபார்முலாதான் 'மாப்ள இவருதான்'க்கும்; ஆனா?"- செந்தில் #21YearsOfPadayappa

`படையப்பா' வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடிகர் செந்தில் பேசியது...

Published:Updated:
செந்தில்

தமிழ் சினிமாவில் என்றும், எல்லோருக்கும் ஃபேவரைட் என்ற லிஸ்டில் நிச்சயமாக `படையப்பா' படத்திற்கு இடமுண்டு. 'படையப்பா' படத்திற்குப் பின்னால் பல கதைகள் இருந்தாலும் இந்த முறை அதில் அழகேசன் என்ற கேரக்டரில் நடித்த செந்திலிடம் அந்தப் பட அனுபவங்களைக் கேட்டறிந்தோம். கூடவே, கொரோனாவால் நிலவிவரும் தற்போதய சூழல் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

`` 'படையப்பா' படம் வெளியாகி 21 வருஷம் ஆகிடுச்சுனு என்னால நம்பவே முடியல. வருஷங்கள் ரொம்ப வேகமா ஓடுது. ஏற்கெனவே ரஜினி சார் படங்கள்ல நடிச்சிருக்கேன். இந்தப் படத்துலயும் நடிக்கக் கூப்பிட்டதும் ஓகே சொல்லிட்டேன். அவருடைய ஃபிரண்டா அழகேசன்ங்கிற கேரக்டர்ல நடிச்சிருப்பேன். ரஜினி சார் மட்டுமல்ல சிவாஜி சார் கூடவும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். இந்தப் படத்துல குறிப்பா, `மாப்ள இவருதான். ஆனா, அவர் போட்டிருக்கிற சட்டை என்னுது' இந்தக் காமெடி ரொம்ப பேசப்பட்டுச்சு. `இந்த சீன் ரொம்ப பெரிசா இருக்கே குறைச்சிடலாம்'னு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சார் சொன்னார். ஆனா, ரஜினி சார்தான் `இந்த சீனுடைய லெங்த்தை குறைச்சிட்டா காமெடி வொர்க் அவுட் ஆகாது, இப்படி இருந்தாதான் நல்லாயிருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும்'னு இயக்குநர்கிட்ட சொன்னார். அப்புறம்தான் நீங்க பார்க்குற அந்த சீன் உருவாச்சு."

படையப்பா
படையப்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அந்த சீன்ல ரஜினி சாரோட டைமிங் அருமையா இருக்கும். அவரோட ஹ்யூமர் சீன் நிறைய சூப்பரா வொர்க் அவுட் ஆகுறதுக்கு அவருடைய டைமிங்தான் காரணம். `கரகாட்டக்காரன்' படத்துல வந்த வாழைப்பழ காமெடியும் ஒரே வசனத்தையே மறுபடியும் மறுபடியும் பேசியிருப்போம். அதுக்கு இன்னைக்கும் செம ரெஸ்பான்ஸ் இருக்கு. அதே மாதிரி இந்தக் காமெடியிலயும் `மாப்ள இவருதான். ஆனா, அவர் போட்டிருக்கிற சட்டை என்னுது'னு ஒரே வசனம்தான் மறுபடியும் வந்துக்கிட்டே இருக்கும். சில காமெடிகள் வொர்க் அவுட் ஆகணும்னா ரொம்ப நேரம் அந்த சீன் இருக்கணும். அந்த ரக காமெடிதான் இது. நல்லா ஞாபகமிருக்கு, இந்த சீனுக்குத் தியேட்டர்ல பயங்கர கைத்தட்டல். `படையப்பா மேன் ஆஃப் தி பவர்னா இந்த அழகேசன் மேன் ஆஃப் தி ப்யூட்டி', `லேடீஸ் கேக்குறாங்கல்ல சொல்லு சொல்லு'னு சின்னச் சின்ன வசனங்களும் அந்தக் காமெடியில பேசப்பட்டது. எல்லாத்துக்கும் காரணம், இயக்குநர்தான். பேசுறது மட்டும்தான் நம்ம வேலை. எல்லா க்ரெடிட்டும் ரவிகுமார் சாருக்குதான்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ரஜினி சார் ஸ்பாட்டுக்கு வந்துட்டார்னா ரொம்ப கலகலப்பா இருக்கும். ஷூட்டிங் போறதே தெரியாது. எல்லோரும் செம ஜாலியா இருப்பாங்க. ரஜினி சார் எந்தளவுக்கு ஜாலியா இருப்பாரோ அதேயளவுக்கு அந்த சீனை எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருப்பார். அவருக்கான சீன் எடுக்கப்போறதா இருந்தா டைரக்டர் அவரைத் தனியா கூட்டிட்டு போயிடுவார். ரஜினி சார்கூட இருக்கிறவங்களுக்கு நடிக்க முழு சுதந்திரம் கொடுப்பார். ரஜினி சாருக்கு அப்ப என்ன மவுசு இருந்துச்சோ அதே மவுசு இப்ப வரைக்கும் இருக்கு. அதை அப்படியே மெயின்டெயின் பண்ணிட்டிருக்கார். இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது."

படையப்பா
படையப்பா

``சிவாஜி சார், மணிவண்ணன் சார், நாசர், ரம்யா கிருஷ்ணன்னு எல்லோருக்கும் ரொம்ப அருமையான கேரக்டர்கள் கிடைச்சது. சிவாஜி சார் என்கிட்ட தனிப்பட்ட முறையில நல்லா பேசுவார். அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். ரம்யா கிருஷ்ணனோட நீலாம்பரி கேரக்டரை யாராலயும் மறக்க முடியாது. முதல் முறையா சொந்தக் குரல்ல பேசினாங்கன்னு நினைக்கிறேன். செளந்தர்யா அருமையான நடிகை. ஸ்பாட்ல அவங்க உண்டு, அவங்க வேலை உண்டுனு இருப்பாங்க. இப்ப அவங்க நடிச்ச படங்களைப் பத்தி அவ்ளோ பேசுறோம். ஆனா, அவங்க இல்லை. இத்தனை வருஷம் கழிச்சு பேசுற அளவுக்கு அருமையான படத்துல நடிச்சது ரொம்பத் திருப்தியா இருக்கு. உங்கக்கிட்ட `படையப்பா' பத்தி பேசும்போது எனக்குப் பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்து அந்தப் படத்தைப் பார்க்கணும்னு தோணுது" என்று மகிழ்ச்சியாகச் சொன்னவரிடம் `அருணாச்சலம்' படம் பற்றியும் கேட்டோம்.

அதற்கு, `` 'அருணாச்சலம்' படத்துலயும் எனக்கு சின்ன கேரக்டர்தான். கிரேஸி மோகனும் நானும் `மாப்ள சொல்றதை செய்'னு பேசிக்கிட்டே இருப்போம். கிரேஸி மோகன் அருமையான ரைட்டர். அவர் இறந்ததுக்கும் வர முடியலை. அப்ப மலேசியாவுல இருந்தேன். அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. வெத்தலை பாக்குதான் அடிக்கடி போடுவார். ரொம்ப ரொம்பத் திறமைசாலி. அதுல நடிச்ச விசு சாரும் இப்ப இல்லை. அவருக்கு அவ்ளோ நண்பர்கள். ஆனா, யாருமே போக முடியாத சூழலாகிடுச்சு" என்று வருத்தப்பட்டவர் கொரோனா பற்றி பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உலகத்தையே இந்த கொரோனாங்கிற வைரஸ் அச்சுறுத்திக்கிட்டிருக்கு. யாரும் வீட்டைவிட்டு வெளியே போகாதீங்க. அரசாங்கம் சொல்றதைக் கேளுங்க. இப்ப இருக்கிற சின்ன பசங்க சொன்னா கேட்க மாட்றாங்க. அமெரிக்காவுல ஒரு புலிக்கே வந்திடுச்சுனு சொல்றாங்க. நம்ம ஊர்லயும் மிருகங்களுக்கும் வருதுனு சொல்றாங்க. பால், இறைச்சினு சாப்பிடுறதுக்கே பயமா இருக்கு. அமெரிக்காவே நம்மகிட்ட மருந்து வாங்கியிருக்காங்க. சீக்கிரமா நம்ம நாட்டுல கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிருவாங்க. யாரும் பயப்பட வேண்டாம். காலரா, சிக்கன் குனியா, ப்ளேக்னு என்னென்னவோ நோய் வந்திருக்கு. அப்ப எல்லாம்கூட இந்த மாதிரியான சூழல் இல்லை. எல்லா தொழிலும் பயங்கரமா பாதிச்சிருக்கு."

படையப்பா
படையப்பா

``நான் வீட்லேயே பேப்பர் படிச்சிட்டு, டிவி பார்த்திட்டிருக்கேன். டிவி இருக்கிறதுனால ஏதோ பொழுது போயிடுது. எல்லோரும் அவங்க அவங்க மனைவி, குழந்தைகள்கூட இருங்க. பிரிஞ்சிருக்கிற குடும்பங்கள் எல்லாம் இதன் மூலமா ஒண்ணு சேரும்னு நினைக்கிறேன். டாக்டர்கள், செவிலியர்கள், கார்ப்பரேஷன்ல வேலை பார்க்குறவங்க, போலீஸ்காரங்க, ஈ.பில இருக்கிறவங்கனு இந்தச் சூழல்லயும் நமக்காக வேலை செய்ற எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். ஊரடங்கு அமல்படுத்துறதுக்கு முன்னாடி ஒரு நாலு நாள் கொடுத்து எல்லோரையும் `அவங்க அவங்க ஊருக்கு போறதா இருந்தா போயிடுங்க'னு சொல்லியிருந்தா மத்த மாநிலங்கள்ல யாரும் மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு. எல்லோரும் தனித்திருங்க, விலகியிருங்க, வீட்டிலேயே இருங்க" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism