Published:Updated:

`நான் பா.ஜ.க எதிர்ப்பாளரா?' - ட்வீட் அரசியல் பின்புலம் பகிரும் நடிகர் சித்தார்த்

ஒரு குடிமகனா தவறாம ஓட்டு போடுறேன், வரி கட்டுறேன். இந்த ரெண்டு விஷயத்தைச் சரியா செய்றதால, எந்த அரசையும் திட்டுற அதிகாரம் எனக்கு இருக்கு.

Siddharth
Siddharth

ஒரு படம் எந்த அளவுக்கு ரசிகர்களைத் தொடர்புபடுத்துதோ, அந்த அளவுக்கு ஒரு கமர்ஷியல் படம் சுவாரஸ்யமா இருக்கும். 'சிவப்பு மஞ்சள் பச்சை'யில் அந்த சுவாரஸ்யம் கண்டிப்பா இருக்கும்!" என்கிறார், சித்தார்த். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k0fc4d

" 'லைலா' வெப் சீரிஸில் நீங்க நடிச்ச கதாபாத்திரம் பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாதிரி இருந்ததே?"

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கதை அரசியல் கதை கிடையாது. ஒரு நாவலை அடிப்படை யாக வெச்சு எடுக்கப்பட்டது. தீபா மேத்தா அதை அடிப்படையா வெச்சுத்தான் திரைக்கதை எழுதியிருக்காங்க. எந்த அரசியலையும் நாங்க கதையில சொல்லல. எந்த அரசா இருந்தாலும், லிமிட்டே இல்லாமப் போயிட்டிருந்தா, எந்த மாதிரியான உலகம் உருவாகும்னு இந்த வெப் சீரிஸ்ல சொல்லியிருந்தோம். படத்துல வர்ற நாட்டின் பெயர்கூட 'இந்தியா' கிடையாது.

இப்போ இருக்கிற அரசாங்கம் 'எப்போ பார்த்தாலும் எங்களைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க'ன்னு சொன்னா, நாம எப்படி நடந்துக்கிறோம்னு சம்பந்தப்பட்ட அரசு யோசிக்கணும்

மத்தபடி, பா.ஜ.க-வோடு சில விஷயங்கள் பொருந்திப்போறதுக்கு நாங்க எதுவும் பண்ண முடியாது. நாங்க யாரையும் குறிப்பிட்டு எதுவும் பண்ணல. எந்த மொழிப் படமா இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தா பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். என் மெயின் மார்க்கெட் தமிழ் சினிமாதான். என்னால பண்ணமுடியாத சில ரோல்கள், இங்கே எடுக்க முடியாத சில கதைகள் இந்தியில் எடுத்துக்கிட்டிருக்காங்க. சீக்கிரமே தமிழிலும் இது மாதிரியான கதைகள், ரோல்கள் வரும்."

"உங்க ட்விட்டர் பதிவுகள் நேரடியாகவே 'சித்தார்த் பா.ஜ.க-வுக்கு எதிரானவர்' என்ற தோற்றத்தைத் தருதே?"

siddharth
siddharth

"ஒரு குடிமகனா தவறாம ஓட்டு போடுறேன், வரி கட்டுறேன். இந்த ரெண்டு விஷயத்தைச் சரியா செய்றதால, எந்த அரசையும் திட்டுற அதிகாரம் எனக்கு இருக்கு. ஒரு விஷயம் பிடிக்கலைன்னா, சொல்றதுக்கு உரிமை இருக்கு. என்னைச் சுத்தியிருக்கிற அநியாயத்தைப் பார்க்கிறப்போ, '1924-ல் இருந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு தெரியுமா'ன்னு என்னால ஆரம்பிக்க முடியாது. என் விமர்சனம் நடைமுறையில் இருக்கிற ஒண்ணு. அதனால, இப்போ இருக்கிற அரசாங்கம் மட்டுமே தப்பு பண்ணுதுன்னு அர்த்தம் கிடையாது. தவிர, நான் கடந்த ஐந்து வருடமா மட்டுமே கருத்து சொல்லிக்கிட்டு இல்லை. சின்ன வயசுல இருந்தே சொல்றேன்.

இப்போ இருக்கிற அரசாங்கம் 'எப்போ பார்த்தாலும் எங்களைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க'ன்னு சொன்னா, நாம எப்படி நடந்துக்கிறோம்னு சம்பந்தப்பட்ட அரசு யோசிக்கணும். நீங்க எவ்வளவு திட்டினாலும் நாங்க அதைக் கண்டுக்க மாட்டோம்னு இருந்தா, அது நம்ம தலைவிதி. நான் எந்தவொரு கட்சியிலும் சேர்ந்து என் கருத்தைச் சொல்லல. எனக்கு இருக்கிற கருத்துச் சுதந்திரத்தை வெச்சுச் சொல்றேன். ஒருத்தரை மட்டும்தான் நான் குறை சொல்றேன்னு சொல்றது, என் புத்திசாலித்தனத்தைத் தரக்குறைவா விமர்சிக்கிற மாதிரி இருக்கு. நான் அவ்வளவு முட்டாள் கிடையாது. ஜனநாயகத்துக்கு முக்கியமான விஷயம் எதிர்க்கட்சி. அப்படி ஒண்ணு இல்லாமப்போயிட்டா, ஆள்றவங்க கடவுள் ஆகிடுவாங்க. கடவுளைத் திட்ட முடியாதுங்கிறதால, யாருக்கும் கருத்துச் சுதந்திரம் இல்லாமப்போயிடும்."

> இயக்குநர் சசி உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்?

> டிராஃபிக் போலீஸ் கேரக்டரில் நிறைய பன்ச் பேசி நடிச்சிருக்கீங்களே, அந்த கேரக்டர் கொடுத்த அனுபவம்?

> உங்களுக்கு இருந்த 'சாக்லேட் பாய்' இமேஜ் இப்போ உடைஞ்சிருக்குன்னு நினைக்கிறீங்களா?

- இந்தக் கேள்விகளுக்கு, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாக பதிலளித்திருக்கிறார் நடிகர் சித்தார்த். அந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க > "சாக்லேட் பாய் என்றால் கூச்சம்!" https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-siddharth

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/