Published:Updated:

`` `கனகா கையைப் பிடிச்சு இழுத்தவன் போறான் பாரு'னு சொன்னாங்க!" - சந்தான பாரதி ஷேரிங்ஸ்

சந்தான பாரதி

`` `உதிரிப்பூக்கள்' படம் பார்த்துட்டு ராத்திரி எனக்குத் தூக்கமே வரல. `இதைவிட நல்ல படம் எப்படி எடுக்கிறது'னு இருந்தது. எங்க காலத்துல இயக்குநர்களிடைய நல்ல புரிதலுடன் போட்டி இருக்கும். அது ஒரு கோல்டன் ப்ரீயட்!'' - என்கிறார், இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி.

`` `கனகா கையைப் பிடிச்சு இழுத்தவன் போறான் பாரு'னு சொன்னாங்க!" - சந்தான பாரதி ஷேரிங்ஸ்

`` `உதிரிப்பூக்கள்' படம் பார்த்துட்டு ராத்திரி எனக்குத் தூக்கமே வரல. `இதைவிட நல்ல படம் எப்படி எடுக்கிறது'னு இருந்தது. எங்க காலத்துல இயக்குநர்களிடைய நல்ல புரிதலுடன் போட்டி இருக்கும். அது ஒரு கோல்டன் ப்ரீயட்!'' - என்கிறார், இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி.

Published:Updated:
சந்தான பாரதி

`பன்னீர் புஷ்பங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், சந்தான பாரதி. கமல் நடித்த `குணா', `மகாநதி' உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். பிறகு, நடிகராகவும் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சந்தனா பாரதி
சந்தனா பாரதி

இயக்கிய, நடித்த படங்கள், கமல்ஹாசனுடனான நட்பு, `கரகாட்டக்காரன்' பட அனுபவம், மகன் சஞ்சய் பாரதி இயக்கவிருக்கும் படம்.. எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இளமை ஊஞ்சலாடுகிறது' படத்துக்காக இளையராஜா, ரஜினி, கமலை அந்தப் படத்துக்குள்ளே கொண்டு வந்தது நீங்கதானாமே?!

இயக்குநர் ஶ்ரீதர்கிட்ட நான் உதவி இயக்குநரா வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். கண்ணதாசன் சார்தான் என்னை அவர்கிட்ட சேர்த்துவிட்டார். என்கூட சேர்ந்து பி.வாசுவும் ஶ்ரீதர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தார். அந்த நேரத்துல `இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தை இயக்குற ஐடியாவுல ஶ்ரீதர் சார் இருந்தார். படத்தோட கதையை வாசுகிட்டேயும், என்கிட்டேயும் சொல்லிட்டு, ஹீரோக்களா ஶ்ரீகாந்த் - சிவகுமார் நடிச்சா நல்லாயிருக்கும். இசை எப்போவும்போல எம்.எஸ்.வின்னு சொன்னார். உடனே நான், `சார் எல்லோரும் பழைய ஆள்களா இருக்காங்க. கமல், ரஜினியை நடிக்க வைக்கலாம்'னு சொன்னேன். `ரஜினி யாரு'னு கேட்டார். `புதுசா வந்திருக்கார்; நல்லா நடிக்கிறார்'னு சொன்னேன். அதுமட்டுமல்லாம, இசையமைப்பாளரா இளையராஜாவைக் கமிட் பண்ணலாம்னு சொன்னேன்.

`எம்.எஸ்.விக்கும், எனக்குமான பழக்கம் எத்தனை வருடங்கள் தெரியுமா..'னு கோபப்பட்டார். 'இதுக்குத்தான் சின்ன பசங்களைப் பக்கத்துல வெச்சுக்கக் கூடாது. ரெண்டுபேரும் வெளியே போங்க'னு அனுப்பிட்டார். நாங்களும் வந்துட்டோம். பிறகு, ரெண்டுநாள் கழிச்சு டைரக்டர் கார் அனுப்பி எங்களைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கார். அங்கே போனா, இளையராஜா சாரும், கங்கை அமரனும் உட்கார்ந்து மியூசிக் கம்போஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அமரன் என்னைப் பார்த்து, `வா உள்ளே'னு சொல்லிச் சிரிக்கிறார். இப்படிதான் இந்தப் படத்துக்காக ஶ்ரீதர் புதிய கூட்டணியை அமைச்சார். படமும் ஹிட் ஆச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தான பாரதி
சந்தான பாரதி

``நீங்களும், பி.வாசுவும் இணைந்து இயக்கிய `பன்னீர் புஷ்பங்கள்' படத்துல பிரதாப் போத்தன் கேரக்டரில் நடிக்க முதலில் கமல்கிட்டதான் பேசுனீங்களாமே?!"

``அந்தக் கதையையே கமல் சாரை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். அவர்கிட்ட கதையும் சொன்னேன். `ஓகே பண்ணலாம்'னு சொல்லியிருந்தார். ஆனா, அந்தச் சமயத்துல கமல் சார் பிறமொழிப் படங்களில் பிஸியா இருந்ததனால, அவரால நடிக்க முடியல. அதுக்குப் பிறகுதான் பிரதாப் போத்தன் படத்துல கமிட் ஆனார்."

`` `கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்துல பாடலே இருக்காது. அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு முயற்சி ஏன்?"

``பொதுவாவே எனக்குப் படங்களில் பாட்டு வைக்கிறது பிடிக்காது. படத்தோட தொடர்ச்சியை அது கெடுக்கும்னு ஃபீல் பண்ணுவேன். நான் நிறைய வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். `கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்துக்காக இளையராஜா சார்கிட்ட பேசிட்டிருந்தப்போ, `படத்துல எத்தனை பாட்டு'னு கேட்டார். `பாட்டே இல்லை'னு சொன்னேன். `அப்புறம் எதுக்குய்யா என்கிட்ட வந்த'னு கேட்டார். `ரீ-ரெக்கார்டிங் இருக்கே சார்'னு சொன்னேன்."

பன்னீர் புஷ்பங்கள்
பன்னீர் புஷ்பங்கள்

``கமல்ஹாசனின் பல படங்களுக்குத் தாமதமான அங்கீகாரம்தான் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும். `குணா', 'மகாநதி' படங்களுக்கும் அப்படித்தான். அது பற்றி?"

``நானும், கமலும் 60 வருடமா நண்பர்கள். காபி ஷாப்ல உட்கார்ந்து மணிக்கணக்கில் ரெண்டுபேரும் கதைகள் பேசுவோம். எந்தப் படத்தின் ஷூட்டிங்கா இருந்தாலும், முடிச்சுட்டு நேரா என்னைப் பார்க்க வந்திடுவார். எஸ்.வி.சேகர், ராதாரவி, கமல் சார் எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சினிமா பற்றிப் பேசிக்கிட்டே இருப்போம். லேட்டானாலும், அவருடைய அத்தனை படங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இப்போ இருக்கிற இளைஞர்கள் `குணா', `மகாநதி' படங்களைப் பற்றிப் பேசுறது சந்தோஷம்தான். குப்பையில தூக்கிப்போடமா இருக்காங்களேனு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன்."

``மறைந்த கிரேஸி மோகனுடன் பல படங்களில் வொர்க் பண்ணியிருக்கீங்க. அவரைப் பற்றி?"

``கமல்தான் கிரேஸி மோகனை எனக்கு அறிமுகப்படுத்தினார். `அபூர்வ சகோதரர்கள்' படத்துக்கு அவர் வசனம் எழுதுறப்போ, பழக்கம். பிறகு, நான் இயக்கிய `சின்ன மாப்பிள்ளை' படத்துக்கு கிரேஸிதான் வசனம் எழுதினார். படத்துக்குக் கதை எழுதியவர், கலைமணி. அவர் அப்போ பிஸியா இருந்ததனால, வசனத்துக்காக கிரேஸி மோகன்கிட்ட போனேன். ஒரு வாரத்துல வசனத்தை எழுதிக் கொடுத்துட்டார். அந்தப் படத்தோட வெற்றிக்கு, கிரேஸியின் வசனம் முக்கியமான காரணம். சின்ன குழந்தை மாதிரி, வீட்டை விட்டு வெளியே வர யோசிப்பார். `சின்ன மாப்பிள்ளை' படத்தோட ஷூட்டிங் கோபிசெட்டிபாளையத்துல நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவரைக் கூப்பிட்டப்போ, வரவே மாட்டேன்னு அடம் பிடிச்சார். பிறகு, `வியட்நாம் காலனி' படத்துக்கும் அவர்தான் வசனம்."

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

``கமல்கூட 60 வருடத்துக்குமேல பழகுறீங்க. `இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காமப் போச்சே'னு நீங்க நினைக்கிற விஷயம் எது?"

``கமல்ஹாசனின் முக்கியமான படங்களில் நானும் இருந்திருக்கேன். ஆனா, `அன்பே சிவம்' படத்தை இயக்குற வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்னு நினைச்சேன்; சுந்தர்.சி சார் இயக்கிட்டார். ஆனாலும், அந்தப் படத்துல எனக்கு ஒரு நல்ல ரோல் கிடைச்சது சந்தோஷம்."

`` `கரகாட்டக்காரன் 2' பற்றி?"

``கங்கை அமரன் `கரகாட்டக்காரன்' படம் எடுத்தப்போ, அவரைப் பார்க்க ஆபீஸுக்குப் போயிருந்தேன். எனக்கு டிரெஸ் தைக்க அளவெடுத்தார், தையல்காரர். `எனக்கெதுக்குப்பா எடுக்கிற'னு கேட்டேன். `டைரக்டர்தான் எடுக்கச் சொன்னார்'னு சொன்னார். கங்கை அமரனைக் கேட்டேன், `நீதான் படத்தோட வில்லன்'னு சொல்லிட்டார். இப்படிதான் இந்தப் படத்துல நடிக்க வந்தேன். என்ன கதைன்னே தெரியாம நடிச்ச அந்தப் படம், பட்டிதொட்டியெல்லாம் ஹிட். நான் எங்கே போனாலும் `கனகா கையைப் பிடிச்சு இழுத்தவன் போறான் பாரு'னு சொல்வாங்க. எனக்கு ஒரு நடிகனா பெரிய அடையாளத்தைக் கொடுத்த படம் அது. கங்கை அமரன் `கரகாட்டக்காரன் 2' பற்றிச் சொன்னார், பார்ப்போம்."

கங்கை அமரன்
கங்கை அமரன்

``உங்களுடைய மகன் சஞ்சய் பாரதி `தனுசு ராசி நேயர்களே' படம் மூலமா இயக்குநரா அறிமுகம் ஆகிறார். எப்படி ஃபீல் பண்றீங்க?"

``அவர் கதையை எழுதி முடிச்துமே என்கிட்ட கொடுத்து படிச்சுப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன்; நல்லாயிருந்தது. எந்தக் கரெக்‌ஷனும் சொல்லல. ஏன்னா, அந்தக் கதையில நான் ஏதாவது கரெக்‌ஷன் சொன்னா, கதையோட முழு வடிவமே மாறலாம். மத்தபடி, அவருக்கு டைரக்‌ஷன் பற்றி நல்லா தெரியும். இயக்குநர் விஜய்கிட்ட உதவி இயக்குநரா வொர்க் பண்ணியிருக்கார். இந்தப் படத்துல எனக்கும் ஒரு கேரக்டர் இருக்குனு சொல்லியிருக்கார்."

சஞ்சய் பாரதி
சஞ்சய் பாரதி

நடிகர், இயக்குநர் சந்தான பாரதியின் முழுமையான பேட்டியை கீழ்கண்ட வீடியோவில் பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism